காங்கிரஸ் - பாஜக மேட்ச் பிக்சிங்

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் இந்தியா முழுவதும் தினம் ஒருவர் கைது செய்யப்படுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இதுவரை நாம் பார்த்த கிரிக்கெட் நிகழ்ச்சிகள் அனைத்துமே மேட்ச்பிக்சிங் தான் போலும், இரவு நீண்ட நேரம் கண்விழித்து யார் ஜெயிப்பார்கள் என்கிற பரபரப்பில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் முகத்திலும் கரிபூசிவிட்டார்கள்.
இதே போலத்தான் நாம் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த எம்.பிக்கள் குறிப்பாக காங்கிரஸ் , பாஜக எம்.பிக்கள் மேட்ச் பிக்சிங் செய்து கொண்டு நாடாளுமன்றத்தை முடக்குகின்றன.தொலைக்காட்சிகளில் நாடாளுமன்ற செய்திகளை பார்பவர்கள் ஓரே மாதரியான காட்சியை பார்த்திருக்கலாம். நாடாளுமன்ற துவங்கியதும் சாபாநாயகர் மீராக்குமார் இருக்கையில் அமர்ந்து நமஸ்தே என்று சொன்னது தான் தாமதம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகரின் இருக்கையை சுற்றி வளைத்து சத்தம் போட துவங்குவார்கள், உடனே நாடாளுமன்ற அவை ஒத்திவைக்கப்படும். இது ஒருநாள் கூத்தல்ல கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது.ஒருநாள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு பல லட்ச ரூபாய்கள் செலவு செய்கிறார்கள்.மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவததே இல்லை. நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்.பிக்கள் என்ன செய்கிறார்கள் பார்த்தீர்களா......
                       
ரயில்வே மற்றும் நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர்க¬ளை பதவி விலகுமாறு கோரி எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுத்ததால் குளிகால மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதுமே முடக்கப்பட்டது. கடந்த பாஜக அரசு ஒளிரும் இந்தியா ஊழலும் இந்தியா என பணக்காரர்களுக்கும் ,ஏழைகளுக்குமான இடைவெளியை அதிகமாக்கியது. இதை பொட்ரோல் விலை உயர்வு,விலைவாசி உயர்வுகளால் மேலும் அதிகமாக்கி இந்தியா முழுவதும் வறுமை காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் 1லட்சத்திற்கு மேட்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.காங்கிரஸின் ஊழல் வரலாறு என்பது இந்திய சுகந்திரம் பெற்ற அடுத்த ஆண்டிலிருந்தே துவங்கியது,ஆதாவது 1948 ம் ஆண்டி ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் துவங்கியது. தற்போது அலைக்கற்றை ஊழல் துவங்கி நீர்,நிலம் ஆகாயம் என் அனைத்து துறைகளிலும் தனது ஊழலை மிக தீவிரமாக செய்துவருகிறது.இன்றைக்கு இருக்கிற நாடாளுமன்ற எம்.பிக்களில் 60 சதம் பேர் கோடிஸ்வரர்கள், ஏன் கிரிக்கெட் வீரர்கள் டெண்டுல்கர் டோனி போன்றவர்களும் விளம்பர வருவாய் மூலமாகவே வருடத்திற்கு பல கோடி சம்பாதிக்கிறார்கள். கிரக்கெட் வீரர்களானாலும் சரி அரசியல்வாதிகளும் சரி நம் வரிபணத்தில் மேட்ச்பிக்சிங் செய்து கொண்டு  தங்களது வருமானத்தை பெருக்கவது மட்டுமே நோக்கமாக இருக்கிறார்கள். கிரிகெட்டிலும், அரசியலிலும் சரி நம்மை பற்றி கவலைப்பட ஆளில்லை...

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments