கோடிக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகளின் வாயில் மண்ணை அள்ளி போடும் சில்லரை வர்த்தக நேரடி முதலீட்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பல தில்லு முல்லுகள், வஞ்சகம்,சூழ்ச்சி, நழுவல் என நாடகம் அரங்கேறி சில்லரைவர்த்தக வாக்கெடுப்பில் நடைபெற்றதை நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை பார்த்தவர்கள் பார்த்திருக்காலாம்.
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக ஆகிய கட்சிகள் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாகவே கூறின. எனினும், வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று முலாயம் சிங் யாதவ் கூறினார். அப்படியென்றால் அரசை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது ஏன் என்று கேட்டதற்கு, கட்சி அப்படித்தான் முடிவு செய்துள்ளது என்று சமாளித் தார். நம்ம கலைஞர் ஜி என்ன சொன்னார் தெரியுமா? மத்திய அசரை காப்பாற்றவே ஆதரித்தோம், வியாபாரிகளுக்கு பாதிப்பு என்றால் எதிர்ப்போம் என்கிறார். ''பிள்ளை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது'' என்பார்களே அது தான் இது.
சிபிஐ வைத்து மிரட்டிய காங்கிரஸ்
நாடாளுமன்றத்தில் மார்க்ஸிட் எம்.பி. வாக்கெடுப்பின் போது ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது, சோனியா நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருந்தார். அதன் ஆர்த்தம் சமாஜ்வாதி,பகுஜன், தி.மு.க. வை சி.பி.ஐ கொண்டு மிரட்டி வைத்திருப்பதை நினைத்து சிரித்திருப்பார். பகுஜன்கட்சி 21 எம்.பி.களை மடக்க மாயாவதி மீதுள்ள 375 கோடி ரூபாய் தாஜ் ஊழல் வழக்கை ரத்துசெய்தது. 22 எம்.பி.கள் கொண்ட சமாஜ்வாதி எம்.பிக்களை சரிக்கட்ட மூலாயம்சிங் மீதுள்ள சி.பி.ஐ வழக்குகளை நிறுத்தி வைத்துள்ளது.ரூ900 கோடி மாட்டுதீவண உழலால் லாலுபிரசாதயாத்வ் எற்கனவே மடங்கி கிடக்கிறார். கனிமொழி, ராஜா மீதான 2ஜி உழலை நிறுத்துவதாக கலைஞருக்கு உறுதியளிக்கபட்டது. எல்லாம் திருடனுங்க பிறகு எப்படி மக்களுக்கு ஆதராவா இருப்பானுக...
எனது நண்பர் சொன்னார் வால்மார்ட் வந்தா பிரச்சனை வராது சார்? நல்லதுதான பொருள் விலையெல்லாம் குறைவாக கிடைக்கும், விவசாயிகளுக்கும் நல்லது தானா என்றார். மேம்போக்காக பார்த்தால் அப்படித்தான் தெரியும். கோக்,பெப்ஸி முதலில் மிகக்குறைவான விலைக்கு கொடுத்தார்கள், உள்ளூர் சோடா கம்பெனிகள் மூடத்தொடங்கினார்கள், உதாரணமாக மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனி.
இப்போது கோக்,பெப்ஸி மட்டும் தான் குளிர்பானம் என ஆனபிறகு அவர்கள் வைத்ததுதான் விலை.
நன்றி தினமணி
அமெரிக்காவில் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து 60 மைல் தூரத்திலுள்ள ஒரு பண்ணையில் ஏராளமான வெங்காயம் விற்கப்படாமல் மலைபோல குவித்து, வீணாக அழுகிக்கொண்டிருந்தன. இந்தப் பண்ணையை 4 தலைமுறைக்கு முன்னால், போலந்து நாட்டில் இருந்து வந்த ஒரு விவசாயி அமைத்து, அவரது வாரிசுகள் எல்லாம் இப்போது அந்த பண்ணையை நடத்தி வருகிறார்கள். கிறிஸ் பவல்ஸ்கி என்ற அந்த விவசாயியிடம், ‘‘ஏன் இப்படி வெங்காயத்தை வீணாக்கிவிட்டீர்கள்? என்று கேட்டதற்கு, ‘‘எங்களிடம் இருந்து வெங்காயம் வாங்குவது, வால்மார்ட், ஷாப்ரைட் போன்ற பெரிய நிறுவனங்கள்தான். அவர்கள்தான் வெங்காயம் என்ன சைசில் இருக்க வேண்டும்?, எவ்வளவு விலைக்கு கொடுக்க வேண்டும்? என்பதையெல்லாம் நிர்ணயிக்கிறார்கள். அவர்கள் கூறும் நிபந்தனைக்கு உட்படாவிட்டால் வாங்க மறுத்துவிடுகிறார்கள். அழுகும் பொருளான இந்த பொருட்களும் வீணாவதை தவிர வேறு வழியில்லை. உற்பத்தி விலை அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், அவர்கள் குறைந்த விலையையே நிர்ணயித்து வாங்குகிறார்கள். எங்களுக்கும் வேறு வழியில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
விவசாயிகள்,வியாபாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் இனி கடையடைப்பு, ஊர்வலம் போன்ற போராட்ட வடிவத்திற்கெல்லாம் அரசு பயப்படாது, எகிப்பதில் பார்த்தீர்களா மக்கள் அரண்மனையை முற்றுகையிட்டதால் எகிப்தின் அதிபர் தப்பி ஒடியிருக்கிறார்.நீங்களும் இப்படி எதாவது செய்யுங்கள்...
-செல்வன்
Comments