வைகோவும் - வீரமங்கை வேலுநாச்சியாரும்...

பொங்கல் முடிந்த சில தினங்களில் கடந்த 18ம் தேதி மதுரை திருமங்கலத்தில் வீர மங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் நடைபெற்றது. தலைமையேற்று நிகழ்த்தியவர் வைகோவும் அவரது கட்சிகாரர்களும் தான். ஊர் முழுக்க வைக்கப்பட்ட விளம்பரங்களில் ம.தி.மு.க. கட்சிக் கொடியோ,சின்னமோ இல்லை. வைகோ வாழ்க என்ற கோஷம் போட்டவர்களை கூட அதட்டி தடுத்தார் வைகோ. அது வரையும் சரிதான். ஆனால் .... இந்த ஆனாலுக்கு முன்னால் வேலுநாச்சியார் பற்றி சுருக்கமாக...

 பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்.ஜான்சி ராணி தோன்றுவதற்கு, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் தோன்றி, வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் . தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.

1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு பிறந்தார் வேலுநாச்சியார். பிறப்பில் பெண்னாக இருந்தாலும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஒரு ஆணுக்குறிய அத்தனை பயிற்சியும் கற்று தேர்ந்தார் ஆயுதப் பயிற்சியையும் பெற்றார்; பல மொழிகள் கற்று கல்வியிலும் சிறப்புற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத்தேவருக்கு மனைவியானார்.

                    வேலுநாச்சியார் நாட்டிய நாடக்தின் சில படங்கள்.....  


1772ல் ஆங்கிலேயர் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார்.அப்போது அவருக்கு அடைக்கலுமும், அவரது மகளுக்கு பாதுகாப்பும் கொடுத்தது திண்டுக்கல் கோபால் நாயக்கர்.  ஆங்கிலேயரின் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது.  சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார் தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.

                     இந்த வீரகாவியத்தில் வேலுநாச்சியார் மூக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர். கோபால் நாயக்கர்,ஹைதர்அலி, வேலு நாச்சியாரை காட்டிக்கொடுக்காத உடையாள், தற்கொலைபடையாக மாறி ஆயுத கிடங்கை அழித்த குயிலி இரண்டு பெண்களும் தலித்கள் என சாதி,மத பேதமற்ற காவியம்.

முஸ்ஸிம்களை வேட்டையாடிய மோடி......
                   
இந்த நாடகத்திற்கு தலைமேற்ற வைகோ  பேசியபோது ... சாதி,மத பேதமற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு இளைஞர்க்கு விழிப்புணர் ஏற்படுத்தவே இந்த நாடத்தை நடத்துவதாக பேசினார். நல்லது வைகோ ஆனால்..ஆனால் வைகோ இப்போது மதத்தின் பேயரால் ஆயிரக்கணக்கான முஸ்ஸிம்களை வேட்டையாடிய மோடிக்கும் அவரது  உயர் சாதி இந்துகளின் கட்சியான பாரதியஜனதாவுக்கும் கொடிபிடிக்கிறார்.பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தந்தை பெரியாரை மிகமிக இழிவாகப் பேசியிருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறிக்கொள்ளும் வைகோ இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதற்காக கண்டனம் முழங்கும் வைகோ பெரியாரை செறுப்பால் அடிக்க வேண்டும் என்று பேசிய பிறகும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? சேது சமுத்திரத் திட்டத்திற்காக போராடியவர்,பாஜகாவுடன் சேர்ந்தபிறகு  சுற்றுச்சூழல் பிரச்சனை இருப்பதாக பேசத் துவங்கிவிட்டார்.
இப்போதுதான் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளும் பாசிகளும் இருப்பது இவருக்கு தெரியவந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக மூழ்கினால் ராமர் கட்டிய பாலமும் கூட அவருக்கு தெரியக்கூடும். இன்னும் தொகுதிப்பங்கீடு கூட முடியவில்லை அதற்குள் வைகோ.... ஒருபுறம் சாதி,மத பேதம்மற்ற வேலுநாச்சியார் நாடகம் மறுபுறம் மோடியுடன் ...

செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Barari said…
வை.கோ வித்தியாசமான அரசியல்வாதி என்று நினைத்தால் அவரும் சராசரியாகி விட்டார்.ஒரு முது மொழி சொல்வார்கள்.பன்றியுடன் சேர்ந்தால் பசுவும் ( எதையோ) தின்னுமாம் அது போல் ஆகி விட்டது.
வைகோ "நாடகத்திற்கு" காரணம் தான் தெரியவில்லை...
அமைதியாக இருந்தால்தானே 5, 6 சீட்டுகளாவது பெறமுடியும்..!!
ஏதாவது பேசி, கூட்டனியைவிட்டு துரத்திவிட்டால் என்ன செய்வது..!!? அதனாலதான் அமைதியாக இருக்கிறார்..