சூர்யா படத்தின் மாஸ் கதையும் பேய் சம்பந்தபட்டது என்கிறார்கள். யாமிருக்க பயமே ... என்ற படம் முக்கிய நடிகர்கள் இல்லாமலேயே பேயின் தயவில் வெற்றியடைந்தது. அதே போல ராகவேந்திரா லாரன்ஸ் காஞ்சனா,இப்போதும் காஞ்சனா -2 ( காஞ்சனா -3 வரும் போல) இப்படி இல்லாத பேயை மூலதனமாக வைத்து சினிமாக்காரர்கள் கல்லாக்கட்டுகிறார்கள் அந்த வரிசையில் சூர்யாவின் மாஸ் கதையும் பேய் கதை என்கிறார்கள்.
சூர்யா உடன் தான் இணைந்து தரவிருக்கும் படம் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான் என்பதை வெங்கட் பிரபுவும் ஏற்கனவே உறுதி செய்திருக்கிறார்.
இதற்கிடையில் இந்த படத்தின் கதை பற்றிய ரகசியம் கசிந்திருக்கிறது.
சூர்யா எங்கு போனாலும் அவரை சிலர் பின் தொடர்கிறார்கள்.
கடுப்பாகிற சூர்யா, அவர்களிடம் ‘நீங்கள்லாம் யாரு? ஏன் என்னை ஃபாலோ பண்றீங்க ?’ என்று கேட்கிறார்.
பின் தொடர்பவர்களிடம் பதில் இல்லை.
ஒரு கட்டத்தில் கடுப்பாகும் சூர்யா, தன் நண்பர்களிடம் இது பற்றி சொல்கிறார்.
“என்னை சிலர் பின் தொடர்ந்து வர்றாங்க. ஏன்னு கேட்டா காரணம் சொல்ல மாட்டேங்கிறாங்க.”
என்று புலம்ப,
“அவனுங்களை எங்கக்கிட்ட காட்டுப்பா.. மத்ததை நாங்க பாத்துக்குறோம்….”
என்று வீரமாகக் கிளம்புகிறார்கள்.
அவர்களை தன் நண்பர்களுக்கு காட்டுகிறார் சூர்யா.
என்ன கொடுமை இது?
சூர்யாவின் கண்களுக்கு மட்டும் தெரிகிற அவர்கள் சூர்யாவின் நண்பர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை.
‘ஒருத்தனையும் காணோமே….கனவு கினவு கண்டியா?’
என்று நண்பர்கள் சூர்யாவை நக்கல் அடிக்க,
‘அதோ அங்கதான் நிக்கிறாங்க’ என்று சூர்யா கை காட்டுகிறார்.
சூர்யாவுக்கு என்னவோ ஆயிருச்சு என்று கலைகிறது நண்பர்கள் கூட்டம்.
மாஸ் டிரைலர்
பின்னர் புரிகிறது சூர்யாவுக்கு.
தன்னைப் பின்தொடரும் அவர்கள் மனிதர்கள் அல்ல, ஆவி என்பது.
அவர்கள் எல்லாருமே ஏதோவொரு பிரச்சனையால் சாந்தியடையாத ஆத்மாக்கள் என்பதை புரிந்து கொள்கிறார்.
‘உங்களுக்கு என்னதான் வேணும்’ என்று அவர்களிடம் கேட்கிறார்.
அவர்கள் தங்கள் பிரச்சனையை சொல்கின்றனர்.
ஆவிகளுடன் நட்பாகிறார் சூர்யா.
ஆத்மாக்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் கேட்டு அவற்றை சால்வ் செய்கிறார் சூர்யா.
எல்லா பேய்ப்படங்களையும் போலவே ஆத்மா சாந்தியடைந்ததும் சந்தோஷத்தோடு மேலே போகிறார்கள் ஆவிகள்.
கண் கலங்க அவர்களை வழி அனுப்பி வைக்கிறார் சூர்யா!
பொதுவாக பேய்கதைகளின் அடிப்படையே பழிவாங்குவதுதான். உயிரோடு இருக்கும் போது தன்னையும்,தன் குடும்பத்தையும் கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதைகள் தான் பேய்கதைகள். காஞ்சனா படத்தில் அடுத்தவர்களின் உடலில் பேய் புகுந்து கொண்டு பழிவாங்கும் ... மாஸ் படத்தில் பேய்கள் சூர்யாவிடம் நேரிடையாக வே பேசி டீல் செய்கின்றன.
