நோட்டாவுக்கு 60 லட்சம் ஓட்டு...

நாட்டில் 60லட்சம் வாக் காளர்கள் எந்த வேட்பாளருக் கும் வாக்களிக்க விரும்பவில் லை என்கிற நோட்டா பொத் தான்களை பயன்படுத்தியுள் ளனர்.மக்களவைத் தேர்தலில் 21கட்சிகள் பெற்ற வாக்கு கள் எண்ணிக்கையை காட்டிலும் இந்த நோட்டா எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.59லட்சத்து 97ஆயி ரத்து 54 வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்கிற நோட்டா பொத்தான் களை தேர்வு செய்துள்ளனர். மொத்தம் உள்ள 543 மக் களவைத்தொகுதிகளில் பதி வான வாக்குகளில் இது 1.1 சத வீதம் ஆகும்
.புதுச்சேரியில் அதிகப் பட்சமாக 3சதவீத வாக்கா ளர்கள் நோட்டா பொத்தானை அழுத்தி உள்ளனர். அங்கு 22ஆயிரத்து 268 வாக்காளர் கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என பதிவு செய்துள்ளனர்.இதனையடுத்து மேகால யாவில் 2.8சதவீதம் (30,145) குஜராத் 1.8 சதவீதம் (4,54,880) சத்தீஸ்கர் 1.8 சதவீதம் (2, 24,889) தாத்ரா நாகர்ஹவேலி 1.8 சதவீதம் (2,962 வாக்குகள்) பேர் நோட்டாபொத்தான்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.இதனைப்போன்றுநோட்டா பொத்தான்களை தேர்வு செய்த வாக்காளர்கள் பீகார் 1.6 சத வீதம் ( 5,81’ ,011) ஒடிசா 1.5 சத வீதம் (3,32,780) மிசோரம் 1. 5 சதவீதம் (6,495வாக்குகள்) ஜார்க்கண்ட் 1.5 சதவீதம் (1,90,927) டாமன் அண்ட் டையூ 1.5சதவீதம் (1316 வாக் குகள்) சிக்கிம்1.4சத வீதம் (4332 வாக்குகள்) தமிழ்நாடு 1.4 சதவீதம்(5லட்சத்து 82,062 வாக்குகள்) மத்தியப் பிரதே சம்1.3சதவீதம்(3,91,837 வாக்குகள்)திரிபுரா 1.2சதவீதம் (23,783 வாக்குகள்) கேரளா 1.2 சத வீதம் (2,10,561 வாக்குகள்) கோவா 1.2சதவீதம் (10,103 வாக்குகள்) ராஜஸ்தான்1 .2 சதவீதம் (3,27,902வாக்குகள்) உத்தரகாண்ட்1 .1சதவீதம் (48,043வாக்குகள்)


மேற்கு வங்க மாநிலத்தில் 1.1 சத வீதம் (5,68,26 வாக்குகள்) அரு ணாசலப் பிரதேசத்தில் 1.1 சதவீதம் (6,321வாக்குகள்) பேர் நோட்டா பொத்தான்களை அழுத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள்.யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் 0.3சதவீதம் (123வாக்குகள்) நோடா வாக்கு களாக பதிவாகியுள்ளன. ஹரி யானாவில் 0.32சதவீதம் (34,225வாக்குகள்) நாகாலாந்து 0.3சதவீதம் (2,696வாக்குகள்) பஞ்சாப் மாநிலத்தில் 0.4சதவீ தம் வாக்குகள் (58,754 வாக்கு கள்) நோட்டா வாக்குகளாக பதிவாகி இருக்கின்றன.

குஜராத்தில் உள்ள வதோ ரா மக்களவைத்தொகுதியில் மோடி வெற்றி பெற்றார். அங்கு 2வது இடத்தை நோட்டா வாக்குகளே இடம் பெற்றன. அங்கு18ஆயிரத்து 53 வாக் காளர்கள் யாருக்கும் வாக்க ளிக்க விரும்பவில்லை என பதிவு செய்துள்ளனர்.3வது இடத்தை காங் கிரஸ் வேட்பாளர் மதுசுதன் மிஸ்திரி பெற்றார்.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments