காவியத்தலைவன் கலக்கல் படம்...

நீங்கள் ரசனையான சினிமா ரசிகராக இருந்தால் நிச்சயமாக இந்த படம் பிடிக்கும்.ஏனென்றால் சினிமாவை பெற்றெடுத்த தாய் நாடகக்கலைதானே.தமிழ் சினிமா தொழில்நுட்பம்,கேமிரா டெக்னிக்,வெளிநாட்டு படப்பிடிப்பு,எடிடிங், இப்படி அசுரத்தனமா வளர்ச்சி கண்டிருக்கிறது.இசை ஞானமே இல்லாதவன்கூட இசையமைக்கலாம். இசை கணிணிமாயமாக்கபட்டதால் இசை இப்போது எளிது.சிவந்த தேல்,கொஞ்சம் கவர்ச்சி இருந்தால் போதும் நடிகையாகி விடலாம்.குறிப்பாக தமிழ் பேச தெரியவிட்டாலும் பரவாயில்லை. டப்பிங் ஆர்டிஸ்ட் வைத்து பேசி கொள்ளலாம். நடிகர்கராக வேண்டுமா? சொந்தமாக படம் தயாரிக்க முடியுமானால் நீங்களும்,நானும் நடிகராகிவிடலாம்.நடிக்க தெரிந்திருக்க வேண்டி அவசியமில்லை.

           ஆனால் நாடகக்கலை அப்படியில்லை நடிக்க தெரிந்திருக்க வேண்டும்.பாடும் திறமை வேண்டும்.நடனம் தெரிந்திருக்க வேண்டும். வசனங்களை மனப்பாடம் செய்து சரியான உச்சரிப்புடன் பேச தெரிந்திருக்க வேண்டும்.மேடையில் நடிப்பதென்பது லைவ் சோ...சினிமாவை போல ரீ டேக் கிடையாது. மனதும் உடலும் இணைந்து நடத்துகிற ஒரு கலை நாடகம்.சிறிய வயதிலிருந்தே பயிற்சி பெற வேண்டும்.
        இப்படியான உண்மை கலையை பற்றிய படம் தான் காவித்தலைவன். சுகந்திர போராட்ட காலத்தில் நடப்பதாக வரும் கதை. சித்தார்த்,பிருத்திவிராஜ்,நாசர் ,வேதிகா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தம்பிராமையா உள்ளிட்ட படத்தின் மற்ற கதாப்பாத்திரங்களும் மிக்ச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.நாடகக்காரர்களின் வாழ்கையை நம் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் வசந்தபாலன்.ஏ.ஆர்.ரகுமான். இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இப்பாடல் காட்சிகளை நீரவ் ஷாவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கூடுதல் ரசனை ஏற்படுகிறது.படத்தின் கடைசி காட்சிகளில் பகத்சிங் நாடகத்தில் வந்தேமாதரம்...வந்தேமாதரம்...வந்தேமாதரம் என்று கோஷமிடும் போது சுகந்திரபோராட்ட காலத்திற்கு சென்றுவிட்ட உணர்வை எற்படுத்துகிறது.
சுருக்கமாக படத்தின் கதை...
மதுரையில் நாடக கம்பெனி நடத்தி வருகிறார் நாசர். இவரிடம் சிறுவயதில் சித்தார்த் மற்றும் பிரித்விராஜ் இருவரும் சேருகிறார்கள். அங்கேயே வளர்ந்து பெரியவனாகிறார்கள். நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜபாட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வருகிறார் பிரித்விராஜ். சித்தார்த் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஒரு கட்டத்தில், சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் வேதிகாவும் அவருடைய அம்மாவான குயிலியும் இந்த கம்பெனியில் வந்து சேருகிறார்கள்.

இதுவரை ராஜபாட் வேடத்தில் நடித்து வந்த பொன்வண்ணன், நாசரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாடக கம்பெனியை விட்டு செல்கிறார். இதன் பிறகு பிரித்விராஜ் தனக்கு ராஜபாட் கதாபாத்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். இந்த வாய்ப்பை வழங்குவதற்காக பிரித்விராஜ் மற்றும் சித்தார்த்தை அழைத்து ராஜபாட் வசனத்தை பேச சொல்லி நடிக்க சொல்கிறார் நாசர். இந்த தேர்வில் சித்தார்த் திறமையாக நடித்து ராஜபாட் கதாபாத்திரத்தை கைப்பற்றுகிறார்.

இதனால், சித்தார்த் மீது கோபப்படுகிறார் பிரித்விராஜ். ஒவ்வொரு தடவையும் சித்தார்த் தன்னுடைய நடிப்பால் மேடையில் கைதட்டலை பெறும்போது, பிரித்விராஜின் கோபம் மற்றும் பொறாமையும் அதிகரிக்கிறது. இது, வன்மமாக மாற, அவர்களுக்கிடையே உருவான இந்த பனிப்போர் எப்படி முடிகிறது என்பதை நாடகத் தன்மையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments