5 வருடத்திற்கு இடுப்புத்துணியுடன் அலையப்போகிறீர்களா?

அன்று காலை வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அந்த மனிதரை, “மாமா வாங்க மாமா” என வரவேற்றான் ஒரு இளைஞன். அந்த மனிதருக்கு அவன் யாரென்றே தெரியவில்லை. “உன்னை எப்பொழுதும் நான் பார்த்தது இல்லையே” எனக் கூறினார். அதற்கு அந்த இளைஞன், “என்னைத் தெரியவில்லையா மாமா நான் உங்களின் முன்னா, என்னை நீங்கள் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டதால் உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை” எனக் கூறிய வாறே, முன்னா, மாமாவின் (அந்த மனிதர் தான்!) பெட்டி படுக்கைகளை கையில் எடுத்துக் கொண்டான். மாமாவும் முன்னா எடுத்துக் கொண்ட உரிமையை உண்மை என நம்பி அவன் பின்னால் போனார். பகல் முழுவதும், வாரணாசி ஊரைச்சுற்றிப் பார்த்தனர்.
கோவிலுக்குச் சென்றனர். கடைசியில் முன்னா கேட்டான். “காசிக்கு (வாரணாசி) வந்தவர்கள் கங்கையில் குளிக்காமல் செல்லலாமோ? என்றான். அதற்கு மாமா “நீ சொல்வது சரிதான்“ என பயபக்தியுடன் ஒப்புக் கொண்டவர், முன்னாவிடம் தான் அணிந்திருந்த உடை முதற்கொண்டு பெட்டி படுக்கை அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, இடுப்பில் கட்டிய துண்டுடன் கங்கையில் குளிக்கப்போனார்.கங்கையில் ஒருமுறை மூழ்கி எழுந்தவர், கரையைப் பார்த்தார். அங்கே முன்னா இல்லை. பதறிப்போனவர், கரைக்கு வந்து பார்த்தார். அவரது உடமைகள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு முன்னா ஓடிவிட்டது தெரிந்தது. கரையில் இருந்த மனிதர்களிடம், “இங்கே இருந்த முன்னா எங்கே காணோம்? எனக் கேட் டார். அவர்கள், “எந்த முன்னா? என திருப்பிக் கேட்டார்கள், அதற்கு இவர், “என்னை மாமா என்று அழைத்துக் கொண்டு வந்தானே அந்த முன்னா” என்றார். அதற்கு அவர்கள், “எங்களுக்கு முன்னா என்பவனைத் தெரியாது.


அதுசரி நீங்கள் யார்? என வினவினர். “அது தான் சொன்னேனே “அந்த முன்னாவின் மாமா” என்று ஆத்திரத்துடன் பதில் கூறினார். “அப்படியானால் மாமாவாகிய நீங்களே உங்களின் முன்னாவைத் தேடுங்கள்” எனக் கூறிவிட்டு கலைந்து சென்றனர்.அந்த மனிதர் (முன்னாவின் மாமாதான்!) இடுப்புத் துண்டுடன் வாரணாசி வீதிகளில், முன்னாவைத் தேடிக் கொண்டே இருந் தார். முன்னா கிடைக்கவில்லை. இதில் முன்னாஎன்பவன், தேர்தல் காலங்களில் மட்டும் வரும் அரசியல்வாதி என்றும், அந்த அப்பாவிமனிதர், வாக்காளப் பெருமக்கள் என்றும்,அவரது உடமைகள் தான் வாக்குச்சீட்டுக்கள் என்றும் குறியீடுகளாக காட்டியிருக்கும் கதா சிரியர், “ஐந்து வருடங் களுக்கு ஒரு முறை வரும் தேர்தலின் போது விழிப்புடன் இல்லாமல் முன்னாவைப் போன்ற அரசியல்வாதிகளிடம், வாக்குச் சீட்டு எனும் உடமைகளை இழந்து போனால், அடுத்த ஐந்து வருடத்திற்கு, இடுப்புத் துண்டுடன் வீதிகளில் அலைய வேண்டிய நிலை ஏற்படும்“ என்பதை கதையின் கருத் தாக வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலத்திற்கு முன்னர் எழுதப்பட்ட இக்கதையின் ஆசிரியர் சரத்ஜோஷிக்கு, எதிர்காலத்தில், மோடி என்ற பெயரில் முன்னா வாரணாசியில் போட்டியிடுவார் என தெரிந்துள்ளது. இப்பொழுது ஒரு கேள்வி மட்டும் எழுகிறது. வாரணாசியின் வாக்காளப் பெருமக்கள்தங்களின் உடமைகளை மோடியிடமிருந்து, மன்னிக்கவும் முன்னாவிடமிருந்து பாதுகாத்து கொள்வார்களா? இல்லை அடுத்த ஐந்து வருடத்திற்கு எல்லா வற்றையும் இழந்து இடுப்புத் துணியுடன் அலையப் போகிறார்களா? இந்தக் கேள்வி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.

வரத.இராஜமாணிக்கம்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Nasar said…
Well said...." Precaution is better than cure " vote for either cong or aap...
Ignore bjp
Anonymous said…
http://viyaasan.blogspot.com/2014/04/blog-post_7.html
Anonymous said…
Very GOOD. Pl Go to Good Psycho Doctor immediately. (for others safety). i think SUN is TOO much. /Seshan/
கோவி. said…
அப்படியானால் , யாருக்கு ஓட்டுப்போட்டால் இடுப்பில் துணி நிற்கும் என்பதையும் தெளிவுபடுத்தலாமே.-கோ.
Anonymous said…
அப்படியானால், யாருக்கு ஓட்டுப்போட்டால் இடுப்பில் துணி நிற்கும் என்பதை தெளிவுபடுத்தலாமே.ஏனென்றால் யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் குழம்பிப்போய் உள்ளார்கள்.