யுவாங்சுவாங் பாதையில்.... சீனர்கள் நடத்தும் தமிழ் இணையதளம்


சீனா என்றதும் நமக்கு சில படிமங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது... சீனா அத்துமீறல், இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனா ராணுவம், சீனாவில் ஜனநாயகம் இல்லை, கருத்து சுகந்திரம் இல்லை .... இது போன்ற தகவல்கள் நமக்கு கற்பிக்கபட்டு  சீனா என்பது ஒரு விரோதி நாடாக,ஜனநாயக மற்ற நாடாகவே  பார்க்கப்படுகிறது. இவை ஊடகங்களால் கற்பிக்கபடும் தவறான தகவல்களே...

தமிழகத்திற்கும்  சீனாவிற்குமான தொடர்பு நாம் அறிந்ததே... கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனநாட்டு யுவாங்சுவாங் தமிழகப் பௌத்தம் பற்றிய பல குறிப்புகளைத் தருகிறார். சீனாவுக்கும் தமிழ்ப் பகுதிக்கும் பௌத்தம் தொடர்பாக ஆழமான உறவிருந்தது. அதைப் பற்றிச் சீனா, திபெத் பௌத்த நூல்கள் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.நடிகர் சூர்யா நடித்த 7ம் அறிவு திரைப்படம் சீனாவில் கடவுளாக போற்றப்படும் போதிதர்மரை தமிழர் என்கிறது.

போதிதர்மரின் வரலாறு முழுமையாக நமக்கு தெரியாவிட்டாலும் கூட , சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு தொன்மையானது. சீன நாட்டின் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே குவன்சென் என்னும் துறைமுக நகரம் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்த காலத்தில் தமிழ் வணிகர்கள் இங்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
 தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிக கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறை முகங்களிலும் தங்கிப் பிறகு வியட்நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளன.


       சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று வேறுசில இடங்களிலும் வணிக குடியிருப்பை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் புகழ்பெற்ற வணிகக் குழாமான ''திசைஆயிரத்து ஐந்நூற்றுவர்'' எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன.
      குவன்லிசௌ துறைமுக நகரில் சிவன்கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் நிறுவப்பெற்றுள்ள படிமங்கள் குப்லாய்கள்கான் என்னும் புகழ்பெற்ற சீனமாமன்னனின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும்.இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த கோயில் எழுப்பப்பட்டது.

        இந்த கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த கோயிலில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார்.சகயுகம் சித்தராபவுர்ணமி அன்று இந்தக் கோயில் நிறுவப்பட்டது. கி.பி. 1260ஆம் ஆண்டு குப்லாய்கான் முடி சூடினான் இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய மாமன்னனான செங்கிஸ்கானின் பேரனாவான்.
      இவன் தான் பெய்ஜிங் நகரைக் கட்டி அதை தனது பேரரசின் தலைநகராக்கினான்.அவனுடைய போரரசு விரிந்து பரந்தது.புகழ்பெற்ற யுவான் அரச மரபை இவனே துவக்கிவைத்தான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டிப்பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப் பேரரசின் மாமன்னனாகத் திகழ்ந்தான். பாண்டின் அரச குலமும், குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர்.
       
        சீனாவில் எழுப்பட்ட சிவன் கோயில் சீனமாமன்னனான குப்லாய்கானின் ஆணையின் கீழ்க்கட்டப்பட்டது என்பதை குறிக்கும் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிய தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

இப்படி வரலாறு தொடர்புடைய நாட்டில் சீனர்களால் நடத்தப்படும் தமிழ் வானொலி, தமிழ் இணையதளமும் மிக அருமையாக உள்ளது. உலக முழுவதும் 38 மொழிகளில் நடத்தப்படும் வானொலிகளில் தமிழும் ஒன்று. இணையதளத்தை நிர்வாகிக்கும் சீனர்கள் தங்கள் பெயர்களை தமிழ் பெயர்களால் மாற்றிக்கொண்டு அழகாக தமிழ் பேசுகிறார்கள்.தமிழர்களின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.சீனா செல்லும் தமிழ் முக்கியஸ்தர்களை பேட்டிகள். நம்ம அமைச்சர் வி.நாராயணசாமி அதாங்க கூடங்குளம் பத்தி அடிக்கடி பேசுவரே அவரின் பேட்டிகள் காணகிடைக்கின்றன... சீனாவின் பண்டிகைகள், சுற்றுலாபிரேதேசங்கள், தமிழ்மூலமாக சீனா மொழிகற்றுக்கொள்ளும் முறைகள். இன்னொரு ஆச்சர்யம் தமிழ்வானொலி துவங்கி வரும் அகஸ்ட் முதல்நாள் முதல் 50 ஆண்டுகள் ஆகிறது. அதாவது பொன்விழா ஆண்டு அதனை கொண்டாட கட்டுரை போட்டிகள் அறிவித்திருக்கிறார்கள். நீங்களும் பங்கேற்கலாமே.உலக அளவிலான செய்திகளை தமிழில்  மதியம் 12.00 மணிக்கும். இரவு 8 மணிக்கும் கேட்கலாம்.சீனா,தென்னாசியா,உலகம்,பொருளாதாரம்,அறிவியல்,விளையாட்டு,மலர்ச்சோலை, படம், ஒலி- ஒளி என்ற பிரிவுகளின் கீழ் நிறைய தகவல்கல் கொட்டிகிடக்கின்றன.

சீன தமிழ் இணையபக்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

இதுவரை தெரியாது...

நன்றி...

விளக்கங்களுக்கும் இணைப்பிற்கும் நன்றி...
தள அறிமுகத்திற்கு நன்றி
Robin said…
நல்ல பதிவு !
தகவலுக்கு நன்றிகள்.