உங்கள் பெயர், எங்கிருந்து வருகிறீர்கள், யார் மூலமாக கச்சதீவு உங்களுக்கு தெரியும், எதற்காக செல்லுகிறீர்கள்...... இந்த கேள்விககளுக்கு எத்தனை முறை பதில் சொல்லியிருப்போம் என்று தெரியாது? நான் கிருஸ்தவன் இல்லை... ஆனாலும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவுக்கு செல்கிற ஆர்வத்தோடு உந்தப்பட்டிருந் தேன்.பெரும்பாலன கட்சிகள் கச்சதீவை மீட்போம் என்பதை ஒரு மந்திரத்தை போல அடிக்கடி உச்சரிப்பதும், அதை ஊடகங்கள் பரப்புகிற கருத்து சொல்லாடல்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிற இடம், நம் இந்திய அரசு விட்டுக்கொடூத்த இடம் என்பன போன்ற நிகழ்வுகள் கச்சதீவு செல்கிற ஆசை வளர்த்துவிட்டிருந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே புகைப்படம் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிட ஆவணம் அனுப்பி,அது ஒன்றுக்கு பலமுறை சரிபார்க்கப்பட்டு கச்சதீவு திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட்டேன்.
மார்ச் 14 மதுரையிலிருந்து ராமேஸ்வரம்... மார்ச் 15 காலை 7 மணிக்கு கச்சதீவு பயணம் துவங்கியது.இதுவரை செல்லாத கடல்பயணம்...ஊடகங்களால் எனது மனதில் வரையப்பட்ட கச்சதீவை பற்றி பிம்பம் இண்டுமாக கொஞ்சம் சந்தோஷமும்,நிறையபடபடப்புமாய் படகுத்துறைக்கு சென்றோம். அடையாள அட்டை,பாதுகாப்பு சட்டையும் கொடுத்தார்கள், அதோடு சேர்த்து சில எச்சரிக்கைகளையும்......
யாரும் எலட்ரிக் பொருள் கொண்டு செல்லக்கூடாது, செல்போன் கேமிரா தவிற மற்ற அனைத்து எலட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. பின் புகையிலை போன்ற பொருட்கள் முற்றிலும் அனுமதி கிடையாது. குறிப்பாக சிகரெட் அனுமதி கிடையாது. பின் நாங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து பொருட்களும் முழுமையாக சோதனை செய்யப்படும் என்றனர். அடையாள அட்டையில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அவர்களை அனுமதிக்கமாட்டோம் என்றார்கள். இப்படி நமது அரசு அதிகாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டே இருந்தனர். பின் எங்களுக்கு சோதனை (காலம்) செய்யும் நேரம் வந்தது.
நம்ம ஊர் போலீஸ் இந்த கட்டுரையின் துவக்கத்தில் உள்ள...உங்கள் பெயர், எங்கிருந்து வருகிறீர்கள், யார் மூலமாக கச்சதீவு உங்களுக்கு தெரியும், எதற்காக செல்லுகிறீர்கள்,யார் மூலமாக கச்சதீவு உங்களுக்கு தெரியும், ...... உட்பட பல கேள்விகளை கேட்டார்கள்.. இதே கேள்விகளை வருவாய்துறை அதிகாரி, சுங்கத்துறை அதிகாரிகள், வெறியுறவுத்துறை அதிகாரிகள் இப்படி நான்கு கட்ட சோதனைகள், இந்த சோதனைகள் அனைத்தும் கேமிராக்கள் படம்பிடித்து கொண்டிந்தன.
