மீண்டும் சுனாமி- அனுபவிக்க காத்திருங்கள்....

கடந்த 2006 ம் ஆண்டு தாக்கிய சுனாமி தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல இடங்களை உருத்தெரியாமல்  செய்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோகர்நாத் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை இமயமலை சுனாமி என்கிறார்கள், அதை சரிசெய்ய பல ஆண்டுகளாகலாம். அதே போல தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையே தாக்க பொருளாதார சுனாமி தாக்குதல் வந்துள்ளது. இந்த சுனாமியில் பெரும் வசதிபடைத்தவர்களை  தவிர யாரும் தப்பிக்க இயலாது.
   அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.66 ஆக சரிந்தது.கடந்த வார வர்த்தகத்தில் அமெ ரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 66 ஆக வீழ்ச்சி அடைந்தது. ரூபாய் மதிப்பு சரி வால் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து வருகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சரிவில் இருந்து லேசாக மீண்டு ரூபாய் மதிப்பு 64 ஆக இருந்தது. திங்களன்று மீண்டும் சரிவு ஏற் பட்டு ரூபாய் மதிப்பு 64.31 ஆக இருந்தது. செவ்வாயன்று மேலும் வீழ்ச்சி அடைந்து ரூபாய் மதிப்பு 66 ஆக சரிந்தது. அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து, எண்ணெய் நிறு வனங்களும், இறக்குமதியாளர்க ளும் அதிக அளவில் டாலர்களை வாங்கி வருவதால் டாலருக்கு கிராக்கி அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்து உள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதால், வெளிநாடு களில் இருந்து இறக்குமதியாகும் எண்ணெய் உள்ளிட்ட அனைத் தின் விலைகளும் கடுமையாக உயரத் தொடங்குகின்றன.எலக்ட்ரானிக் பொருட்களின் விலையும் கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது.



ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கடந்த மாதம் பெரிய அளவில் இருந்த போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட் ரானிக் பொருட்கள் விலை உயர்ந் தது. தங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட எலக்ட்ரானிக் பொருட் கள் தயாரிப்பு நிறுவனங்கள் 3 சதவீதம் வரை விலையை உயர்த் தின. குறிப்பாக செல்போன், டி.வி., லேப்- டாப், கம்ப்யூட்டர் உதிரிப்பா கங்கள், பிரிண்டர்கள் விலை உயர்ந் தது. தற்போது மீண்டும் இந்த பொருட்களின் விலைகளில் மாற் றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.தீபாவளிப் பண்டிகை நெருங் கும் நிலையில், அந்த சமயத்தில் விலையை உயர்த்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் இப் போதே விலையை உயர்த்த தீர் மானித்துள்ளனர்.வசதி படைத்தவர்கள் அந்நிய கரன்சியில் முதலீடு செய்து வருவதும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக் கிய காரணம்பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற் றின் விலை மேலும் உயரும் என்று அபாய சங்கு ஊதப்படுகிறது. பவுண்ட்டுக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.106ஆக சரிந்தது. யூரோவிற்கு நிக ரான இந்திய ரூபாய் 92 ஆக சரிவைப்பெற்றது.சுவிஸ் பிராங்க் மதிப் பில் ரூ.75 எனவும் கனடா டாலர் மதிப்பில் ரூ.65 என வும் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் ரூ.60 எனவும் நியூ சிலாந்து டாலர்,சிங்கப்பூர் டாலர், புருனை டாலர் மற் றும் லிபியன் தினார் மதிப் பிலும் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50க்கும் கீழே இறங்கியது.ஒரு குவைத் தினார் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.240க்கு அதிகம் என்ற நிலையை எட்டியது. பக ரைன் கரன்சி தினாருக்கு நிகரான மதிப்பில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.180க்கும் மேல் சரிந்தது.
ஓமன் கரன்சி ரியால் மதிப்பில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.175ஆக குறைந்தது. லாட்வியா நாட்டின் கரன்சியான லாட் மதிப்பில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.130 ஆக குறைந்தது.

                     நிதி அமைச்சர் ப.சிதம்பரமும்,பிரதமர் மன்மோகனும் நிலைமை தானாகவே சீராகிவிடும். மக்கள் பீதியடையவேண்டாம் என்று கூறியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அதாவது காங்கிரஸ் கூட்டணி அரசின் கலாகட்டத்தில் 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் என்னவெல்லாம் நடக்க போகிறதோ. ரூபாய் மதிப்பு குறைகுறைய விலைவாசிகள் உயர்ந்து பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது... அனுபவிக்க காத்திருங்கள்.

 - செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்



Comments

ராஜி said…
இந்த பாதிப்பிலிருந்து மீள வழியில்லையா?!
bandhu said…
தமிழ் மனத்தில் வரும் பதிவுகளையும் தமிழ் நாளிதழ்களையும் பார்க்கும்போது இந்த பொருளாதார சுனாமியின் கொடுமைகளை பெரும்பாலோர் அறியாதிருக்கிறார்கள் என தோன்றுகிறது. கடந்த மூன்று மாதத்தில் ரூபாயின் மதிப்பு 17% குறைந்திருக்கிறது. குறைந்த பட்சம் அந்த அளவாவது எல்லா பொருட்களும் விலை உயர்வதை தடுக்க முடியாது.
டாட்டா,ரிலையன்ஸ் அம்பானி போன்ற முதலாளிகளுக்கு வருடத்திற்கு 5 லட்சம் கோடி வரிசலுகை தருகிறார்கள் அதை நிறுத்தவேண்டும். நமக்கு தலைவா, தல படங்கள் வரவில்லையே என்ற கவலையை விட அரசியல் விழிப்புணர்வு வேண்டும்.