எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விளையாட்டுப் புத்தகங்கள்...

விளையாட்யையும்... கதையையும்  இணைத்து புதுமையான முறையில் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இது குறித்து அவரது இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள்...
ஆறு முதல் பனிரெண்டு வயதுள்ள குழந்தைகள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக இரண்டு விளையாட்டுப் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறேன்.

விளையாட்டுப் புத்தகங்கள் என்றால் என்ன ?

வெறுமனே பக்கங்களைப் புரட்டிக் கதையைப் படித்துப் போவதற்குப் பதிலாகக் கதையில் சில சிக்கல்கள், சவால்கள், புதிர்களை இடம்பெறச்செய்து படிப்பவர் தன் கையில் உள்ள பகடையை உருட்டி எந்த எண் விழுகிறதோ அதற்கு ஏற்ப அந்தச் சிக்கலை, சவாலை எதிர் கொண்டு கடப்பதே விளையாட்டுப் புத்தகம் எனப்படுகிறது.
ஐரோப்பிய மொழிகளில் இது போன்ற முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. தமிழில் கதை விளையாட்டுகள் இல்லை, பரிசோதனை முயற்சியாகவே இதை உருவாக்கியிருக்கிறேன். பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் இதனை வெளியிட்டுள்ளது.

வெள்ளைராணி




பஞ்சினால் செய்யப்பட்ட ஒரு சிறுமியைப் பற்றியது. அவள் தன்னை வளர்க்கும் தாத்தா பாட்டிக்குப் பல்வேறு உதவிகள் செய்கிறாள். கதையின் போக்கில் அவளை, மழையிலும். புயற்காற்றிலும், மாயத்தடாகத்திலும் காப்பாற்றி வழிகாட்ட வேண்டியது படிப்பவரது வேலை. இதற்காகப் பகடையை உருட்டி குறிப்பிட்ட எண் விழும்படி செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் விளையாடியபடியே கதை படிக்க முடியும்.
விலை ரூ 20

கற்பனைக்குதிரை




எட்டு முதல் 12 வயது வரை உள்ள சிறார்களுக்கானது. இக்கதையில் மல்லிகை மணம் வீசும் சிரிப்புக் கொண்ட ஒரு இளவரசியை அரக்கன் கடத்திக் கொண்டு போய்விடுகிறான், அவளைக் கதை படிக்கும் வாசகர் தான் காப்பாற்ற வேண்டும், அதற்காகப் பகடையை உருட்டி எந்த எண் விழுகிறதோ அந்த எண் உள்ள பத்தியை மட்டுமே வாசிக்க வேண்டும், சரியான எண் விழுந்தால் மட்டுமே கதையில் முன்னேறிப் போக முடியும், இல்லாவிட்டால் கதைக்குள் சுற்றிக் கொண்டேயிருப்பீர்கள், முடிவை நெருங்க முடியாது
கதை படிப்பதுடன் விளையாடவும் செய்வதால் சிறார்கள் சந்தோஷம் அடைவார்கள்.
விலை ரூ 50
 
•••

புத்தகங்களைப் பெற :
புக்ஸ் பார் சில்ரன்
பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை
தேனாம்பேட்டை, சென்னை 18
தொலைபேசி 044- 24332924, 24332424, 24356935.



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Yarlpavanan said…
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
இன்றைக்கு தேவையான புத்தகங்கள் தான்...
  • காதல் சொல்ல மெனக்கெடுறது தான் தமிழ் சினிமாவின் பிரச்சனையா? இயக்குனர் மகேந்திரன்
    22.04.2013 - 1 Comments
    தமிழ் சினிமாவில் படத்தின் இடைவேளை வரை காதலியை துரத்துவது தான் ஹீரோவின் வேலையே. சினிமால நல்ல,கெட்ட சினிமா…
  • மதுரையின் வயது என்ன?
    16.07.2015 - 2 Comments
    உலகில் வயதான பல நகரங்களில் இன்றும் உயிரோட்டமாக உள்ள ஒரு பழம்பெரும் நகரம் மதுரை. நகரமயமாக்கலால் மதுரை…
  •   ஆயிரக்கணக்கான பறவைகள்  தற்கொலை
    25.06.2016 - 0 Comments
    தொழில் அதிபர் குடும்ப த்துடன் தற்கொ லை. குழந்தை களுக்கு விஷ்ம் கொடுத்து கொ ன்றுவிட்டு தாயும் தற்கொ லை.…
  • ''7ம் அறிவு'' திரைக்கதையில் போதிதர்மர் - சூர்யா ஜீன் ரகசியம் என்ன? புதிய தகவல்
    17.10.2011 - 1 Comments
    ''7ம் அறிவு'' திரைக்கதையில் இரண்டு விஷயங்களை இணைத்திருக்கிறார்கள். ஒன்று 1500 லிருந்து 2000 ஆண்டுகளுக்கு…
  • முண்டாசுப்பட்டி - புதியகளம்
    15.06.2014 - 3 Comments
    புதிய களம், கதைகளோடு தமிழ் சினிமாக்கள் வரதொடங்கியிருப்பது நல்ல அம்சம். அதில் முண்டாசுப்பட்டி…