மூளையிருப்பவர்கள் விளையாட வேண்டிய விளையாட்டு....


உடல் பலம் தேவையில்லை,பேட், பால்,ஸ்டெம் குச்சி, பெரிய அளவிலான இடம் தேவையில்லை...   ஆனா கொஞ்சம் மூளையை பயன்படுத்தி விளையாடவேண்டிய விளையாட்டு. இந்தியாவை சுத்தியிருக்கிற எல்லா நாடுகளையும் விளையாடுறாங்க... குறிப்பா தமிழ்நாட்ல வயதான பெரிசுங்க, ஆலமரத்தடி,அரசமரத்தடியிலும் விளையாடுறாங்க ... தமிழர்களால் மறக்கப்படும் நிறைய விசயங்கள் இந்த விளையாட்டும் ஒன்று...அது ஆடு புலியாட்டம்...
சங்கப்பாடல்களில் வங்கா வரிப் பாறை என்றும், வங்காளத்தில் பாக பண்டி என்றும், நேபாளியில் பாக்சால் என்றும், பஞ்சாபில் ஷிர் பகர் என்றும், மலேசியாவில் மெயின் தபல் எம்பத் என்றும் அழைக்கப்படும் ஆடுபுலி ஆட்டம் இந்தியாவின் பாரம்பரிய விளை யாட்டாகும்.
இது ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டு. தாயம், பல்லாங்குழி போன்று ஆட்டத்தில் பயன்படுத் தப்படும் பொருட்களின் இருப்புக்கேற்ப இதில் ஆட முடியாது. ஆடும் நபர் தன் னுடைய மூளையை பயன்படுத்தி ஆட வேண்டும். ஆடுபுலி ஆட்டத்தை எங்கு வேண் டுமானாலும் ஆடலாம். அதற்கு பெரிய சாதனங்கள் எதுவும் தேவையில்லை. நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு பெரிய மூலதனங்கள் எதுவும் தேவை யில்லை. இதை விளையாட வயது ஒரு தடையும் இல்லை. இதில் விளையாட ஆடுவோருக்கு சாதுரியமும், சமயோசி தமும் தேவைப்படும் என்பதால், யாரும் யாருடனும் ஆட முடியும். இந்த விளை யாட்டுக்கு வரலாறு என்று எதுவும் இல் லை. ஆனால் இந்தியா முழுவதும் ஆடப்பட்டு வரும் விளையாட்டு. நம்மு டைய அண்டைநாடுகளிலும் ஆடப் பட்டு வரும் விளையாட்டு இது. இந்த விளையாட்டின் தாயகம் இந்தியா என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. ஏனெனில், நமது தேசிய மிருகமான புலி களின் தாயகம் இந்தியாவாகும். புலி, ஆட் டைக் கொல்லும் விளையாட்டு வேறு எங்கும் தோன்றியிருக்க முடியாது.ஆடுபுலி ஆட்டத்தை ஆடுவதற்கு நாம் இருக்கும் இடமே போதுமானது. மண் தரையாய் இருந்தால் கோடு கிழிக்க ஒரு மரக்குச்சி தேவைப்படும். மணலாய் இருந்தால் கைவிரல்கள் மட்டும் போதும். மற்ற கடினமான தளங் களாய் இருந்தால், வரைய உதவும் சுண் ணாம்பு,சுண்ணாம்பு கட்டி( சாக்பீஸ்) கரிக்கட்டை, செங்கல் பொடி போன்ற வற்றைப் பயன்படுத்தி கட்டங்களை வரைந்து கொள்ளலாம். பரமக்குடியில் வைகை ஆற்றங்கரையில் நிரந்தரமாக வரையப்பட்ட ஆடுபுலி ஆட்டக் கட்டங் களைக் காண