இந்தக்கதையைப் போல் ஆயிரத்து சொச்சம் படங்கள் வெளிவந்துவிட்டனவே என்கிறீர்களா? எவ்வளவோ பேயை பார்த்துட்டோம் மாஸ் பேயையும் பாப்போமே...
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
சூர்யா உடன் தான் இணைந்து தரவிருக்கும் படம் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான் என்பதை வெங்கட் பிரபுவும் ஏற்கனவே உறுதி செய்திருக்கிறார்.
இதற்கிடையில் இந்த படத்தின் கதை பற்றிய ரகசியம் கசிந்திருக்கிறது.
சூர்யா எங்கு போனாலும் அவரை சிலர் பின் தொடர்கிறார்கள்.
கடுப்பாகிற சூர்யா, அவர்களிடம் ‘நீங்கள்லாம் யாரு? ஏன் என்னை ஃபாலோ பண்றீங்க ?’ என்று கேட்கிறார்.
பின் தொடர்பவர்களிடம் பதில் இல்லை.
ஒரு கட்டத்தில் கடுப்பாகும் சூர்யா, தன் நண்பர்களிடம் இது பற்றி சொல்கிறார்.
“என்னை சிலர் பின் தொடர்ந்து வர்றாங்க. ஏன்னு கேட்டா காரணம் சொல்ல மாட்டேங்கிறாங்க.”
என்று புலம்ப,
“அவனுங்களை எங்கக்கிட்ட காட்டுப்பா.. மத்ததை நாங்க பாத்துக்குறோம்….”
என்று வீரமாகக் கிளம்புகிறார்கள்.
அவர்களை தன் நண்பர்களுக்கு காட்டுகிறார் சூர்யா.
என்ன கொடுமை இது?
சூர்யாவின் கண்களுக்கு மட்டும் தெரிகிற அவர்கள் சூர்யாவின் நண்பர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை.
‘ஒருத்தனையும் காணோமே….கனவு கினவு கண்டியா?’
என்று நண்பர்கள் சூர்யாவை நக்கல் அடிக்க,
‘அதோ அங்கதான் நிக்கிறாங்க’ என்று சூர்யா கை காட்டுகிறார்.
சூர்யாவுக்கு என்னவோ ஆயிருச்சு என்று கலைகிறது நண்பர்கள் கூட்டம்.
மாஸ் டிரைலர்
பின்னர் புரிகிறது சூர்யாவுக்கு.
தன்னைப் பின்தொடரும் அவர்கள் மனிதர்கள் அல்ல, ஆவி என்பது.
அவர்கள் எல்லாருமே ஏதோவொரு பிரச்சனையால் சாந்தியடையாத ஆத்மாக்கள் என்பதை புரிந்து கொள்கிறார்.
‘உங்களுக்கு என்னதான் வேணும்’ என்று அவர்களிடம் கேட்கிறார்.
அவர்கள் தங்கள் பிரச்சனையை சொல்கின்றனர்.
ஆவிகளுடன் நட்பாகிறார் சூர்யா.
ஆத்மாக்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் கேட்டு அவற்றை சால்வ் செய்கிறார் சூர்யா.
எல்லா பேய்ப்படங்களையும் போலவே ஆத்மா சாந்தியடைந்ததும் சந்தோஷத்தோடு மேலே போகிறார்கள் ஆவிகள்.
கண் கலங்க அவர்களை வழி அனுப்பி வைக்கிறார் சூர்யா!
பொதுவாக பேய்கதைகளின் அடிப்படையே பழிவாங்குவதுதான். உயிரோடு இருக்கும் போது தன்னையும்,தன் குடும்பத்தையும் கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதைகள் தான் பேய்கதைகள். காஞ்சனா படத்தில் அடுத்தவர்களின் உடலில் பேய் புகுந்து கொண்டு பழிவாங்கும் ... மாஸ் படத்தில் பேய்கள் சூர்யாவிடம் நேரிடையாக வே பேசி டீல் செய்கின்றன.
இந்தக்கதையைப் போல் ஆயிரத்து சொச்சம் படங்கள் வெளிவந்துவிட்டனவே என்கிறீர்களா? எவ்வளவோ பேயை பார்த்துட்டோம் மாஸ் பேயையும் பாப்போமே...
செல்வன்
Comments