கருவாட்டுக்கூடையை சுற்றிவரும் நரேந்திரமோடி.....

கருவாட்டுக்கூடையை சுற்றிவரும் பூனையைப்போல.கன்னி யரை சுற்றவரும் காளையர்களை போல, பூக்களை சுற்றிவரும் தேனீக்க¬ளை போல ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நரேந்திரமோடி தமிழகத்தை சுற்றி,சுற்றி வந்து  கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சிக்குள் அத்வானிக்கும், மோடிக்கும் நடந்த பல கைகளப்புகளுக்கு பிறகு பிரதம வேட்பாளராக தேர்தேடுக்கபட்டார்.(பிரதம வேட்பாளர் தேர்வு என்பதே முதலில் தவறு. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி எம்.பி.கள் சேர்ந்தே ஒரு பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.)
அதன் பிறகு மூன்று முறை தமிழகம் வந்து சென்றிருக்கிறார் மோடி.முதலில் திருச்சிக்கு ... வேதாரண்யத்தில் வ.வு.சி உப்புகாய்ச்ச போனார்  போன்ற தவறான தகவல்களை உளரிக்கொட்டினார். பின்பு அருண்ஷோரி எழுதிய புத்தகத்த  வெளியிட சென்னை,மீண்டும் சென்னை(வண்டலூர்)வந்து சென்றிருக்கிறார்,முதல் இரண்டு கூட்டங்களில் கூட்டம் அதிகமில்லை அதனால் வண்டலூர் கூட்டத்தில் அழைத்துவரப்பட்டகூட்டம் காட்டியிருக்கிறார்கள்.

மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தானா?..

2002 ம் ஆண்டு  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை முன்வைத்து குஜராத்தில் மூன்று நாட்கள் மதவெறி அமைப்புகள் நடத்திய ரத்த வேட்டையை வேடிக்கை பார்த்தவர் மோடி. குஜராத் கலவரத் தினைத் தூண்டிவிட்டதாக 36 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், 6 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாவார்கள். இதில் டிஎஸ்பியான வன் சாரா என்பவர் சிபிஐக்கு ஒரு கடிதம் எழுதினார். குஜராத்தில் பணியாற்றிய 36 காவல்துறை அதிகாரிகள் போலி என்கவுன்டர் செய்ததாக சிபிஐ வழக்குத்தொடுத்துள்ளது. அதிகாரிகள் மீது வழக்குத்தொடுத்த சிபிஐ, இந்த கலவரத்தினைத் தூண்டிவிட்ட அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.மோடியின் ஆட்சியின் கீழ் வேலைபார்த்த டி.எஸ்.பியே அப்பட்டமான வெளிப்படுத்திய உண்மை.

        இதையும் படியுங்களேன்.....

        1. மோடியின் முகமூடி கிழிக்கும் புகைப்படம்.....

       2.. பாஜகவில் ஆளாளுக்கு வைக்கிறார்கள் ஆப்பு!

       3. காங்கிரஸ் - பாஜக மேட்ச் பிக்சிங்

தனக்கு பிடிக்காதவர்களை,ஓத்துழைக்காதவர்கள் என குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு முதல் 2006 வரை நடந்த போலி எண்கவுண்டர்கள் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ்.பேடி தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்திருக்கிறது ... இது தான் ஊடகங்கள் மோடியை பற்றி பரப்புகிற சிறந்த நிர்வாகிகான அடையாளம் போலும்.

குஜராத் மிக பெரிய அளவில் வளர்ச்சியடைந்த மாநிலம் என்கிறார்கள், அது யாருடைய வளர்ச்சி டாட்டா,அம்பானிகளின் வளர்ச்சி... அங்குள்ள சாதரண மக்கள் எப்படி வறுமையில் இருக்கிறார்கள் என்பதற்கு கடந்த வார ஆனந்தவிகடன் இதழில் வாடகைத்தாய் குறித்த கட்டுரையில் உலகிலேயே அதிக வாடகைத்தாய்கள் கிடைப்பது குஜராத்தில்தான் என்கிறது. மேலும் ரூ50,000 க்கு மிகமிக குறைந்த அளவு பணத்தைபெற்றுக்கொண்டே வாடகைதாயாக சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் குஜராத்தின் வறமை அப்படி..

             ஆனால் இதையெல்லாம் மறைத்து ஊடகங்கள் மோடி அலை வீசுவாத எழுதுகின்றன. பத்திரிக்கை நிருபருக்கு ஒருபடம்,செய்தி வெளியிட ரூ.500 கொடுத்தால் போதும். கூடுதலாக அரைபக்கம்,ஒருபக்க விளம்பரம் கொடுத்தால் பத்திரிக்கை விளம்பரம் கொடுத்தவரை என்னவேண்டுமானால் புகழ்ந்து எழுதும்....

-செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments