30 லட்சத்திற்குமேல் பகிரப்பட்ட கொடைக்கானல் ராப் பாடல்...

"கொடைக்கானல்" என்ற வார்த்தையை சொன்னதுமே ஜில் என்ற குளிச்சியும், பசுமையான இடங்கள் ,விதவவிதிமான பூக்களுமாக நினைவுக்கு வரும். ஆனால் கொடைகானலை கொஞ்சம் கொஞ்சமாக  அழித்துவரும் ஒரு கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
             20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மூடப்பட்ட இந்துஸ்தான் லீவர் -தெர்மா மீட்டர் தயாரிக்கும் நிறுவனம் 1983 ல் கொடைகானல் மலைப்பகுதியில் துவங்கப்பட்டது. புதிதாக வேலை கிடைக்கிறதே என்ற சந்தோசத்தில் அந்த நிறுவனத்தில் பலர் வேலைக்கு போனார்கள்.தெர்மா மீட்டர்  தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாதரசத்தை இந்துஸ்தான் லீவர்  முறையான பாதுகாப்புடன் அதைக் கையாளவில்லை.
அங்கு வேலை பார்த்த ஊழியர்களின் உடல் மேல் படிந்த பாதரசம் அவர்களை முழுவதுமாக உருக்குலைத்தது. அவர்கள் உடல், ஆடை வழியாக வீட்டையும் சென்றடைந்த பாதரசம், குடும்பத்தாரையும் பாதித்தது’ என்பது குற்றச்சாட்டு. பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சூழலியல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பிக்க… 2001-ல் நிறுவனம் மூடப்பட்டது ஆனால், இன்றும் அதன் கழிவுகள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. மக்களும் உருக்குலைந்து கிடக்கின்றனர். கடந்த 14 ஆண்டுகளாக அத்தொழிற் சாலையின் முன்னாள் ஊழியர்களும் சூழலியல் ஆர்வலர்களும், அம்மக்களுக்கு நஷ்டஈடு தரும்படியும் கழிவுகளை அப்புறப்படுத்தும்படியும் போராடிவருகின்றனர். ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர்’ நிறுவனமோ தான் நடத்திவந்த பாதரசத் தொழிற் சாலையினால் அதன் ஊழியர்களுக்குச் சுகாதாரக்கேடு ஏதும் விளையவில்லை என வாதிட்டது.
இத்தகைய சூழலில், 2015 ஆகஸ்ட் 6-ம் தேதி ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர்’ நிறுவனத் தலைவர் பால் போமேன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொடைக்கானலில் பாதிப்புக்குத் தீர்வுகாண யூனிலீவர் பல ஆண்டுகளாக இடைவிடாது செயல்பட்டுவருகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
              இதற்கு காரணம் ஒரு ராப்பாடல்... 30 ஜூலை 2015 அன்று யூடியூபில் வெளியான இரண்டு நிமிட ராப் இசைப் பாடல் ஒன்று. ‘கொடைக்கானல் வோன்ட்’ எனும் இப்பாடல், கடந்த இரு வாரங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வோன்ட்’ - ராப் பாடல்

           


           சோஃபியா என்ற இளம் பெண் ராப்,பரதநாட்டியத்தையும் இணைத்து கொடைக்கானல் வோன்ட்’ பாடலை எழுதி பாடி நடித்துள்ளார். இசையை  மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு பாடல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விடிவை ஏற்படுத்து தருவது சந்தோசமான செய்தி... போராடுவதற்கு இன்னொரு ஆயுதம் கிடைத்திருக்கிறது
கொடக்கானலின் ஜில்லென்ற குளிச்சிக்கிடையே இப்படியொரு கொடுமை....

மேலும் முழுமையான தகவலுக்கு...
போராடுவதற்கு இன்னொரு ஆயுதம்
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Yarlpavanan said…
சிறந்த பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/