கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை பேரூந்து நிலையத்தில் பேரூந்துகாக காத்திருந்த போது வாலிபர்சங்க உறுப்பினர் ( வருத்தப்படாத வாலிபர் சங்கம் அல்ல) என்று தன்னை அறிமுக்கப்படுத்திக்கொண்டவர் ரூ 2க்கு "நாம நல்லாயிருக்க" என்ற 20 பக்கமே கொண்ட சிறு புத்தகத்தை கொடுத்தார்.படிக்க அதிக பட்சமாக 30 நிமிடம் போதும். படித்து முடித்ததும் இந்தியா எப்படிப் பட்ட ஆட்சியில் இருக்கிறது. மோடி போன்ற முதலாளிகளின் கைகூலியை அடுத்த பிரதமர் என சில ஊடகங்கள் பேசி வருகின்றன என்பதை ஆதாரத்தோடு சொல்கிறது ... அதிலிருந்து சில தகவல்கள்...
இந்தியாவின் தற்போதைய அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களையும் அதற்கான சரியான தீர்வையும் கூறியுள்ளனர். ‘வளர்ச்சியின் நாயகன்‘ என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி யாருடைய வளர்ச்சிக்காக உழைத்துள்ளார் என்பதை அட்டையில் இடம்பெற்றுள்ள படங்கள் தெளிவாக விளக்குகின்றன. ஒரு படத்தில் அதிகாரத்தரகர் நீரா ராடியா (ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ்) கால்மீது கால் போட்டு அமர்ந்திருக்க மறுபுறத்தில் இந்தியாவின் பெரு முதலாளிகளில் ஒருவரான ரத்தன் டாடா அமர்ந்திருக்க நடுநாயகமாக அமர்ந்திருக்கிறார் பெருமுதலாளிகளின் கைக்கூலி நரேந்திர மோடி.
இன்னொரு படத்தில் மூஸ்ஸிம்களை கொன்று குவித்த அவருக்கு வீரவாள் பரிசளிக்கப் படுகிறது. இந்த இரண்டு படங்களுமே போதும் மோடியை புரிந்துகொ ள்ள.இன்னொரு படத்தில் மன்மோகன் சிங் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகி யோர் வெற்றி மாலை களோடு புன்னகை பூக்கி ன்றனர். மறுபுறத்தில் குடிநீருக்காக மக்கள் வறண்டு போன கிணற்றை மொய்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுதான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனை. இந்த நூலில். மேற்குவங்க த்திலிருந்து டாடாவின் நானோ கார் தொழிற் சாலை குஜராத்திற்கு சென்ற மர்மம் என்ன என்று கூறப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
நானோ தொழிற்சாலைக்கு டாடாவின் முதலீடு ரூ.2,900 கோடி. ஆனால் மோடி வழங்கிய சலுகை ரூ.9570 கோடி. 20 ஆண்டு தவணையில் கடன், பல்வேறு வரிச்சலுகை மட்டுமின்றி 1100 ஏக்கர் நிலத்தையும் மோடி அரசு தந்துள்ளது. நிலத்தின் சந்தை மதிப்பு 10 ஆயிரம் ரூபாய். ஆனால் மோடி அரசு டாடாவிடமிருந்து பெற்றதோ 900 ரூபாய் மட்டுமே. 20 கோடி முத்திரைக்கட்டணம் தள்ளுபடி வேறு. இப்படிக் கொடுத்தால் டாடா தனது குட்டிக்கார் தொழிற்சாலையை தூக்கிக்கொண்டு குஜராத்திற்கு ஓடமாட்டாரா?டாடாவிற்கு மட்டுமல்ல? எஸ்ஸார், அம்பானி என அனைவருக்கும் நிலத்தை வாரி வழங்கியுள்ளார் மோடி. எனவேதான் மோடியை ‘வளர்ச்சியின் நாயகன்‘ என்று இந்திய முதலாளிகள் கொண்டாடுகிறார்கள். இவர் வந்தால் இந்தியாவை வளைத்துவிடலாம் என்று நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிறார்கள்.முதலாளிகளின் குஜராத் ஒளிர்ந்து கொண்டிருக்க, எளிய மக்களின் குஜராத் இருண்டு கிடக்கிறது. ஏராளமான கிராமங்களில் தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும் தண்ணீர் கூட மேல்ஜாதி, கீழ் ஜாதி அடிப்படையில்தான் வழங்கப்படும்.
சுகாதாரம் படுமோசம். அந்த மாநிலத்தில் 70 சதவீதக் குழந்தைகள் இரத்தச் சோகையால் மெலிந்து கிடக்கின்றன. ரேசன் பொருள் கடத்தலில் முதலிடம் குஜராத்திற்குதான். தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுகிறது என்பன போன்ற விபரங்களை தந்துள்ளதோடு மோடி அரசின் மத வெறி முகத்தையும் விரிவாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்நூல்.காங்கிரஸ் அரசின் கொள்கைகளால் நாடு படும் பாட்டையும் விரிவாக எடுத்துரைத்துள்ளது இந்தநூல். காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் பொருளாதார கொள்கையில் ஒத்தக்கருத்து இருப்பதை இந்த நூல் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளது. இந்த நூல் உரையாடல் பாணியில் அமைந்துள்ளது இந் நூலை கொடுத்த சென்ற வாலிபர் .... வருத்தபடாத அல்ல வருத்தப்படுகிற வாலிபர் சங்கம் உறுப்பினராக இருக்கலாம். உங்களுக்கும் கிடைத்தால் படித்து பாருங்கள்.
-தொகுப்பு செல்வன்
Comments