யாருக்கு ஓட்டு போடலாம்...

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக வேகாத வெயில்ல பிரச்சாரம் செய்து ஓய்து போனார்கள் அரசியல்வாதிகள். அடுத்து வாக்காளர்களாகிய நம்ம வேலை தான் பாக்கி...
இந்த முறை தமிழக வாக்காள பெருமக்களுக்கு கொஞ்சம் சிரமமான வேலைதான். முன்பெல்லாம் அ.தி.மு.க. விட்ட திமுக தான். இந்த முறை 5 முனை போட்டி...
கடந்த மக்களவை தேர்தல்ல நாம் என்ன தப்பு பண்ணினோம்னு தெரிந்தால் அதை திருத்திக்கலாம்இல்லையா?
நடந்து முடிந்த 15 வது மக்களவை  தேர்தலில் 58.4 சதவீதம் வாக்காளர்கள்    வாக்காளித்துள்ளார்கள் , கல்லூரிவரை படித்தவர்கள் 60 சதமும், படிக்காதவர்கள் 55 சதமும் வாக்களித்தது தேர்தலில் சிறப்பு அம்சமாகும்,இந்தியா முழவதும் 369 அரசியல் கட்சிகள் 8070 வேட்பாளர்களை நிறுத்தினர். அதில்  36   கட்சிகள் மட்டுமே  மக்களவைக்கு தங்கள்  உறுப்பினர்களை அனுப்ப முடிந்தது, தற்போதுள்ள   அளும்கட்சியுமம்(காங்கிரஸ்), எதிர்கட்சியும் (பிஜேபி) சேர்ந்து பதிவான வாக்குகளில் 48 சதம் மட்டுமே பெற்றுள்ளன என்பது நமது தேர்தல் நடைமுறையில்   உள்ள  பலவீனம்
             நாம் தேர்தலில் வெற்றி பெறச்செய்த மக்களவை உறுப்பினர்களின் தகுதிகளை பார்க்கலாம் மொத்த வாக்குகளில் 20 சதவீதத்திற்க்கும் குறைவான வாக்குகளை பெற்று     வெற்றி பெற்றோர் 125 பேர்  என்ற செய்தி தேர்தல் முறைகளில் உள்ள மிகப்பெரிய தவறுகளை   காட்டுகிறது, 15 வது மக்களை உறுப்பினர்களில் 543 பேரில் 150 பேர் மீது பல்வேறு  கிரமினல் வழக்குகள்  உள்ளன, கடந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை 128  அதாவது 17.2 சதம்  உயர்ந்துள்ளது. இவர்களில் தீவிர குற்றவாளிகள் 73 பேர், குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கபட்ட ஒருவர் மீது 16 கிரிமினல் வழக்குகள்  உள்ளனவாம்?!!!!
தற்போதுள்ள    மக்களவை உறுப்பினர்கள் 543 பேரில் 306 பேர் கோடீஸ்வரர்கள் 14 வது மக்களவையில் இந்த எண்ணிக்கை   154 ஆக இருந்தது, கிட்டத்ட்ட இருமடங்கு  உயர்ந்துள்ளது, இடதுசாரி உறுப்பினர்களை தவிர மற்ற   அனைத்து கட்சிகளிலிருந்தும் கோடீஸ்வரர்கள்   தேர்தேடுக்கப்பட்டுள்ளனர், இது ஜனநாயகத்திற்க்கு முந்தைய மன்னர் ஆட்சி முறையின் ஒர் அங்கமாகிய ஜமீன்தார்களின் ஆட்சியை  நினைவுகொள்ளதக்கதாகும்.


கடந்த முறை நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாமே...

1.கிருமினல்கள் வேண்டாம்

2. கோடீஸ்வரர்கள் வேண்டாம். உண்டியல் அடிக்கும் எளிமையானவர்கள் போதும்.

3.இதுவரை தேர்வு செய்தவர்கள் வேண்டாம்(காங்... பாஜக)

4. மதத்தையும்,ஜாதியையும் பேசுகிறவர்கள் தேர்தலுக்கு பிறகு மதவாதிகளோடு சேற போகிறவர்களும் வேண்டவே வேண்டாம்.

5.தேர்தல் நேரத்தில் கும்பிடுபவர்கள் வேண்டாம்... ரேசன்கடை பிரச்சனை, சாக்கடை பிரச்சனை,விலைவாசி உயர்வுக்கு கொடிபிடித்து போராடுபவர்களுக்கு தான் நமது ஓட்டு

6.வால்மார்ட் போன்ற  அன்னிய நிறுவனங்களை அனுமத்திக்க துடிக்கும் காங்,பாஜக வேண்டாம்

7.ஏழைகளை மேலும் ஏழைகளாக்குகிற...பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குகிற இதுவரை இருந்த இரண்டு கட்சிகளுமே வேண்டாம்.

8.பொதுத்துறை நிறுவனங்களை தனியார்களால் சூறையாட அனுமதிக்கின்ற.. கனிம வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் இரண்டு கட்சுகளுமே வேண்டாம்.

9.கொள்கைகளை பேசி ஓட்டுக்கேட்காமல் நோட்டை காட்டி ஓட்டு கேட்பவர்கள் நமக்கு வேண்டாம்.

10. பல லடசம் விவசாயிகள் தற்கொலைக்கு காரணமான இதுவரை இருந்த இரண்டு அரசுகளுமே வேண்டாம்.

ஏதெல்லாம் வேண்டாம் என்று பட்டியல் போட்டு பார்த்தால் .. யாரை தேர்தெடுக்கலாம் முன்றாவது அணியும் அதில் அடங்கிய இடதுசாரிகளை தேர்வு செய்யலாம்.அல்லது ஆம் ஆத்மி... நாம் அணியும் உடைவிசயத்தில்கூட இதுவரை இல்லாத கலர்,டிசைன் கம்பெனி என் பார்த்து பார்த்து வாங்குகிறோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு  நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஓட்டு போடுவதில் இதுவரை நாம் தேர்தெடுக்காதவர்களை தேர்ந்தெடுப்போமே...அவர்கள் என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாம்.

செல்வன்.


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments