தமிழகத்தின் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ க்கள், மேயர்கள், எம்.பி.க்கள்,அமைச்சர்கள், இவர்கள் போக வட்டச்செயலாளர்கள்,தொகுதி செயலாளர்கள் எல்லோரும் ஆர்.கே. நகரை சுற்றிசுற்றி வருகிறார்கள். அதிகாரம்,பணம் பாய்கிறது, ஆனால் இந்த முறை ஆர்.கே நகர் வாசிகளுக்கு குறைவாகவே பணம் கிடைக்குமாம்? என்என்றால் கம்யூனிஸ்டகளை தவிர வேறு பெரிய போட்டியில்லை,கம்யூனிஸ்டகள் டெபாசிட் வாங்கமாட்டார்கள் அது தோழர்களுக்கே தெரிந்த விஷயம் தான். கம்யூனிஸ்டகளுக்கு தேவையில்லாத வேலை???
இடைத்தேர்தலை நேர்மையாக சந்தித்த இரண்டு அரசியல் தலைவர்களும் இந்தியாவில் அதுவும் கேரளா,தமிழ்நாட்டில்...!!!!!
1957 அப்போது கேரளத்தின் முதலமைச்சர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உலகத்திலேயே புரட்சியின் மூலமாக அல்லாமல் மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கம்யுனிஸ்ட் முதலமைச்சர் இ.எம்.எஸ்.கேரள மாநிலத்தைச் சேர்ந்த தேவிகுளம் பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் இடம் காலியானது. ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒற்றை உறுப்பினர் மெஜாரிட்டியில்தான் இ.எம்.எஸ். அமைச்சரவை கேரளத்தில் பதவியில் இருந்தது.கம்யூனிஸ்ட் வேட்பாளராக ரோசம்மாபுன்னூஸ் நிறுத்தப்படுகிறார். இவர் தேர்தலில் ஜெயித்தால்தான் இ.எம்.எஸ்சின் கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவியில் நீடிக்க முடியும்.ஆனாலும் இ.எம்.எஸ். கம்பீரமாக இப்படி அறிவிக்கிறார்: “தேவிகுளம் பீர்மேடு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதலமைச்சராகிய நானோ, எனது அமைச்சரவை சகாக்களோ செல்லமாட்டோம். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் அந்த தொகுதி வாக்காளர்கள் மட்டும்தான்.”அந்தத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரோசம்மாபுன்னூஸ் அமோக வெற்றி பெற்றார்.இப்படியும் இஎம்எஸ் நம்யூதிரிபாட் போன்ற ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருந்திருக்கிறார்.
அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஒரு பழைய ஜீப்பில் ஏறி வேலூருக்குத் தனியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் காமராஜர்.குடியாத்தம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வி.கே.கோதண்டராமன் என்பவர் காமராஜரை எதிர்த்து நிற்கிறார்..
தான் போட்டி இடுகிற குடியாத்தம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு எந்த ஒரு அமைச்சரும், அதிகாரிகளும் வரக் கூடாது என்றார். உதவிக்கு அவர் எப்போதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிற வைரவன் மட்டும்தான்.குடியாத்தம் தொகுதியில் தனது திறந்த ஜீப்பில் கிராமம், கிராமமாகச் சென்று ஓட்டுக் கேட்டார். அப்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். நான் இங்கே முதலமைச்சராக வரவில்லை. ஒரு வேட்பாளராக மட்டுமே வந்திருக்கிறேன். அதனால் நீங்கள் என்னிடம் மனு கொடுப்பது தவறு. நான் மனு வாங்குவதும் தவறு என்று கூறி மறுதார் காமராஜர்.அந்த மக்களிடம் காமராஜர் திருப்பிக் கேட்டார்:
இங்கே கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஓட்டுக் கேட்க வந்தால் இதே மாதிரி மனு கொடுக்காவா செய்வீர்கள்? கடைசி வரை குடியாத்தம் தொகுதி மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் அளிக்க மறுத்தார் காமராஜர்.விடியற்காலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை ஒரு பழைய ஜீப்பில் ஒவ்வொரு கிராமமாக குடியாத்தம் தொகுதி முழுக்கவும் சுற்றிச் சுற்றி வந்தார் காமராஜர்.ஒவ்வொரு நாள் இரவிலும் அவருடைய பிரச்சாரம் எங்கு முடிகிறதோ அந்த ஊரில் உள்ள காங்கிரஸ்காரர் வீட்டில் இரவு உணவு உண்டு தூங்கினார் காமராஜர்.
“கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் அப்பழுக்கற்றவர். மக்களை நேசிப்பவர். என்னைப் பற்றியும் உங்களுக்கே தெரியும். அனைத்தையும் யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள்” என்று பல ஊர்களில் பெருந்தன்மையாக பேசி காமராசர் ஓட்டு சேகரித்ததாக காமராஜரின் உதவியாளர் வைரவன் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றையத் தேர்தல் நடைமுறைகளை அவற்றோடு ஒப்பிட்டுத்தான் பார்க்க முடியுமா?-
தொகுப்பு
செல்வன்
Comments