பெயிண்ட் அடிக்கும் வ.உ.சி யின் பேரன்கள்....

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாக வைத்து `அங்குசம்’ திரைப்படத்தை எடுத்த (இப்படி நல்ல படங்கள் எப்ப வருது , எப்ப போகுதுன்னே தெரியமாட்டேங்குது படம் பார்க்தாதவர்களுக்கு முன்னோட்டம் இணைத்துள்ளேன் ஆனால் இந்த பதிவு படத்தை பற்றியது அல்ல)

இயக்குநர் மனுகண்ணன், `தெரிந்த வீரர்கள் தெரியாதசெய்திகள்! `சேவை பெறும் சட்டம்’ என்ற இரண்டுநூல்களை வெளியிட்டார்.
இதற்கான விழா கடந்த 27ம்தேதி வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் அரங்கேறியது.கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சாகயம் ஐஏஎஸ் நூல்களை வெளியிட்டு அபாயம் நிறைந்த சமூகம் பற்றி பேச வந்தார். “நம் நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஏழைகளுக்கு எதிரானது.



பண்பாட்டுக்கு விரோதமானது. தேசத்தின் முன்னேற்றத்துக்குத் தடையானது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் சாதாரண மக்களின் கையில் கிடைத்துள்ள அசாதாரண ஆயுதம்.மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கட்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன்.

கைலி, அழுக்கு சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் என் எதிரே வந்தார். `ஏன் முன்னாடியே வரக்கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள்யார்?” என்று அவரிடம் கேட்டேன்.

`அய்யா... நான் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயிண்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்றுபரிதாபமாகச் சொன்னார். நான் அதிர்ந்துபோனேன். `உனக்குஇங்கே நிற்கும் உரிமையை வாங்கிக் கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியது தானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.

அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்து கொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன். வ.உ.சி.யின் குடும்பமே வக்கீல் குடும்பம். வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி.க்கு ஆங்கிலேயே அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லிஉத்தரவிட்டது. தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள். பெயிண்ட் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக் கொண்டு இருக் கிறார்கள்” என்று பேசி முடித்தார். அரங்கத்தில் அத்தனை பேரின்கைதட்டலிலும் ஓர் அர்த்தம் இருந்தது!

- எம். குணா

நன்றி : ஜுனியர் விகடன் (மே 7)
தொகுப்பு..
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

vijayan said…
நேரு குடும்பம்தான் இந்த தேசத்தில் மிக பெரிய தியாகம் செய்தது என்று உளறும் இந்திரா கட்ச்சிகாரன் இதை படிக்கட்டும்.
ஆத்மா said…
காந்தி, நேரு போன்றவர்கள் பின்னால் நின்று அவர்களுக்கு உதவியவர்கள் கூட இந்திய தேசத்தின் சுந்தந்திரத்துக்கு வித்திட்டவர்கள்தான் இவர்களை எல்லாம் எங்கே காண்கிறது இந்த அரசும் அரசியல் வாதிகளும்
பகிர்வுக்கு நன்றி
  • படுகொலை செய்யப்பட்ட  வலைப்பூ எழுத்தாளர்
    17.04.2015 - 3 Comments
    தனது வலைப்பூவில் மதச்சார்பின்மை, அறிவியல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை தொடர்பில் அவர் தொடர்ந்து…
  • சுதந்திர தினமும்... சில சாக்லெட் மீட்டாய்களும்
    13.08.2014 - 0 Comments
    அரசு ஊழியர்கள்,தனியார்நிறுவன ஊழியர்களுக்கு   வழக்கமான விடுமுறை நாள். அரசு ஊழியர்களுக்கு…
  • தமிழ்திரையுலகின்  வெள்ளிக்கிழமை “ராசி” சென்டிமென்ட்
    26.12.2011 - 0 Comments
    அண்மை க்காலங்களில் வெள் ளிக் கிழமைகளில் படங்களை வெளியிடும் வழக்கம் அதிகரித் துள்ளது.அந்த நாளில் வெளியாகும்…
  • டேவிட் & டேவிட்
    31.01.2013 - 1 Comments
    ஒரு பெயர் இரண்டு வாழ்க்கை இது தான் டேவிட் பட கதையின் ஒன்லைன்.இரண்டு ஹீரோக்கள் ஒன்றிணைந்து நடிக்கும் நல்ல…
  • இந்தியாவின் முட்டாள் முதலமைச்சர்...
    09.03.2013 - 5 Comments
    இந்திய முதலவர்களில் முட்டாள் ஒருவரை கண்டுபிடித்திருக்கிறேன்... இந்தியாவில் ஒரு மாநிலத்தின்…