முடியும் என்று ஒரு இணையதளக்குறிப்பு கூறுகிறது. கிரா மங்களில் கண்மாய்க்கரைகளில் ஆல மரங்கள், அரசமரங்கள் அடியில் பட்டி யல் கற்கள் போடப்பட்டிருக்கும். அவற் றில் இக்கட்டங்களைக் காண முடியும். ஆனால், இன்றைய இளைய தலை முறை இந்த விளையாட்டை ஆடுவ தில்லை. இதை ஆடுவது தங்களு டைய கௌரவத்துக்கு குறைச்சல் என்று அது கருதுகிறது.கட்டம் வரைந்த பின்னர், ஆடுவ தற்கு பதினெட்டு காய்கள் வேண்டும். அவற்றில் மூன்று காய்கள் ஒரு வடிவத் திலும், பதினைந்து வேறு வடிவத்திலும் இருக்க வேண்டும். இது ஒற்றையர் விளையாட்டு என்பதால் இருவர் மட் டுமே ஆட முடியும். மூன்று கூழாங்கற் கள், பதினைந்து புளிய விதைகள் அல் லது சோழிகள் அல்லது குன்றி மணி கள் ஆகியவற்றைப் பயன்

ஆட்டமுறை

ஒரு புள்ளியில் இருந்து பிரியும் நான்கு சாய்கோடுகள் கீழே உள்ள கிடைக்கோட்டில் வந்து முடியவேண் டும். இந்த கூம்பு வடிவக் கோடுகளின் நடுவில் மூன்று கிடைக்கோடுகள் வரையப்பட்டு அவற்றின் இரு முனை யும் நெடுங்கோட்டால் இணைக்கப்பட் டிருக்கும். இதுதான் ஆடுபுலி ஆட்டத் தின் ஆடுகளமாகும். இக்கோடுகள் சந்திக்கும் இடத்தில் உருவாகும் சந்தி களில் காய்களை வைக்க வேண்டும். பதினைந்து ஆடுகளைக் கொண்டு மூன்று புலிகளை நடமாட்டமின்றி முடக்குவதுதான் ஆட்டத்தின் உள் ளடக்கமாகும். முதலில் புலியை வைத்து ஆடு பவர்தான் ஆட்டத்தைத் தொடக்க வேண்டும். அவர் கூம்பின் உச்சியில் முதல் புலியையும், உள்புறத்தில் இருக் கும் சாய்கோடுகளின் கூம்புக்கு அடுத்த சந்திகளில் இரண்டு புலிகள் நிறுத்தப் பட வேண்டும். அடுத்து, ஆடு வைத்து ஆடுகின்றவர் தனது ஆடுகளை சந்தி களில் நிறுத்த வேண்டும். புலி ஆடு களை வேட்டையாடவரும். வேட் டைக்கு வரும் புலி தனக்கு அருகில் உள்ள சந்தியில் நிற்கும் ஆடுகளை ஒரு நிபந்தனையுடன் வெட்ட முடியும். ஆடு நிற்கும் சந்திக்கு அடுத்த சந்தி காலியாக இருக்க வேண்டும். அப்படி காலி இல்லை என்றால், அந்த ஆட்டை வெட்டக்கூடாது. இவ்வாறு வெட்டி விட்டு செல்லும் புலிகளை தாவவிடா மல் அடைப்பதே ஆட்டத்தின் சிறப்பா கும். எல்லா ஆடுகளும் களம் இறக்கப் பட்ட பின் ஆடுகளும் புலிகளும் மாறி மாறி நகர்த்தப்படும். புலிகள் நகரவிடா மல் ஆடுகள் அவற்றைக் கட்டிப்போட் டால் ஆடுகளுக்கு வெற்றி. எல்லா ஆடுகளும் வெட்டப்பட்டு விட்டால் புலிக்கு வெற்றி.