நியூட்ரினோ ஆபத்தா.? அவசியமா?

கண்ணுக்கு தெரியாத ,மிகமிகமிக நுட்பமான துகள் இன்று தமிழகத்தில்  முக்கிய விவாத பொருளாக மாறியிரு க்கிறது. நியூட்ரினோ ஆய்வு என்பது ஆறிவியல்  தொடர்பானது. ஆனால் அதற்காக செய்யப்படுகிற மலையை குடைந்து சுரங்கம் அமைப்பது உள்ளிட்ட  ஆய்வுகள்  அப்பகுதி மக்களிடம் பயத்தை உருவாக்கி இருக்கிறது. சினிமா உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும்  ஊடுறுவும் அரசியல் தற்போது அறிவியல் ஆய்வுக்குள்ளும் புகுந்திருக்கிறது.


நியூட்ரினோ மழையில் நனைகிறோம்...

கிருஷ்ணபரமாத்மாவின்  நரசிங்க ஆவதாரத்தில் ... தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை சொல்வார்கள். ஆனால் இந்த நியூட்ரினோ தூண் ,துரும்பில் மட்டுமல்ல நாம் காணும் பிரபஞ்ச வெளியெங்கும் நிறைந்திருக்கிறது.மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்தே நியூட்ரினோ மழை இடைவிடாது பெய்து கொண்டிருக்கிறது. நீங்கள்,நான் என அனைத்து பொருட்களும் நியூட்ரினோ மழையில் நனைந்தபடியே இருக்கிறோம் . நம்மீது  விழும் நியூட்ரினோ நம் உடலை உடுருவி வெளியே வந்து  கொண்டிருக்கிறது.நம்மை மட்டுமல்ல நாம் வா ழும் பூமியை ஊடுருவும் சக்தி கொண்
டது நியூட்ரினோ.

நம் உடல் உற்பத்தி செய்யும் நியூட்ரினோ...

              எந்த ஓரு பொருளையும் உடைத்துக்கொண்டே போனால் கடையில் மிஞ்சுவது தான் அணு. நாம் உட்பட உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் அணுக்கலால் ஆனது என்பது நமக்கு தெரியும்.இந்த அணுவுக்குள் 60 விதமான துகள் இருப்தாக கண்டுபிடித்திருக்கிறார் கள்.இதில் எந்த பொருளையும் ஊடுவும் விஷேச திறன் காரணமாக நியூட்ரினோ விஞ்ஞானிகளின் கவனத்திற்கு வந்திருக்கிறது.நியூட்ரினோவின் மற்றொரு திறன் ஓளியின் வேகத்திற்கு ( ஓரு வினாடிக்கு  1,80,000 கிமீ வேகம் ஓளிசெல்லும்)இணையாக செல்லும் தண்மை கொண்டது.
மேலே குறிப்பிட்டது போல  நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சம், சூரியனிலிருந்தும் நியூட்ரினோ மழையாக கொட்டுகிறது. சூரியனிலிருந்து நம் பூமிக்கு, ஒரு சதுர சென்டிமீட்டருக்கு சுமார் நாற்பது பில்லியன் நியூட்ரினோக்கள் வந்தடைகின்றன. நம் காற்று மண்டலத்திலும், பூமியின் உட்பகுதியிலும் இவை உற்பத்தியாகின்றன.
 1930 ம் ஆண்டு பாலி என்ற ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த விஞ்ஞானி அணுவுக்குள் தோராயமாக நியூட்ரினோ என்னும் துகள் இருக்கலாம் என்பதை கண்டுபிடித்தார். 1956ம் ஆண்டு  அமெரிக்க  இயற்பியல் அறிஞர்கள்  நியூட்ரினோ    உண்மையில் இருக்கிறது என்பதை நிருபித்தார்கள்.
      நியூட்ரினோ  குறித்து அதிர்ச்சியும், ஆச்சரியமுமான செய்தி நம் உடம்பும் நியூட்ரினோக்களை தயாரிக்கின்றன. நம் உடம்பிலிருக்கும் சுமார் 20 மில்லி கிராம் பொட்டாசியத்தைக் கொண்டு நாம் தினசரி சுமார் 340 மில்லியன் நியூட்ரினோக்களை நம்மை அறியாமலே தயாரித்துக்கொண்டுதான் இருக்கின்றோம் .

நியூட்ரினோ  ஆய்வு எதற்காக...?

எதையும் ஊடுருவும் திறன், ஒளியை விட வேகம் என்ற விஷேச திறன்  நியூட்னோவுக்கு இருந்தாலும், ஓரு பெரிய பலகீனம் (மைனஸ்பாயிண்ட்) மிகமி மெல்லியதுகள்.வேறு எதனுடனும் நியூட்ரினோ வினைபுரியாது,பிரபஞ்சத்திலிருந்து  பூமியை நோக்கி வரும் நியூட்ரினோகளுடன்,காஸ்மிக்  கதிர் உள்ளிட்ட பல கதிர்கள் வருகின்றன .அதில் நியூட்ரினோவை வடிகட்ட வேண்டும். பின்பு ஆய்வு செய்து அதை நம் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இதுதான் தேனி மலைப்பகுதியில் நடைபெற உள்ள ஆய்வின் அடைப்படை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தேனி அம்பரப்பர் மலை தேர்வு ஏன்?


உலகின் உயரமான மலையான இமயமலை, தமிழக்தின் தென்கோடியிலிருந்து குஜராத் வரை பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை(மேற்கு தொடர்ச்சி மலை என்பது ஆப்ரிக்க கண்டத்திலிருந்து   பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்திய பகுதி பிரிந்து வந்த போது ஏற்பட்ட உராய்வு காணமாக உருவானது),கிழக்கு தொடர்ச்சி மலை ,உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதில் உள்ள மலைகளில்தேனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் துவக்கத்தில்  அமைந்துள்ள அம்பரப்பர் மலையை ஏன் தேர்வு செய்தார்கள்?
         உலகிலேயே மிக பழமையான ,கடினத்தன்மை மிக்க, நியூட்ரினோக்களை சரியாக வடிகட்டி கண்டுபிடிக்க தகுந்த பாறைகள் நிறைந்த மலை பகுதி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
           நியூட்ரினோ ஆய்வுக்காக இந்த மலையின் உச்சியிலிருந்து 1.3 கிலோமீட்டர் ,கீழே 120 மீ உயரம் 25 மீ அகலம் 30மீ நீளமான குகை கிடைமட்டமாக அமைக்கப்பட்டு. மலையின் அடிவாரத்தில் வெளிப்பாகம் 2.5 கி.மீ. அளவுக்கு சுரங்கப்பாதை தோண்டி அதன் வழியாக அங்கு உணர்கருவி, கட்டுப்பாட்டுக் கருவிகள் வைக்கப்பட இரண்டு குகைகள் தோண்டப்படும். குகையின்  உள்ளே 50,000 டன் எடைகொண்ட   உலகின் மிகப்பெரிய காந்தம் நிறுவ படுகிறது.
ஜப்பான்,கனடா,இத்தாலி ,அமெரிக்கா  அகிய நாடுகள் நியூட்ரினோ  ஆய்வகங்களை அமைத்திருக்கின்றன.
இதில் தேனி அம்பரப்பர் மலையில் அமைய உள்ள ஆய்வாகத்தின் ஸ்பெஷல் 50,000 டன் எடைகொண்ட காந்தம் தான்.

நியூட்ரினோவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்...

2001ல் தீட்டப்பட்ட இத்திட்டத்திற்கு ,மத்திய அரசு ரூ,1450 கோடி ஒதுக்கியுள்ளது, தமிழக அரசின் சார்பாக அம்பரப்பர் மலையை சுற்றி 66 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. ஆய்வகம் அமைய உள்ள பகுதியில் புதியசாலைகள்,நீர்தேக்க தொட்டி  உள்ளிட்ட அடிப்படை வசதிதள்  நடைபெற்றுவருகின்றன.
           இந்நிலையில் சில அரசியல்கட்சிகளும், தேனி பகுதி மக்களும் தங்கள் எதிர்ப்பையும், பயத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொதுக்கூட்டங்களையும், கருத்தரங்குகளையும் அப்பகுதிகளில் நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்ச்சிகளில்   புதிடெல்லியில் உள்ள இந்தியஅரசின் விஞ்ஞான் பிரச்சார்  நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
                அணுகழிவுப்பொருட்கள் கொட்டப்டலாம்,விவசாயம் பாதிக்கப்படும், நீர்வளம் பாதிக்கபடும், நியூட்ரினோக்களில் இருந்து கதிரிக்கம் வரலாம்,சுகாதார மாசு  ஏற்படலாம், அதனால் குழந்தைகள்  ஊனத்தோடு பிறக்கலாம்.காடுகள் அழிக்கப்படலாம், பல நதிகளின் பிறப்பிடமான மேற்கு தொடர்சி மலை பாதிக்கப்படலாம், நிலநடுக்கம் ஏற்பட்டு ஆணை கட்டுமானங்கள் பாதிக்கபடுமா? வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இத்திட்டம் தேவைதான? என்பது உட்பட பல கேள்விகளையும் ,பயத்தையும் எதிர்ப்பவர்களும், பொதுமக்களும்  எழுப்புக்கிறார்கள்.
ஆனால் மேற்கண்ட பயங்களும்,பிரச்சனைகளையும் தேவையற்றது,தவறான பார்வை என்கிறார்கள் ஆதரவாளர்களும்,சில விஞ்ஞானிகளும்.மேலும் எலக்ட்ரான் கண்டுபிடிக்கபட்ட பிறகு தான் நாம் பயன்படுத்தும் செல்போன் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களும் பயன்பாட்டுக்கு வந்து மக்களின்  வாழ்க்கை முறை மேம்பட்டது. இதே போல நியூட்ரான் ஆய்வும் பயன் தரக்கூடியதே என்கிறார்கள்.
விஞ்ஞானி  த.வி.வெங்கடேஸ்வரன் " நியூட்ரினோ வை வெற்றிகரமாக கையாளும்  சாத்தியத்தை  பெற்றுவிட்டால் நாம் யூகிக்க முடியாத முற்றிலும் புதியதோர் உலகத்துக்குள் பிரவேசிக்க முடியும் என்கிறார்"
நம்மை பொறுத்தவரை பொதுமக்களின் பயத்தையும் போக்க வேண்டும்.அறிவியலும் வளரவேண்டும் .....

தமிழ்வாசல் மாத இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை...
அ.தமிழ்ச்செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Unknown said…
தமிழ்ச்செல்வன் யாரவது கண்னை விற்று ஒவியம் வாங்குவாரோ இந்த பழமொழிப்பற்றி தங்கள் கருத்து
வாழ்க்கை மேம்பட்டால் சரி தான்...