இவ்வளவு சோதனைகளுக்கு பிறகும் கச்சதீவு போய்தான் ஆக வேண்டுமா? அதிலும் நண்பர் ஒருவர் ''போகும் போது எங்கு செல்லுகிறாய் என்று கேட்கிறாயே போர காரியம் வேளங்குனது மாதிறிதான்'' என்றார். ஒருவழியாக சோதனை முடிந்து படகுத்துறைக்கு அழைத்துச்செல்லப்பட்டோம்... மீண்டும் காவல்துறை,கப்பல்படைதுறையும் மீண்டும் சோதனை...( இதைதான் சோதனை காலம் என்கீறார்கள்) கிட்டத்தட்ட நான்கரை மணிநேர சோதனைக்கு பிறகு கரையிலிருப்பவர்கள் டாட்டா காட்ட 11.30 மணிக்கு படகு புறப்பட்டது. கடலின் அழகை ரசித்த படியே கச்சதீவு கணவுகளோடு பயணித்து கொண்டிருந்தோம்...கடலிலும் இவர்களது சோதனை விட்டபாடில்லை 12..30மணி அளவில் நமது இந்திய கப்பல் படையை சார்ந்த ஒரு கப்பல் எங்கள் படகு எண், படகில் மொத்தம் எத்தணை பேர் அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை நபர் என்று கணக்கு பார்த்தார்கள்.பின்பு 1.30 மணிக்கு அதே போல் சோதனை பின் 2 மணிக்கு நமகு கப்பல்படையின் பெரிய கப்பல் சோதனையில் இதை கேள்விகள் நீடித்தது. சோதனைமேல் சோதனைடா சாமி...
ஏற்கனவே வந்து சென்றவர்கள் பக்கத்துல வந்துட்டோம் என்றார்கள்.சிங்கள கொடிகளும், சற்று உயமான மரக்கிளைகளும் தெரியத்தொடங்கின. நெருங்க நெருங்க தீவு முழுவதும் சிங்களக்கொடிகள் கம்பீரமாக பறந்து கொண்டிந்தன... சிலப்பதிகாரத்தில் மதுரைக்கு வந்த கண்ணகி,கோவலனை பாண்டியனின் கோட்டையில் பறந்த கொடிகள் இங்கே வரதே என்பது போல அசைந்தாக இளங்கோவடிகள் உவமை சொல்லியிருப்பார்.அதை போல இது எங்கள் பூமி என்பது போல சிங்கள கொடிகள் பறந்து கொண்டிருந்தன.இலங்கை கப்பல் படை படகில் உள்ளவர்களின் விபரங்களை மட்டும் கேட்டு மதியம் 2.50க்கு கச்சத்தீவில் இறங்க அனுமத்தித்தார்கள்.
தீவில் இறங்கியதும் இனம்புரியாத ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டேன்... ஒரு குரல் ஒலித்தது. இலங்கை உங்களை அன்புடன்வரவேற்கிறது. அந்தோனியார் திருவிழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் இலங்கை சார்பில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற ஒலி ஒலித்தது.
காவல்¢, கப்பல், ரானுவம், மற்றும் இதர பிரிவு அதிகாரிகள் இருந்தனர் அனைவருக்குமே 20 முதல் 30 வயதுக்குள்ளாகவே இருந்தனர். எங்களுக்கு ஆச்சரியம் என்ன இது இவ்வளவு சிறியவர்களாக இருக்கிறார்களே என்று ... அவர்களிடம் நான் கேட்டேன் உங்களுக்கு எப்படி அனுபவம் மற்றும் திறமை இருக்கும் என்றேன் உடனே அவர்கள் பயிற்சி கொடுத்தது இந்தியா தான் எப்படி இருப்போம் என்று பாருங்கள் அண்ணா என்று மரியாதையுடன் பேசினார் அந்த காவல் அதிகாரி. நமது கடைத்தெரு போல் 30 மேற்பட்ட கடைகள் அங்கிருந்தன. இலங்கையிலிருந்து கப்பல் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு தொட்டிகளிலும் நிரப்பிக் கொண்டே இருந்தனர்.
அந்த தீவில் ஒரு ஜேசிபி எந்திரம், 10 ஜெனரெட்டர்கள், 3 டிராக்டர்கள், இரு காவல் போலிரோ ஜீப்கள், காவலருக்கு 10 டுவீலர்கள் காவலர் 50 பேர் இராணுவம் 20 பேர், கப்பல் படையினர் 100 பேர், கடல் பாதுகாப்பு அதிகாரி 10 பேர் கடல் மீட்புக்குழு 10 பேர் வேடிக்கையான விஷயம் சீன அதிகாரிகள் 20 பேரும் உடனிருந்தனர். அவர்களிடம் 3 ரோந்து கப்பல் மற்றும் ஒரு பெரிய கப்பலும் இருந்தது. அடுமட்டுமல்ல இலங்கையின் 3 ரோந்துபடகு, மற்றும் இரு பெரிய கப்பலும் இருந்து. இவை அனைத்தும் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு அந்த தீவை ஒரு மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு பாதைகளை எல்லாம் சுத்தம் செய்து பின், அனைத்து இடங்களிலும் மின்னொளி ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். மதிய உணவுக்கு பின் .., மாலை 4.50க்கு சர்ச்சில் இருந்து ஒரு குரல் அனைவரும் வந்தமைக்கு நன்றி கர்த்தர் அருள் உங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள். அருமையான இடத்தில் அந்த சர்ச் அமைந்திருந்தது.சர்சிலிருந்து வந்த அருமையான இசையும், மாலை நேரக்காற்றும், கண்ணுக் ஏட்டிய துரத்தில் தெரிந்த கடலும் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிமிடங்கள்...
மார்ச் 16 ஆதிகாலையில் இலங்கை தமிழ் குடும்பத்தை சந்தித்தேன்... கணவரையும், மகனையும் 1996 இலங்கை போலீஸ் அழைத்து சென்றது இன்றளவும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார்கள்... 23 வயதுள்ள இலங்கை தமிழன் அவர் இலங்கை பற்றி கடுமையை சாடினார். பேஸ்புக் (முகநூல்) அவர்கள் நாட்டில் முழுமையாக தடை செய்யப்பட போவதாக அரிவித்திருக்கிறார்களாம். அதை தடை செய்ய முடியுமா என்று கேட்டார். 2013 வரை இலங்கை மொழி கட்டாயம் கிடையாது. ஆனால் 2014 முதல் அது கட்டயமாக்கப்பட்டுள்ளது என்றார். காலை 5 மணிக்கு மற்றொரு கூட்டம் சர்சில் மீண்டும் கூடியது. பின் அனைவருக்கும் நற்செய்து வழங்கி திருவிழாவை முடித்து வைத்தனர்.காலை உணவாக பிரட்பாக்கெட்,ஜாம் டின்னும் கொடுத்தார்கள்.நாங்களும் எங்கள் மூட்டை கட்டிக் கொண்டு நீங்க நினைவுடன் கச்சத்தீவை விட்டு கிளம்ப ஆரம்பித்தோம்.
வரும் வழியில் இலங்கை ரானுவம் மற்றும் சுங்கத்துறை எங்களை எந்த சோதனையும் செய்வில்லை அவர்கள் எங்களிடம் கேட்டது மறுபடியும் அன்னா வருவீர்களா என்ற கேள்வி மட்டும் தான் சிரித்துக்கொண்டே பின் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் உங்கள் நாட்டு காசு அதாவது நாணயம் இருந்தால் எனக்கு கொடுங்கள் என்றார். அதற்கு நான் நீங்கள் அதை வைத்து என்ன செய்யப்போகீறீர்கள் என்றேன். பின் நான் ஒரு ரூபாய் நாணயத்தை ஒருவருக்கு கொடுக்க அதை அவர் அணிந்திருந்த டாலர் செயினில் கச்சத்தீவு நினைவாக மாட்டிக்கொள்ளப்போகிறேன் என்றார்.அங்கிருந்த இரண்டு நாட்களும் இலங்கை போலீசார் மற்ற அதிகாரிகளையோ லத்தி கம்போடு பார்க்கவில்லை.. பிறகு எங்களுகான படகில் ஏறி இந்தியா திரும்பினோம்... மறுபடியும் நம் அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள்..சோதனையின் போது நம் அதிகாரிகள் கேட்ட கேள்விகள் தான் முகம் சுளிக்க வைத்தது...
