சூரியநெல்லி பெண்குட்டி கற்பழிக்கப்பட்ட கதை...


சூரியநெல்லி என்பது கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெயரல்ல, அவள் வாழ்ந்த ஊரின் பெயர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறுக்கு அருகேயுள்ள ஒரு சிறிய கிராமம் சூரியநெல்லி. 1996ல் நடந்த இந்த சம்பவம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கடந்த பின்பும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் அறிவிக்கப்படவில்லை. டெல்லி பேருந்து கற்பழிப்பு (பாலியியல் பலாத்காரம் என்றுதான் எழுத வேண்டும்) சம்பவத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகலைகளில் தூசிதட்டி எடுக்கப்பட்ட கற்பழிப்பு வழக்குகளில் முக்கியமானது...ஏன் தெரியுமா இந்த வழக்கில் இந்தியவை ஆளும் மத்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் சிக்கியிருக்கிறார். இனி பெண்குட்டியின் கதை....
  16 வயது நிரம்பிய 9ம் வகுப்பு மாணவியை ராஜூ என்ற நடத்துனர் (கண்டக்டர்) கடத்துகிறார்.பின்பு அந்த காமூகனால் பலமுறை சீரக்கப்பட்ட அந்த பெண் உஷா என்ற பெண்ணிடமும்,எஸ்.எஸ்.தர்மராஜன் என்ற வழக்கறிஞராலும் கோட்டையம், வண்டிபெரியாறு, கம்பம்,தேனி, குமுளி என ஊர்.. ஊராக அழைத்துச்செல்லப்பட்டு 42 நாட்கள் 40 பேரின் ஆசைக்கு பலிகொடுக்கப்படுகிறார். பின்னர் கொஞ்சம் பணம் கொடுத்து கொலை மிரட்டலுக்கு பின்பு விடுவிக்கப்படுகிறார். தனக்கு நேர்நத கொடுமைக்கு போலீஸில் புகார்  கொடுக்கிறார் அந்தபெண்.. அவளை சீரழித்தவர்கள் எல்லாம் பெரிய இடத்து மனிதர்கள், ஒரு எப்.ஐ.ஆர் கூட போடபடவில்லை. பின்பு மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு 3வருடங்களுக்கு பிறகு(1999) ல் வழக்கு பதியப்பட்டது. 2000ல் வழக்கு நடைபெற்றது. ஆனால் 2003 வரை நடைபெற்ற வழக்கில் ''இது விபசாரம்  பாலியியல் பலத்காரம் அல்ல'' என தீர்ப்பளித்து இந்த வழக்கில் சம்பந்தபட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதில் கொடுமை என்னவென்றால் கற்பழிப்பு வழக்கில் சம்பந்தபட்டவர்களில் காங்கிரஸ் எம்.பி. குரியனும் ஒருவர், அவர் நீதிமன்றத்திற்கு வரமலேயே விடுதலை செய்யப்பட்டார்.
       
                   இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பல தொந்தரவுகள்,அந்த பெண் பார்த்துவந்த வேலைக்கு இடைஞ்சல் என தொடர் தாக்குதலை தாக்கு பிடித்து மேல்முறையீடு செய்த, அந்த பெண்ணுக்கு டெல்லி மாணவி சம்பவத்திற்கு பிறகு சூரியநெல்லி விரகாரமும் மீடியாவின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தபட்ட எம்.பி.குரியன் தற்போது இந்திய நாடளுமன்ற கீழ் அவையின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அதுவும் பெணகள் பாதுகாப்பு தொடர்பான மசோதா நிறைவேற்றபடவுள்ள நேரத்தில் .... என்ன கொடுமை சார் இது? கேரளவில் இந்த வழக்கை சூரியநெல்லி பெண்குட்டி வழக்கு என்று சொல்கிறார்கள்... சூரியநெல்லிக்கு சரியான தீப்பு கிடைக்குமா?...

செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

சரியான தீப்பு வேண்டாம்... சரியான தீர்ப்பு கிடைக்கட்டும்...
Seeni said…
ada paavame.....


Anonymous said…
i welcome ur statement
Anonymous said…
This is Democracy