முதல்வர் ஜெயலலிதா அவர்களே செய்வீர்களா .. செய்வீர்களா..

முதல்வர் ஜெயலலிதாவும், அவரது அமைச்சர்களும் ,தொண்டர்களும் கடந்த 6 மாதங்களாக பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஓன்றும் தவறில்லை.முதல்வர் மதியம் 1 லிருந்து 3 மணிவரை 100 டிகிரி வெயில் கொளுத்துகிற நேரத்திலேயே தன் பிரச்சாரத்தை செய்கிறார்.அவருக்கென்ன பக்கத்திலேயே ஏசி,ஏர்கூலர் இருக்கும்.அவரையும்,அவர் பறந்துவரும் ஹெலிகாப்டரை பார்க்கவரும் மக்கள் தான் வறுபடுகிறார்கள்.
முதல்வர் தனது பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் ஒரு கேள்வியை திரும்பத்திரும்ப கேட்கிறார்
. தி.மு.க.,காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து விட்டு நீங்கள் செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா என்ற கேள்வி அது.(மக்கள் யாரும் அ.தி.மு.க. அமைச்சர்களை பார்த்து எங்கள் பகுதிக்கு ரோடு இல்லை.சுகாதராமில்லை என கேள்வி கேட்பதில்லை)நாமாவது சில கேள்விகளை கேட்கலாமே...
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றன. அப்படின்னா என்ன?என்று கேட்கிறீர்களா?நியாயமான கேள்வி.பெரும்பாலன மக்களுக்கு அதை பற்றி தெரியாது. ஏன் கட்சித்தொண்டர்களே பார்த்திருக்கமாட்டார்கள். தேர்தல் அறிக்கையை ஒரு சில பிரதிகள் மட்டும் தயார் செய்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதோடு சரி.(கம்யூனிஸ்ட கட்சியில் அடிமட்ட உறுப்பினர் வரை  தேர்தல் அறிக்கையை விவாதித்து கட்சி மேலிடத்துக்கு அனுப்புகிறார்கள்) முதல்வர்  ஜெயலலிதாவும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை முன்வைத்து முதல்வர் ஜெயலலிதா அவர்களே செய்வீர்களா.. செய்வீகளா என்று கேட்போமே...



1.இந்த முறை முதல்வரான பிறகு மக்கள் நல பணியாளர்கள் ஒட்டு மொத்தமாக டிஸ்மிஸ், கடந்த முறை ஒரே கையெழுத்து 1 லட்சம் ஆசிரியர்கள் டிஸ்மிஸ் மீண்டும் இதே போல செய்வீர்களா.. செய்வீகளா.. முதல்வர் அவர்களே.
2.ஈழத்தமிழர்கள் என்பது சரியல்ல,இலங்கை தமிழர்கள் என்பதே சரி என்றவர். போர் என்றால் பலரும் கொல்லபடுவது  இயற்கைதானே என்றவர் இப்போது தனி ஈழம் கிடைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்கிறார் செய்வீர்களா... செய்வீர்களா..முதல்வர் அவர்களே.
3.பாபர் மசூதியை இடித்துவிட்டு பிஜேபி கட்சியினர் ராமர்கோயில் கட்டுவோம் என்ற போது ராமர் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே போய் கட்டுவது என்றவர். மதமாற்ற தடைச்சட்டம்,ஆடு , கோழி வெட்டத்தடை கொண்டுவந்தவர். உண்மையான மதச்சார்பின்மையை  உங்கள் அறிக்கையாக மட்டுமல்ல செயல்பாட்டிலும் சொய்வீர்களா.. செய்வீர்களா.. முதல்வர் அவர்களே
4.கறுப்பு பணம் மீட்கப்படும் ... லோக் ஆயுதா  ஊழல் ஒழிப்பு சட்டத்தையும் தமிழகத்தில் கொண்டுவரவும் ,உங்கள் சொத்து குவிப்பு வழக்கையும் விரைந்து முடிக்கவும் வழி செய்வீர்களா..செய்வீர்களா.. முதல்வர் அவர்களே.
5.டாஸ்மாக் கடைகளை அதிகம் திறப்பதை குறைக்கவேண்டும். இலவசங்களுக்கு பதிலாக வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தாலாமே செய்வீர்களா .. செய்வீர்களா முதல்வர் அவர்களே..
இந்திய முழுவதும் பிரதமர் நாற்காலிக்கு பலரும் மல்லுக்கட்டி கொண்டிருக்க.ஏன் முதல்வர் ஜெயலலிதா பிரதமராக கூடாது. அப்படியானால் பொதுமக்களின் பலரும் கேட்க விரும்பும் பல கேள்விகளில் சிலமட்டும் தொகுத்திருக்கிறேன்.பிரதமரானால் முதல்வர் செய்வார் என்ற எதிர்பார்போடு....

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

அதிமுக வின் தேர்தல் அறிக்கை 2011: செய்தீர்களா? செய்தீர்களா?
http://www.slideshare.net/PattabiRaman1/aiadmk-election-manifesto-tamil-nadu-state