ஹெல்மேட் படுத்தும் பாடு?????

எங்கு பார்த்தாலும் ஹெல்மேட் தலைகள் தெரியத்து வங்கியி ருக்கின்றன. நாளுக்கு நாள் ஹெல்மேட் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது வரை ஹெல்மேட் வாங்காதவர்கள் கூட  வாங்க துவங்கி விட்டார்கள். இந்த ஹெல்மேட் கட்டாயம் எத்தானவது முறை என்று தெரியவில்லை? இந்த முறை கொஞ்சம் அதிகமாக பில்டப்  செய்யப்பட்டு பயமுறுத்துதல் அதிகரித்து வருகிறது. ஜூலை 1ம் தேதி ஹெல்மெட் போடனுமாம், போடாவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படுமாம் என்ற பேச்சு தமிழகம்முழுவதும் கேட்கிறது.
       ஹெட்மேட் அணிவது குறித்து சில கோக்கு மாக்குகேள்விகளை கேட்கிறார்கள்

     1. ஒரிஜினல் ஜ.எஸ்.ஜ ஹெல்மேட் எது?
    2. பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தேவை  முன்னாள் அமர்ந்தால் தேவையில்லையா?
    3. உடல்நிலை சரியில்லாத நபரை ஹெட்மேட் அணியவைத்து அழைத்து செல்லமுடியுமா?
    4. புதிய ஹெல்மேட் வாங்கிய ரசீது (பில்- bill) காண்பிக்க வேண்டும் என்பது சரியா?
    5.சாலைவிபத்துகள் அதிகரிக்க ஹெல்மேட் அணியாமல் இருப்பதுதான் காரணமா?
    6. விலையில்லா கிரைண்டர் ,மிக்ஸி போல விலையில்லா ஹெல்மேட் கொடுக்கலாமே?

இப்படி இன்னும் பல கேள்விகள் எழுப்பபடுகின்றன?
  அதிலும் குறிப்பாக ஓட்டுபவர் மட்டுமல்ல பின்னால் அமர்ந்திருப்பவரும் அணியவேண்டுமாம் என்பதே அதிகம் விவாதிக்கப்படுகிறது.இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் தலைக்காயம் ஏற்படாமல் இருக்க தலைக்கவசம் அவசியமே.இரு சக்கர வாகனம் மூலம் நடைபெறும் விபத்தும், அதனால் ஏற்படும் மரணங்களுக்கும் தலைக்கவசம் அணியாதது மட்டும்தான் காரணம் என்று கூறமுடியாது.
என்னை பொருத்தவரை ஹெட்மேட் அணியாமல் விபத்து எற்படுவதை விட மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் அதிகம் விபத்துகளும் சாவும் எற்படுகிறது.
 டீ கடைகளை விட அதிகமாக  டாஸ்மாக கடைகளை திறந்துவிட்டிருக்கிறது தமிழக அரசு., மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால், தனது சுய கட்டுப்பாட்டை இழந்து, அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகமாக உள்ளது.இந்த நிலையில்தான் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது ஒரு நெருக்கடியாகத் திணிக்கப்பட்டுள்ளது.ஹெல்மெட் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது சந்தையில் வெளியாகும் தலைக்கவசங்கள் தரமற்றவை மட்டுமல்ல, அதனை அணிவதால் வெளியில் என்ன நடக்கிறது என்பதேதெரிவதில்லை.இதனால் விபத்துகள்அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகபெரும்பாலானவர்கள் கருதுகின்றார்கள். எனவே தீர்ப்பில் கூறப்பட்டதுபோல் நிபுணர்களைக் கொண்ட குழு அமைத்து பொருத்தமான தலைக்கவசங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள தரமற்ற தலைக்கவசங்கள் கூட பலமடங்கு விலை உயர்ந்துள்ளது. தலைக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும் லாபம் அடைவதற்கும் அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கும்தான் 1ம் தேதிக்குள் என்கிற கெடு உதவிசெய்யும். காவல்துறையின் கெடுபிடியும், சில இடங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளை அராஜகமாக மிரட்டுவதும் இப்போதே துவங்கிவிட்டது.
ஆண்டுக்கு 70 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பெரும் நிறுவனங்களின் லாப வெறியால் ஆண்டுக்கு சாலைகளுக்கு 70 லட்சம் வாகனங்கள் வரும் போது, அதனை சமாளிக்கும் வகையில் சாலை வசதிகள் இல்லை. இதனால் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேரும் அவசரத்தில் ஏற்படும் போட்டிகள். இதனால் ஏற்படும் விபத்துகள் ஏராளம்.சாரல் மழை பெய்தாலே குண்டும் குழியுமாக மாறி பல சாலைகள் பயணம் செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தும் விதத்தில் இருக்கின்றன.
இதில்செல்லும் வாகனங்கள் அதில் ஏற்படும் திடீர் பழுதுகள் கூட வாகன விபத்து ஏற்பட காரணமாக அமைகிறது.
ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகளே பயன்படுத்தவேண்டுமென்றும், சாலையோரங்களில் விற்கப்படும் ஹெல்மெட்டுகள் பாதுகாப்பற்றவை என்ற பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது.கடைகளில் விற்கப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் ஒரிஜினல் ஐஎஸ்ஐ முத்திரைப் பதிக்கப்பெற்ற தரமான ஹெல்மெட்டுகள் தானா என்பதை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளோ, காவல்துறையோ தெளிவுபடுத்தவில்லை.
ஹெல்மெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐ முத்திரை ஒரிஜினல் முத்திரைதான் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பது யார்?ஜூலை 1-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்பவரின் ஹெல்மெட் தரமற்றது என காவல்துறை கூறி அபராதமோ, அல்லது ஓட்டுநர் உரிமத்தையோ பறித்துக்கொண்டால் அதற்கு யார் பொறுப்பு?காவல்த்துறை பதில் சொல்லுமா?

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

உண்மையிலே ஏகப்பட்ட சந்தேகங்கள்...
  • நான் காதலுக்காக வழக்காடுகிறேன்
    14.02.2012 - 1 Comments
    வானவில்லை நீங்கள் தண்ணீர் தூறலில் தரிசித்திருப்பீர்கள் அந்த…
  • இனம் டீஸர் + சந்தோஷ்சிவன் தகவல்
    10.03.2014 - 1 Comments
    கன்னத்தில் முத்தமிட்டால் துவங்கி இலங்கையை களமாக கொண்டு பல படங்கள் வந்து விட்டன. இயக்கனரும்,…
  • ரஜினி, கமல் - நினைத்தாலே இனிக்கும் டிஜிட்டல் வேடம் பூண்டு திரைக்குவருகிறது
    24.07.2012 - 4 Comments
    ரஜினி, கமல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. இருவரும் இணைந்து இனி நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். இருப்பினும்…
  • கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
    06.08.2020 - 1 Comments
                     இந்த கேள்வி பல காலமாக கேட்கபடும் கேள்வி…
  • மனம் விட்டு சிரிக்க தெரியுமா உங்களுக்கு?....
    19.04.2013 - 2 Comments
    இதுக்கெல்லாம் டிரைனிங்கா போகமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்மில் எல்லோருமே மனம் விட்டு…