ஆடி மாதம் ஆண்குழந்தைகள் உயிருக்கு ஆபத்து

ஆடி மாதம் சிக்கல் பிடித்த  மாதமா கும்.ஆடி மாதத்தில் நல்லது.கெட்டது செய்ய மாட்டாங்க.புதுசா சட்டை. துணிமணி> எடுக்கமாட்டாங்க.திருமணமான புது தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.ஆனால் விவசாயத்துக்கு நல்ல மாதம்... ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. ஆனால் ஆடி மாதத்தில் மழையே கிடையாது பிறகு எப்படி தேடிவிதைப்பது.ஆடிகாத்துல அம்மியும் பறக்கும் என்பது பழமொழி... மற்றமாவட்டங்களில் எப்படியோ மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் காற்று அதிகம் தான். ஆடி அம்மாவாச.ஆடி வெள்ளி என ஆன்மீக முக்கியதுவமும் உள்ள மாதம்.முதல் ஆடி.நடுஆடி.கடைசி ஆடி என ஆசைவ உணவு விருந்து புதுமாப்பிளைகளுக்கு கிடைக்கிறது இந்த மாதத்தில்.ரெம்ப நாளா விற்காத பொருட்களை விற்க ஆடி சிறப்புத்தள்ளுபடி  கிடைக்கிற மாதமும் ஆடிதான்.

       இப்போ கூடுதலாக ஆடி மாதம் ஆண்குழந்தைகளுக்கு ஆகாது என்பது. கோவையில் துவங்கிய வதந்தி ஆடி காற்றில் மதுரை நகர் மற்றும் கிராமங்களுக்குபரவிவருகிறது.
ஆடிமாதத்தில் ஆண்குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என வதந்தி பரவியதை தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் வீட்டுவாசலில் தீபமேற்றி பெண்கள் வழிபாடு நடத்துகிறார்கள்.
ஆட்டுவிக்கும் ஆடி  மாதத்தில் பல்வேறு விதமான வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.இந்நிலையில் கோவையிலுள்ள  கோவிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததாகவும் அப்படி பிறந்த குழந்தை நான்தான் தீமையின் அவதாரம் ஆடி மாதத்தில் ஆண்குழந்தைகள் அனைத்தையும் சம்காரம் செய்துவிடுவேன் என்றும் இருந்தாலும் அம்மனின் அருள்பெற்று   தப்பிக்க ஆண்குழந்தை உள்ள வீடுகளின் முன்பாக தீபமேற்றி 3நாட்கள் அம்மனை வழிபட்டால் ஆண்குழந்தைகளுக்கு தீமை ஏதும் நடக்காது என்று வாய்திறந்து பேசியதாகவும் கோவையிலிருந்து வதந்திகள் பரவியது.

இந்த வதந்தி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில்  ஆடிக்காற்றைவிட வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் வீதிக்கு வரும் பெண்கள் தங்களது ஆண் குழந்தைகள் உயிரை காப்பாற்றிட வேண்டி வீட்டுவாசலில்  தீபமேற்றி அம்மனை  வழிபட்டு வருகின்றனா;.அதன்காரணமாக திருமங்கலம் நகாpன் பல்வேறு பகுதிகளில்  கார்த்திகை மாதம் போல் நள்ளிரவில் வீதிகள் அனைத்தும் தீபங்களால் நிறைந்து காணப்படுகிறது.இது வதந்தியாக இருந்தாலும் கூட தங்களது ஆண் பிள்ளைகளுக்கு எந்தவித தீங்கும் நோ;ந்துவிடக் கூடாது என்பதில் தாய்மார்கள் கண்ணும் கருத்துமாக இருப்பது தாய்ப்பாசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.ஆடி மாததத்தை வைத்து பரப்படுகிற வதந்தியில் இது டூமச் ரகம் .
       பிறந்த குழந்தை பேசுச்சாம்... அதுவும் சம்காரம் செய்துவிடுவதாக.. மூட நம்பிக்கைக்கு அளவேயில்லையா? மக்கள் திருந்த மாட்டார்கள் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டாச்சு.. ஆனாலும் செவ்வாதோசத்தை விடமாட்டார்கள்


தகவல்
செல்வராஜ்
தொகுப்பு 
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments