அழகிரி தான் தி.மு.க.வின் அடுத்த தலைவர்....

அழகிரி தான் தி.மு.க.வின் அடுத்த தலைவர்..கருணாநிதி திடீர் அறிவிப்பு. அழகிரிக்கு பிறந்த நாள் பரிசு(ஜன.30) என கலைஞர் தகவல். கட்சியிலிருந்து நீக்கபட்டவருக்கு எப்படி தலைவர் பதவி.என்னப்பா இது ... ஸ்டாலின் 3.. 4 மாதங்களில் இறந்து போவார்,கருணாநிதியை மிரட்டினாரா?..தி.மு.க தோற்கும், அதிமுகவுக்கு மறைமுகமாக ஸ்டாலின் உதவுகிறார் ... இப்படி மு.க. அழகிரி பேசியதாகவும் .அதற்கு கருணாநிதி அழகிரி பேசியதை கேட்டு என் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது என்றும் பேட்டி பரபரப்புகளுக்கு கிடையே இப்படி ஒரு முடிவா?

                 ஒரு கல்லுல ரெண்டுமாங்கா தட்டுனாதா கேள்விப்பட்டுயிருப்பிங்க... ஒரு கல்லுல ஒரு தோப்பையே தட்டுர ஆளு கலைஞர் கருணாநிதி. தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் (தி.மு.க.வை பொறுத்தவரை கட்சிதான் குடும்பம்.. குடும்பம் தான் கட்சி) பிரச்சனைகளை உருவாக்கி அதன் விளைவுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார் கலைஞர்.


      சன்டிவி புகழ் மாறன் சகோதரர்களோடு பிரச்சனை வந்த போது அண்ணா அறிவாலயத்திலிருந்து சன்டிவி அலுவலகத்தையே காலி செய்ய வைத்தார். அவர்களுக்கு போட்டியாக கலைஞர் டிவி ஆரம்பித்தார். மாறன் சகோதரர்களை பற்றி தினசரி முரண்பாடன அறிக்கைகளை தட்டினார். கடைசியில் கண்கள் பனிந்தன.. இதயம் இனித்தது என சொல்லி மாறன் சகோதரர்கள்,,ஸ்டாலின்,அழகிரி என ஒட்டுமொத்த குடும்பமே புகைப்படத்தில் சிரித்து போஸ்கொடுத்தார்கள்.

கனிமொழியின் அம்மா ராஜாத்தியம்மாள் மனசங்கடப்பட்ட போது சமதானம் செய்யும் விதமாக மாநிலங்களவை எம்.பி. ஆக்கபட்டார் கனிமொழி. ஏன் இதற்கு முன்பே பல முறை அழகிரி, ஸ்டாலின் பிரச்சனை வந்தபோது இருவரும் மாறி,மாறி திட்டிக் கொள்வார்கள். பிறகு இருவரும் பிறந்த நாள்வாழ்த்து சொல்ல சிரித்து போஸ் இப்படி எத்தனையோ முறை பார்த்தாயிற்று.
                 இப்படியெல்லாம் நடந்திருக்கும் போது அழகிரி தி.மு.க.வின்  தலைவராக நியமிக்கபடமாட்டரா.கருணாநிதி இதுக்கும் எதாவது ஒரு பஞ்ச் டயலாக் எழுதிக் கொண்டிருப்பார்.அரசில்ல இதுதெல்லாம் சகஜமாப்பா....



இந்த இடத்தில் இன்னொன்றை சொல்லியாக வேண்டும்.. இந்த குடும்ப பிரச்சனைக்கு ஒரு பிரதான காரணம் மதுரையில் நடக்கின்ற போஸ்டர் யுத்தம். ( அழகிரிக்கும்,ஜெயலலிதா பிறந்த நாளுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே மதுரை சுவர்களில் பிறந்த நாள் கொண்டாட்ட தகவல் வரைந்துவிடுவார்கள். ஒரு முறை அழகிரிய¤ன் பிறந்த நாளுக்கு மதுரையில் அனைத்து மேம்பாலங்களிலும் சீரியல் செட்( வண்ண விளக்குகள்) பேட்டிருந்தார்கள் அது அற்புதமான காட்சி??????) அழகிரியை தற்காலிக நீக்கம் செய்த போது கோழி மீதித்து குஞ்சு சாகுமா... என்றும் . பூம்புகாரை வென்றவரே உன்னை வெல்லயாரலும் முடியாது என்றும் போஸ்டர்கள் பறக்கும்.
மேலும் நிலழே,நிஜமே.வல்லவரே.சூரியனே, எங்கள்அண்ணே,தமிழகத்தின் ஓபாமாவே, பூம்புகரே, அஞ்சநெஞ்சரே,விஸ்வரூபமே,எங்கள் உயிரே,தைரியமே,உதிரமே,தீர்மானமே,எஜமானே,தெய்வமே,.... இப்படி சொல்லி கொண்டே போகலாம்... அ.தி.மு.க பக்கம் ஒருவர் இருக்கிறார் உலக தலைவர்கள் எல்லாம் முதல்வர் ஜெயலலிதாவோடு  ஆலோசனை செய்வதா போஸ்டர் ஒரே நாளில் தமிழ முழவதும் ஒட்ட கூடியவர். இது போக கல்யாணம்,காதுகுத்து,பூப்பூனித நீராட்டுவிழா போஸ்டர்கள், பிளாக்ஸ் போர்கள் வேறு. மதுரை வந்தவர்கள் பார்த்திருக்கலாம்.வரதவரகள் வந்த பாருங்க... சங்க வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் போஸ்டர் அடித்தே தமிழ்வளர்க்கிறார்கள்..

         
              ஓகே.. இப்ப என்ன சொல்ல வர்றேன்ன.. மு.க. அழகிரி தி.மு.க. தலைவராகலாம்,ஏன் தமிழக முதல்வராக கூட ஆகலாம் அப்படி ஆனா தமிழ்நாட்ட அந்த  ஆண்ட....
இன்னொரு விஷயம் இந்த போஸ்டர் யுத்தத்தை பார்க்க மதுரைக்கு வாங்க....

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

இப்படித் தான் தமிழ் வளரும் போல... ஹா... ஹா... கொடுமை...!
ராஜி said…
மதுரையில் போஸ்டர் யுத்தத்தை பார்த்திருக்கேன். அண்ணனோடு அண்ணன் மகனுக்கும் சேர்த்து போஸ்டர்ல கலக்கி இருந்தனர்
நாளை இதுவும் நடக்கலாம்
உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மிக்க நன்றி தனபாலன்