எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விளையாட்டுப் புத்தகங்கள்...

விளையாட்யையும்... கதையையும்  இணைத்து புதுமையான முறையில் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இது குறித்து அவரது இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள்...
ஆறு முதல் பனிரெண்டு வயதுள்ள குழந்தைகள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக இரண்டு விளையாட்டுப் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறேன்.

விளையாட்டுப் புத்தகங்கள் என்றால் என்ன ?

வெறுமனே பக்கங்களைப் புரட்டிக் கதையைப் படித்துப் போவதற்குப் பதிலாகக் கதையில் சில சிக்கல்கள், சவால்கள், புதிர்களை இடம்பெறச்செய்து படிப்பவர் தன் கையில் உள்ள பகடையை உருட்டி எந்த எண் விழுகிறதோ அதற்கு ஏற்ப அந்தச் சிக்கலை, சவாலை எதிர் கொண்டு கடப்பதே விளையாட்டுப் புத்தகம் எனப்படுகிறது.
ஐரோப்பிய மொழிகளில் இது போன்ற முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. தமிழில் கதை விளையாட்டுகள் இல்லை, பரிசோதனை முயற்சியாகவே இதை உருவாக்கியிருக்கிறேன். பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் பார் சில்ரன் இதனை வெளியிட்டுள்ளது.

வெள்ளைராணி




பஞ்சினால் செய்யப்பட்ட ஒரு சிறுமியைப் பற்றியது. அவள் தன்னை வளர்க்கும் தாத்தா பாட்டிக்குப் பல்வேறு உதவிகள் செய்கிறாள். கதையின் போக்கில் அவளை, மழையிலும். புயற்காற்றிலும், மாயத்தடாகத்திலும் காப்பாற்றி வழிகாட்ட வேண்டியது படிப்பவரது வேலை. இதற்காகப் பகடையை உருட்டி குறிப்பிட்ட எண் விழும்படி செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் விளையாடியபடியே கதை படிக்க முடியும்.
விலை ரூ 20

கற்பனைக்குதிரை




எட்டு முதல் 12 வயது வரை உள்ள சிறார்களுக்கானது. இக்கதையில் மல்லிகை மணம் வீசும் சிரிப்புக் கொண்ட ஒரு இளவரசியை அரக்கன் கடத்திக் கொண்டு போய்விடுகிறான், அவளைக் கதை படிக்கும் வாசகர் தான் காப்பாற்ற வேண்டும், அதற்காகப் பகடையை உருட்டி எந்த எண் விழுகிறதோ அந்த எண் உள்ள பத்தியை மட்டுமே வாசிக்க வேண்டும், சரியான எண் விழுந்தால் மட்டுமே கதையில் முன்னேறிப் போக முடியும், இல்லாவிட்டால் கதைக்குள் சுற்றிக் கொண்டேயிருப்பீர்கள், முடிவை நெருங்க முடியாது
கதை படிப்பதுடன் விளையாடவும் செய்வதால் சிறார்கள் சந்தோஷம் அடைவார்கள்.
விலை ரூ 50
 
•••

புத்தகங்களைப் பெற :
புக்ஸ் பார் சில்ரன்
பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை
தேனாம்பேட்டை, சென்னை 18
தொலைபேசி 044- 24332924, 24332424, 24356935.



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Yarlpavanan said…
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
இன்றைக்கு தேவையான புத்தகங்கள் தான்...
  • கக்கூஸ்’  - நம் முகத்தில் அறையும்  ஆவணப்படம்
    10.03.2017 - 3 Comments
    கக்கூஸ்’ என்று பெயர் மூலமாகவே நம் முகத்தில் அறைகிறது இந்த 115 நிமிட ஆவணப்பட ஆக்கம். நரகத்தையொத்த…
  • போப்பாண்டவர்  கம்யூனிஸ்ட்டா?
    01.07.2014 - 2 Comments
    கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப்பிரான்ஸிஸ் ஓரு கம்யூனிஸ்ட் என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாளேடுகள்…
  • சுதந்திர தினமும்... சில சாக்லெட் மீட்டாய்களும்
    13.08.2014 - 0 Comments
    அரசு ஊழியர்கள்,தனியார்நிறுவன ஊழியர்களுக்கு   வழக்கமான விடுமுறை நாள். அரசு ஊழியர்களுக்கு…
  • இயக்குனர் கௌதம்மேனனை கண்ணீர்விட்டு  அழச்செய்த படம்
    30.03.2013 - 124 Comments
    நம்மை போன்ற சினிமா ரசிகர்கள் படக்காட்சிகளில் ஒன்றிப்போய் கண்ணீர்விட்டு அழுவது எப்போதாவது நிகழ்கிற…
  • மரியாதைக்குரிய மோடிஜி அவர்களே!
    07.12.2016 - 1 Comments
    நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து…