ஆடி மாதம் சிக்கல் பிடித்த மாதமா கும்.ஆடி மாதத்தில் நல்லது.கெட்டது செய்ய மாட்டாங்க.புதுசா சட்டை. துணிமணி> எடுக்கமாட்டாங்க.திருமணமான புது தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.ஆனால் விவசாயத்துக்கு நல்ல மாதம்... ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. ஆனால் ஆடி மாதத்தில் மழையே கிடையாது பிறகு எப்படி தேடிவிதைப்பது.ஆடிகாத்துல அம்மியும் பறக்கும் என்பது பழமொழி... மற்றமாவட்டங்களில் எப்படியோ மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் காற்று அதிகம் தான். ஆடி அம்மாவாச.ஆடி வெள்ளி என ஆன்மீக முக்கியதுவமும் உள்ள மாதம்.முதல் ஆடி.நடுஆடி.கடைசி ஆடி என ஆசைவ உணவு விருந்து புதுமாப்பிளைகளுக்கு கிடைக்கிறது இந்த மாதத்தில்.ரெம்ப நாளா விற்காத பொருட்களை விற்க ஆடி சிறப்புத்தள்ளுபடி கிடைக்கிற மாதமும் ஆடிதான்.