ஆடும் புலியும் ஒரு சமயத்தில் ஒரு கட்டம் தான் நகர வேண்டும் புலி மட்டும் ஆட்டை வெட்டும் போது காலியாக உள்ள நேர்ச்சந்திக்கு தாவ முடியும். கிடைக்கோடுகள் ஓரங்களில் நேர் கோட்டால் இணைக்கப்பட்டிருக்கும் சந்திகளில் இருக்கும் ஆடுகளை வெட்ட முடியாது. ஏனெனில், அதற்கு அடுத்த சந்தி கிடையாது என்பதால் புலி தாவிச் செல்ல முடியாது. புலி-ஆடு-காலி இடம் என்று இருந்தால் மட்டுமே ஆட்டை வெட்ட முடியும். புலி-ஆடு-ஆடு என்று இருந்தால் ஆட்டை வெட்ட முடியாது. புலிகளை மடக்க குறைந்தது எட்டு ஆடுகளாவது களத்தில் இருக்க வேண்டும். பதினொரு ஆடுகளுக்கு கீழே குறைந்தாலே புலிகளை அடைப் பது கடினமாகும். ஒரே தடவையில் புலி தொடர்ந்து மூன்று ஆடுகளை வெட்டிவிட்டால் ஆடுகள் ஆட்டம் இழந்து விடும். ஆட்டம் தொடங்கியவுடனேயே புலிகள் ஆடுகளை வெட்டலாம். புலிகள் ஒரு நேரத்தில் ஒரு ஆட்டைத்தான் வெட்ட வேண்டும். ஒரு புலி மற்றொரு புலி யைத் தாண்டக்கூடாது.ஆடுகள் வெட் டப்பட்டவுடன் கட்டத்தை விட்டு வெளி யேற வேண்டும்.ஒரு ஆடு மற்ற ஆடுக ளை, புலிகளை தாண்டிச் செல்ல முடி யாது. பதினைந்து ஆடுகளும் களம் இறக் கப்பட்ட பின்புதான் ஆடுகள் நகர முடியும். புலியை வைத்து ஆடுபவர்கள் கூம் பின் உச்சியில் உள்ள புலியை ஆட்டத் தின் பாதிவரை நகர்த்தாமல் இருப்பது ஆட்ட வியூகங்களில் ஒன்றாகும். அதே போல் ஆடு வைத்திருப்பவர்கள் அடிப் பாலத்தில் இருந்து காயை வைக்க வேண்டும்.இதில் காசு வைத்து ஆடவேண்டிய கட்டாயம் இல்லை. பொதுவாக இதில் காசுக்கு வேலையில்லை. இதில் மூளைக்குத்தான் வேலை. ஒரு கால கட்டத்தில் அனைத்துப்பிரிவினரும் ஆடி வந்த விளையாட்டாக இருந்த இது, இன்று கிராமங்களில் கூட ஆடப்படுவ தில்லை. துட்டுக்கு நட்டமில்லாமல், பொழுதைக் கழிக்க, கவலைகளை மறக்க விரும்பும் முதியோர் கூட்டம் இன்றும் இந்த விளையாட்டை ஆங் காங்கே ஆடிவருகிறார்கள். இந்த விளை யாட்டைப் பார்க்கவும் பெருங்கூட்டம் கூடிவிடும். வாருங்கள்! நாமும் ஆடு வோம் !
-தாஸ்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஊருக்கு வாங்க... விளையாடுவோம்...
கிட்டத்தட்ட சதுரங்கமும்(Chess) இதே பாணியில் அமைந்த விளையாட்டு தானே.அதனை விளையாடுபவர்களுக்கு பரிசு ,பாராட்டு ஏற்படுத்தி இதனை அழித்து விட்டார்கள்
அப்புறம் // உள்புறத்தில் இருக் கும் சாய்கோடுகளின் கூம்புக்கு அடுத்த சந்திகளில் இரண்டு புலிகள் நிறுத்தப் பட வேண்டும்//என்பது சரியாக புரியவில்லை. மேலே உள்ள படத்தில் மூன்று புலிகளையும் களமிறக்கி வெளியிட்டால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.