பாஜகவில் ஆளாளுக்கு வைக்கிறார்கள் ஆப்பு!

“மீசக்கார நண்பா, உனக்கு ரோஷம் அதிகண்டா” என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. ஆனால் வித்தியாசமான மீசையை உடைய லால்கிஷன் அத்வானியின் ரோஷம் மூன்று நாட்களுக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை. நரேந்திர மோடியை பாஜகவின் பிரச்சாரக்குழு தலைவராக அக்கட்சி யின் செயற்குழு தேர்வுசெய்ததைத் தொடர்ந்து பாஜகவின் தனது பொறுப்பு கள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிக்கை விட்டார் அத்வானி. பாஜக போகும் திசை சரியல்ல என்றும் கட்சியிலுள்ள தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு அஜண்டா வைத்திருக்கிறார்கள் என்றும் பொருமினார் அத்வானி.வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலிருந்தே இவர் தனியாக ஒரு அஜண்டா வைத்திருக்கிறார். எப்படி யாவது பிரதமர் நாற்காலியை பிடித்து விட வேண்டும் என்பதுதான் அது. வாஜ்பாய் பிரதமராக இருந்தவரை அது நடக்கவில்லை.

வரும் தேர்தலில் பாஜக கூட்டணி ஒருவேளை தப்பித் தவறி ஏதாவது அதிசயம் நடந்து வெற்றி பெற்றால் நாம்தான் பிரதமர் என்று கனவில் மிதந்து கொண்டிருந்தார் அத் வானி. அதற்காகவே தன்னுடைய அல் லக்கையான நிதின் கட்காரியை மீண்டும் பாஜக தலைவராக்க அத் வானி முடிவு செய்திருந்தார். ஆனால் நிலத்தைச் சுருட்டி வாயில் போட்ட வழக்கில் கட்காரி சிக்கிக்கொள்ள, குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக ராஜ்நாத் சிங் மீண்டும் தலைவராகிவிட்டார். கோவாவில் நடந்த தேசிய செயற் குழு கூட்டத்தில் நரேந்திர மோடியும் ராஜ்நாத் சிங்கும் சேர்ந்து அத்வானியின் ஆசைக்கு பெரிய அளவுக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். இப்படி ஆப்பை செதுக்கிக்கொண்டு இருப்பது தெரிந்து தான் அத்வானி கோவா கூட்டத்தை புறக்கணித்தார். அத்வானி வராதது பெரிய அளவுக்கு பிரச்சனையாக மாற, அவருக்கு உடல் நிலை சரியில்லை. அதனால்தான் வரவில்லை என்று ஒரே போடாகப் போட்டார் ராஜ்நாத் சிங். அத்வானியின் டாக்டரிடமே தான் பேசிவிட்டதாகவும், அவர் எழுந்து நடக்கும் நிலையில் இல்லை என்றும் அவர் கூறினார். மழைக்காலத் தவளைகளைப் போல பேசிக்கொண்டேயிருக்கும் பாஜக செய்தித் தொடர்பாளர்களும் இதே உடுக்கையை வாசித்தனர்.ஆனால், அத்வானி உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது. மோடி-ராஜ் நாத்சிங் வகையறாவிற்கு அவர் பதில் ஆப்பு செய்து கொண்டிருக்கிறார் என்பது அடுத்தநாளே தெளிவாகிவிட் டது. அத்வானியிடம் தொலைபேசியில் பேசி ஆசி பெற்றுவிட்டதாகக் கூட மோடி கூறினார்.



