கயிற்றில் ஆடும் வாழ்க்கை

டூம்..டூம்..டூம்
டூம்.. டூம்.. டூம்..
என்ற மேளத்தின் ஒலி
கேட்டுக் கொண்டே இருந்தது...


நகரத்தின் முக்கிய
பேருந்து நிறுத்தம்...
தெருநாய்களை போல ஏன் ஒடுகிறோம்...
ஏன் நிற்க்கிறோம் என தெரியாமலேயே
சிலர் ஒடுவதும், நிற்பதுமாய் இருந்தார்கள்

பேருந்துகள், கார்கள்,வேன்,
ஜீப்கள் சிலர் ஏற்றிக்கொண்டும்
சிலரை இறக்கிவிட்டும் சென்றன

இவற்றின் சத்தங்களை மீறி
டூம்..டூம்..டூம்.. டூம்
இருபுறம் இழுத்துக்கட்டப்பட்ட
கயிற்றின் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு  சிறுமி
நடந்து கொண்டிருந்தால்

சிலர் வேடிக்கை பார்த்தார்கள்
சிலர் சில்லரைகளை விட்டெரிந்தார்கள்

சில்லரைகள் நிறையும் வரை
கயிற்றில் நடந்தாக வேண்டும்
கயிற்றின் இரு முனைகளுக்கிடையே
தூரம் குறைவு தான்
அனால் அந்த சிறுமிக்கு
மிகப்பெரிய தூரம் அது
டூம்.. டூம்... டூம்....

அ.தமிழ்ச்செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்