சூப்பர்ஸ்டார் இல்லை,தளபதிகள் இல்லை, தலயும் இல்லை,சூப்பர் ஆக்டரும் இல்லை,பஞ்ச் வசனம் இல்லை,அடிதடிகள் இல்லை,ரத்தம் சொட்ட சொட்ட விரட்டுதல் இல்லை,டூயட் இல்லை இன்னும் இது போன்ற நிறைய இல்லை... ஆனால் படம் முடிந்து தியோட்டரை விட்டு வெளிவரும் போது மனதை எதோ செய்கிறது... சைவம்.
நாசரையும்,பேபி சாராவை தவிர எல்லோரும் புதுமுகங்கள் தான். சந்தையில் மீன், கோழி,ஆட்டுக்கறி,கருவாடு என அசைவம் வாங்கும் காட்சியில் படம் துவங்கி... கடைசி காட்சியில் அதே சந்தையில் தக்காளி,கத்திரிக்கா, வாங்கும் காட்சியோடு படம் முடிகிறது.
கிராமத்து பெரியவரான நாசருக்கு மூன்று மகன்கள், ஒரேயொரு மகள். இவர் துபாயில் வசித்து வருகிறார். மூத்த மகனும், இளையமகனும் சென்னையில் சொந்த நிறுவனம் நடத்தி வருகிறார்கள். மூன்றாவது மகன் கிராமத்தில் நாசருடன் இருக்கிறார். இவருடைய மகள் சாரா.
இவர்கள் ஊர் திருவிழாவிற்காக நாசரின் மகன்கள் மற்றும் மகள் எல்லோரும் குடும்பத்துடன் ஊருக்கு 10 நாட்கள் முன்னதாகவே வருகிறார்கள். வந்த இடத்தில் நாசரின் மூத்தமகனுடைய மகன் பாஷா, அவனது அத்தை மகளான துவாராவை காதலிக்கிறார். இது ஒருபக்கம் சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஒருநாள் இவர்கள் எல்லோரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட செல்கிறார்கள்.
அப்போது, கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் சாராவின் பாவாடை எதிர்பாராமல் தீப்பற்றிக் கொள்கிறது. இதனால் பதட்டத்தில், அர்ச்சனைக்காக கொண்டுவந்த தட்டும் கீழே விழுந்துவிடுகிறது. காயமின்றி சாரா தப்பிக்கிறாள். ஆனால், கோயில் பூசாரியோ கோவிலுக்குள் தீ விபத்து ஏற்பட்டாலும், அர்ச்சனை தட்டு கீழே விழுந்தாலும் குடும்பத்துக்கு ஆகாது என்ற குண்டைத் தூக்கிப் போடுகிறார். இதற்கு பரிகாரம் என்னவென்று கேட்கும் நாசர் குடும்பத்திடம், உங்கள் குலதெய்வத்திற்கு நேர்த்திகடன் எதுவும் செய்யாமல் இருந்தால் அதை செலுத்திவிடுங்கள். சரியாகிவிடும் என்று கூறுகிறார்.
அதன்படி, இவர்கள் செய்யாமல் விட்ட நேர்த்திகடன் என்னவென்று குடும்பம் முழுவதும் அமர்ந்து யோசிக்கிறது. அப்பொழுது, பாப்பா என்று பெயர்வைத்து தன்வீட்டில் வளர்த்துவரும் சேவலை மூன்று வருடத்திற்கு முன்பு, சாமிக்கு நேர்த்திக்கடனாக கொடுக்க முடிவெடுத்து, அதை செய்யாமல் விட்டுவிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. ஆகையால், இப்போது அந்த சேவலை திருவிழாவில் பலிகொடுத்து நேர்த்திகடனை செலுத்திவிட்டால் தங்களுடைய குடும்பத்துக்கு நல்ல காலம் வந்துவிடும் என முடிவெடுத்து, அதை செய்ய முடிவெடுக்கின்றனர்.
இந்த சூழலில் சேவலான பாப்பா காணாமல் போய்விடுகிறது. அதைத் தேடி குடும்பத்தில் உள்ள அனைவரும் ஊரில் மூலை முடுக்கெல்லாம் சுற்றி திரிகின்றனர். இறுதியில், அந்த பாப்பாவை கண்டுபிடித்து குலதெய்வத்துக்கு நேர்த்திகடனாக பலி கொடுத்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாசர்,சாரா மிக அருமையான நடிப்பால் அசத்து கிறார்கள்.நாசரின் மகன் பாஷா அவரது பேரனாக நடித்திருக்கிறார். துறுதுறுப்பான இளைஞனாக அப்பா பெயரை காப்பாற்றுவார்.சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை,என செட்டி நாட்டு கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த திருப்தி யை கொடுகிறது படம்.இயக்குனர் விஜய் மென்மையான திரைக்கதையில் சைவம் சமைத்திருக்கிறார். சைவம் புதிய சுவையில் வெளிவந்துள்ள சினிமா.
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

செல்வன்
Comments
தங்கள் அருமையான விமர்சனம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்