ஆனால் அறிக்கை மூலம் மோடிக்கு பெரிய ‘ஆசியாக’ வழங்கிவிட்டார் அத்வானி. அத்வானியின் ஆதரவாளர்களாக அறியப்படும் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, உமாபாரதி போன்ற பழைய பெருச்சாளிகளும் அத்வானிக்கு ஆதரவாக நின்றனர். இந்த நிலையில், பாஜகவின் பொம்மைகளை ஆட்டுவிக்கும் சூத் திரக்கயிறாக விளங்கும் ஆர்எஸ்எஸ் தலையிட்டு அத்வானிக்கு ஆப்பு வைத்துவிட்டது. அதன் தலைவரான மோகன் பகவத் அத்வானியிடம் என்ன பேசினாரோ தெரியவில்லை. ராஜி னாமாவை வாபஸ் பெறுவதாக அத் வானி கூறியுள்ளார். அதைக்கூட அவர் நேரடியாக கூறவில்லை. அவர் வீட்டு வாசலில் ராஜ்நாத் சிங், கட்காரி, சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் கூட்டம் போட்டு கும்மியடித்து இந்த முடிவை அறிவித்தார்கள். இந்த சந்திப்புக்கு ஏன் அத்வானி வரவில்லை என்று கேட்ட தற்கு, இது நான் நடத்தும் பத்திரிகை யாளர் சந்திப்பு. அதில் அத்வானி வந்து அமர்ந்து கொண்டு கேட்பது மரியாதை யாக இருக்காது என்று ஒரே போடாக போட்டார் ‘மரியாதை ராமன்’ ராஜ்நாத் சிங்.ராஜினாமா செய்வதாக அறிக்கை விட்டது அத்வானிதான். அவர்தானே அதை வாபஸ் பெறுவதாகக் கூற வேண்டும். ஆனால் அவரது வாயாக மாறி இவர் கூறியிருக்கிறார். பத்திரிகை யாளர்கள் கிண்டினால் அத்வானி உளறிவிடுவார் என்று அவரை வீட்டுக் குள்ளேயே வைத்து அமுக்கிவிட் டார்கள் போலிருக்கிறது. ஆர்எஸ்எஸ் மிரட்டல் காரண மாகவே அத்வானி ராஜினாமா முடிவி லிருந்து பல்டி அடித்ததாகக் கூறப் படும் நிலையில், அப்படி எதுவும் நிர்ப் பந்தம் செய்யவில்லை, அறிவுரைதான் கூறினேன் என்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.



அதாவது அத்வானி புத்திகெட்டு கூறிவிட்டார். அவருக்கு அறிவுரை கூறி நல்வழிப் படுத்தினோம் என்கிறார் பகவத். இப்போது கூட பிரச்சாரக் குழுத் தலைவர் பதவி என்பது பிரதமர் பதவிக் கான முன்னோட்டமல்ல. தேர்தல் முடிந்தபிறகு பிரதமர்வேட்பாளர் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அத்வானியிடம் கூறப்பட்ட அடிப்படையில்தான் அவர் இறங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆக, அத்வானி இன்னமும் பிரதமர் கனவிலிருந்து விடுபடவில்லை. மோடி கும்பலும் அந்த ஆசையில்தான் அலைந்து கொண்டிருக்கிறது. அவர் களுக்கு அந்த வாய்ப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்திய மக்களின் கடமை. ஏனெனில் அத் வானிக்கும் மோடிக்கும் பெரிய வித்தி யாசம் எதுவுமில்லை. ரெண்டும் ரெண் டாப்பை, ரெண்டும் கழண்ட ஆப்பை என்பது கிராமத்து முதுமொழி.

மதுக்கூர் ராமலிங்கம்

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்தெடுக்கும் கவுண்டவுன் துவங்கி விட்ட நிலையில் கடந்த வாரத்தில் பா.ஜ.க.வில் எற்பட்டுள்ள கோஷ்டி சண்டைகளை எழுத்தாளர்,பத்திரிக்கையாளர்,பட்டிமன்ற பேச்சாளருமான மதுக்கூர் ராமலிங்கத்தின் கட்டுரை படித்தேன் நகைசுவையோடு அரசியலை அவர் சொல்லியிருக்கும் முறை அருமையாக இருந்தது. அதை அப்படியே உங்கள்  பார்வைக்கு....

 தொகுப்பு  செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Seeni said…
mikka nantri...!
ராஜி said…
இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்க போகுதோ?!