மீனவர்கள்,விரட்டியடிப்பு, வலையை அறுத்தெரிந்து தாக்குதல்.... இப்படி தினம் தினம் செய்திகளில் அடிபடுகிற மீனவர்களின் வாழ்க்கை துயரமான ஒன்று... உயிரை பணயம் வைத்து செய்கிற தொழிலில் கிடைக்கிற கூலி மிகமிக குறைவு... 6 வயதில்துவங்குகிற மீனவ சிறுவனின் வாழ்க்கை கடைசி வரை சிக்கலான ஒன்று. செய்தித்தாள்களில் படிப்பதை விட அவர்களை நெருங்கி அவர்களில் தின சரி வாழ்க்கையை பார்த்தால் பல சுவரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. 11 வயதில் மீன் பிடிக்க போய் 58 வயதில் சொந்தமாக படகு வாங்கிய மீனவரின் சோகக்கதை ...
ராமேசுவரம் தனுஸ்கோடி பகுதியில் நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதியில் வாழும் மீனவர்கள் தாங்களின் குழந்தைகளை சிறுவயதிலேயே மீன்பிடி சம்பந்தமான தொழிலை
கற்றுகொடுத்து வருவதை அப்பகுதியில் சென்று நேரில் பார்த்தபோதுதான் மீனவரின் உண்மையான வாழ்க்கையையும்,வாழ்வாதரங்கள் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.கடல் அலையின் சீற்றத்தில் உயிரை பணயை வைத்து படகுகளில் சென்று கடலில் வலைகளை விரித்து மீன்கள் சிக்கி கொண்டதா என இரவு முழுவதும் கண்விழித்து பார்த்து பிடிபட்ட மீன்களை வலையுடன் கரைக்கு மீனவர்கள் கொண்டு வருகின்றர்.தந்தையின் உழைப்பை அறிந்த மீனவர்களின் குழந்தைகள் விபரம் தெரிந்த 6 வயதிலேயே தந்தை கொண்டுவந்த வலைகளில் சிக்கிய மீன்களை வலைகளை சேதப்படுத்தாமல் அறிவோடு அழகாக பிரித்து எடுக்கும் முறையை பார்த்தால் பார்ப்பவர்களின் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.அது மட்டும் மல்ல கடலில் வரக்கூடிய மீன்களை பள்ளிக்கு சென்று தெரிந்து கொள்ளாமல் இனம் வாரியாக பெயர்களை கூறும்போது மீனவ குழந்தைகளின் அறிவு திறமைகள் குறித்து நம்பலால் அப்போதுதான் உணர முடிகிறது.குழந்தைகள் மட்டும் மல்ல பெண்களும் மீன்பிடித்தொழிலை கற்றுக்கொண்டு கணவனின் உழைப்பில் பகிர்ந்து கொள்ளும் காட்சியை பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சியடையும் நிகழ்வு மனதில் தோன்றுகிறது.எங்களால் கூட எதையும் சாதிக்கு முடியும் என்பதை நிறுபிக்கும் வகையில் மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலில் சென்று மீன்பிடி வலைகளை விரித்துவிட்டு வலையின் ஒருபாகத்தின் கயிரை கரைக்கு கொண்டு வந்து பல மணி நேரத்திற்கு பின்னர் கடலில் விடப்பட்ட வலைகளை மீன்களோடு சேர்த்து இழுக்கும் முறையை பெரும்பான்மையான மீனவ பெண்கள் செய்து வருகின்றனர்.இந்த மீன்பிடித்தொழில்தான் கரைவலை மீன்பிடி தொழில் என கூறப்படுகின்றன.நவீன காலத்தில் எந்த இயந்திர முறைகள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமலும்,பயன்படுத்த விருப்பம் இல்லாமல் கைகளின் உழைப்பை மட்டு நம்பி கடலோர ஓசையின் நடுவில் கடல் தண்ணீரிலிருந்து வலைகளை இழுக்கும்போது சோர்வு அடையாமல் இருக்க மீனவ பெண்களின் கோரஸாக பாடும் இனிமையான பாடல்களை கேட்பவர்களுக்கு ஒரு சில நிமிடங்கள் தன்னை மறந்து நின்றுவிடுவார்கள்.அப்படிப்பட்ட இந்த மீன்பிடி தொழிலில் வரக்கூடிய கரைவலை மீன்கள் பசுமையாகவும், தனி சுவையாகவும் இருக்கும் என்பதால் இந்த மீன்களை போட்டி போட்டு தனி விலைகூடுத்து பொதுமக்கள் உணவுக்கு வாங்கி செல்வார்கள்.இந்த மீன்பிடி தொழிலில் 6 வயது முதல் 58 வயது வரை உழைத்துவரும் மீனவர்களை நேரில் சென்று பார்க்கும் போதுதான் மீனவனுக்கு உழைக்க வயதில்லை என்பதை நம்பலால் புரிந்து கொள்ள முடியும்.
11 வயதில் மீன்பிடிக்க கூலிக்கு சென்று 58 வயதில் சொந்த படகு வாங்கிய ஒரு மீனவரின் உருக்கமான வாழ்க்கையின் சுவகாசியமான, உணர்பூர்வமான பேச்சை கேட்போம்.
1958 ஆம் ஆண்டு தனுஸ்கோடி பகுதியில் பச்சப்பட்டி மீனவ கிராம குடியிருப்பில் முனியசாமிக்கு மகனாக பிறந்த மீனவன் ராஜன். இந்தியாவின் அயல் நாட்டு வர்த்த நிறுவன பகுதியாக இருந்த வந்த தனுஸ்கோடி நகரம் 1964 ஆம் ஆண்டு புயலில் சிக்கி பேரழிவில் அழி்ந்துபோனது.அப்பகுதியில் அந்த பெரும் நிகழ்வு நடைபெரும்போது மீனவர் ராஜனின் வயது 6 ஆகும். 6 வயதிலேயே கடலோரப்பகுதியில் பெற்றோர்களுக்கு உதவ சென்ற ராஜன் 11 வயதில் நான்காம் வகுப்பு வரை படிப்பை முடித்துக்கொண்டு கூலி வேலைக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றார்.கடல் ஓசையில் இனிமையான மீன்பிடி தொழில் பயணத்தை 11 வயதில் கூலிக்கு சென்று துவங்கிய மீனவர் ராஜன் தற்போது 58 வயதில் சிறிய படகிற்கு சொந்தக்காரணாகியும் தளர்ந்த வயதிலும் மீன்பிடி தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடல் பரப்பில் ராட்சஸ கோபம் கொண்டு பயங்கர ஆக்கிரோசத்தில் கடல் அலைகள் வரக்கூடிய தென்கடலில் மீனவர் ராஜன் சிறிய நாட்டு படகில் கை துடுப்பை மட்டும் நம்பி மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார்.தினசரி மாலையில் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு வலைகளை கடலில் பரப்பிவிட்டு கரை திரும்பி விடுவார்.பின்னர் மறுநாள் காலையில் சென்று கடலில் விரித்திருந்த வலைகளை படகில் ஏற்றிக்கொண்டு கரைப்பகுதியில் கொண்டு வந்து வலையில் சிக்கி மீன்களை பிரித்தெடுத்து விற்பனைக்கு வியாபாரிகளிடம் செலுத்திவிடுவார். ஏறாத்தால 47 வருடம் உழைத்து பெற்ற மகனை தமிழக காவல் துறை பணி்க்கு அனுப்பி வைத்ததை கூறும் போது அவரின் முகத்தில் எண்ணற்ற மகிழ்ச்சி காணப்பட்டன. உடலில் வலு இருக்கும்வரை மீன்பிடி தொழிலை விடுவதில்லை என உருக்காமான தகவலை தந்து இனிமையான பேச்சை முடித்துவிட்டார்.
தகவல்
ரவி- ராமேசுவரம்
தொகுப்பு
செல்வன்
Comments