படுகொலை செய்யப்பட்ட வலைப்பூ எழுத்தாளர்

தனது வலைப்பூவில் மதச்சார்பின்மை, அறிவியல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துகளை எழுதிவந்த வலைப்பூ எழுத்தாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமைப் பெற்றவரான அவிஜித் ராய் சென்ற மாதம் புத்தகக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தாக்கா சென்றிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் மனைவி ராஃபிதா போன்யா அகமதுவும் மோசமாக காயமடைந்திருந்தார்.
தற்போது பாதுகாப்பான இடம் ஒன்றிலிருந்து பிபிசிக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
"அறிவுபூர்வமான தெளிவுடன் நாத்திகத்தை ஏற்றவர் என் கணவர். அறிவியலையும், மதச்சார்பின்மையையும் வளர்ப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வந்தவர். நாங்கள் நம்புகின்ற விஷயங்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் நான் மறுபடியும் நிச்சயம் குரல் கொடுப்பேன். அவிஜித் எந்த லட்சியத்துக்காக உயிர் விட்டாரோ, அதே லட்சியத்தை நான் முன்னெடுப்பேன். நான் நிச்சயம் வாய்மூடி இருக்கமாட்டேன்."
தனக்கு ஏற்பட்ட காயங்களில் இருந்து தான் மெதுவாகத்தான் குணமடைந்துவருவதாகவும், நடந்த தாக்குதல் பற்றி தனக்கு அவ்வளவாக ஞாபகம் இல்லை என்றும் அவர் கூறினார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்தபோதுதான், தான் தாக்கப்பட்டுள்ளதையே ராஃபிதா உணர்ந்துள்ளார். அவருக்கு தலையில் கத்திக் குத்துக் காயம் இருந்ததையும், கையில் மிக ஆழமான வெட்டுக்காயம் இருந்ததையும், ஒரு கையில் கட்டை விரலை தான் இழந்திருந்ததையும் அவர் உணர்ந்தார்.
'முக்தோ மோனா' அதாவது தடையற்ற சிந்தனை என்ற பெயரில் அவிஜித் நடத்திய வங்க மொழி வலைப்பூவில் மதச்சார்பின்மை, அறிவியல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துகளை எழுதிவந்ததால் அவரது குடும்பத்துக்கு ஏற்கனவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
தாக்குதலுக்கு சில நாட்கள் முன்பாக அவிஜித் ராய் எழுதிய ஒரு ஃபேஸ்புக் பதிவில் அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் நிரூபிக்க முடியாத அனைத்து நம்பிக்கைகளை நிராகரிப்பதுதான் நாத்திகம் என்று கூறியிருந்தார்.
 இந்த  பேஸ்புக் பதிவிற்காக்  கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி கசாப்புக் கடை கத்திகளுடன்  வந்த மததீவிரவாதிகள்  அவிஜித் ராய் படுகொலை செய்திருக்கிறார்கள்.

தகவல் பிபிசி தமிழ்
தொகுப்பு. செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

வேதனையான செய்தி...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
Yarlpavanan said…
இந்தத் துயரம்
இனியும் வேண்டாம்