இலங்கை அரசு உங்களை எப்படி நடத்தியது. கடுமையான சோதனை செய்தார்களா, நல்ல குடிநீர் கொடுத்தார்களா, உணவு கொடுத்தார்களா, வேறேதும் தொந்தரவு கொடுத்தார்களா, அதிகாரிகள் அதிகாரத்துடன் உங்களிடம் காட்டமாக நடந்து கொண்டார்களா, எப்படி உங்களை அவர்கள் நடத்தினர் என்றனர். ஒரு அதிகாரி என்னிடம் வந்து ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க சொல்லுங்க என்றார். ஏதாவது குறைகள் இருந்தா என்னிடம் சொல்லுங்க என்று படி மற்றொருவர் வந்தார் நான் கேட்டேன் குறை இருந்து அதை உங்களிடம் கூறினால் என்ன செய்வீர்கள் என்றேன் அதற்கு அவர் இதை அரசிடம் நான் சொல்லுவேன் என்றார். அப்போது நான் சொன்னேன் இலங்கை தமிழர்களை விட இந்திய தமிழர்களை அவர்கள் இலங்கை மக்கள் போல் தான் பேனி பாதுகாத்து பக்குவமாக அனைத்து விசயங¢களையும் எங்களுக்கு செய்து கொடுத்தார்கள். ஒரு இடத்தில் கூட நீ இந்திய நீ இலங்கை என்று பாகுபாடில்லாமல் நடந்து கொண்டனர். என் பின்னால் வந்ததவர் நான் ஒன்றை சொல்லலாமா என்றார் ம்ம்ம் தாராளமாக என்றார் அந்த அதிகாரி இலங்கையில் ஒரு திருவிழாவிற்கு அந்த அரசு எப்படியும் நமது ரூபாய் மதிப்புக்கு 10 கோடி ரூபாயவது செலவு செய்திருக்கும் அதை அந்த அரசு முழு மனதுடனோ அல்லது முழு மகிழ்ச்சியுடனோ நம் இந்திய மற்றும் தமிழர்களுக்காக செய்தது. இதை போல் இந்தியாவில் இலங்கை மக்கள் ஒரு திருவிழாவிற்கு வருகை தந்தால் இந்தியா அவர்களை எப்படி நடத்தும் ஒரு வேளை சாப்பாடாவது கொடுக்குமா, அல்லது ஒரு வேளை தண்ணீராவது கொடுக்குமா இந்த இந்திய அரசு ஒன்றுமே செய்யாது தமிழன் என்றால் இந்தியா அரசுக்கே பிடிக்காது என்று வேதனையுடன் சொல்லிக் கொண்டு இதையும் உங்க அதிகாரியிடம் சொல்லுங்க சார் என்று மீண்டும் சோதனை கூடத்திற்கு சென்றோம். மீண்டு எங¢களை முழுமையாக சோதனை செய்யப்பட்டது. நான் கத்தீவில் கொடுத்து காலை உணவை அப்படியே எடுத்து இந்தியா வந்துவிட்டேன் அந்த பிரட்டை நம் இந்திய அதிகாரிகள் நசுக்கி மாவாக்கிவிட்டனர் பின் ஜாம் பாக்கெட் இதை பாத்தவுடன் ஒருவர் இதை திறந்து காட்டு, மற்றொருவர் இதை எடு¢த்துச் செல்ல அனுமதிக்கமுடியாது என்றார். மொத்தத்தில் இந்தியா கச்சதீவை விட்டு கொடுக்கவில்லை அதை பாதுகாப்பான அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர் என்றே கூறலாம். சரி ஒரு நாள் கச்சத்தீவுக்குப் போய் பார்த்து இலங்கையை பற்றி ஆகா, ஓகோ என்று கூறுகிறேன் என்கிறீர்களா சரி ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்களே..........
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

தொகுப்பு
செல்வன்
தகவல் & புகைப்படங்கள்
சதீஸ்
Comments