கற்பழிப்பு சம்பவங்களும் சொரணைகெட்ட தமிழனும்


650 கற்பழிப்புகள் இந்திய தலைநகரான டில்லியில் 2012ம் ஆண்டு மட்டும்.2011ல் 522, கடந்த 1953 - -2011க்கும்இடையில் 873 சதம் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன. நண்பர்களே இது வழக்கு பதிவு மட்டும் தான் வெளிவரதவை எத்தனையோ?.டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்புக்கு பிறகு அவர் மரணமடையும் வரை டெல்லியில் நடைபெற்ற ஆவேச ஆர்ப்பாட்டங்கள் இது வரை காணாத ஒரு நிகழ்வு. தன்னெழுச்சியான போராட்டம் என்பது இந்தியாவுக்கு புதிது. பிரதமர் வீடு,சோனியாவீடு, ஜனாதிபதி மாளிகை என முற்றுகை, போராட்டத்தை தடுக்க ரயில்,பேருந்துகள் நிறுத்தப்பட்டன.முக்கிய இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு இதையும் மீறி ஆவேசப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
                    ஆனால் இதே நேரத்தில் தமிழகத்திலும் டெல்லி சம்பவத்தை போலவே மிக கொடூரமான கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக...

             விருத்தாச்சலம் அருகே சுகந்தி என்ற பெண்ணை 8 பேர் கொண்ட கும்பல் நாசம் செய்திருக்கிறது. அந்த பெண்ணின் உறவினர் கண்முன்னால் கத்தி முனையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.சுகந்தியும் மருத்துமனையில் இருக்கிறார்.

           தூத்துக்குடி அருகே 7ம் வகுப்பு மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

            நாகப்பட்டினம் , தலைஞாயிறு அருகே 4ம் வகுப்பு மாணவி(குழந்தை) பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

                   மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் சாம்பிள்தான்... இது தொடர்கதையாகிவருகிறது கற்பழிப்பு சம்பவங்கள்.டெல்லி சம்பவங்களுக்கு நடைபெற்ற போராட்டத்தை போல தமிழகத்தில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறவில்லை. செய்திதாள்களில் படித்து ''அப்படியா'' என்றதோடு தமிழன் நின்று கொண்டான். ஊடகங்களும் கற்பழிப்பு சம்பவங்ளை பக்கம்பக்கமாக படங்களை வெளியிட்டு பணம் சம்பதித்தன. அரசியல் தலைவர்களும் கண்டனங்களோடு நிறுத்தி கொண்டார்கள். தமிழா உனக்கு சொரணையே இ¢ல்லையா?


             இந்த சம்பவம் என்று இல்லை இலங்கை தமிழர் பிரச்சனையா வைகோ, சீமான் மட்டும்தான் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.
          விலைவாசி உயர்வா? கம்யூனிஸ்டகள் போராடுவார்கள் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.
          முல்லை பெரியாறு பிரச்சனையா? கம்பம்,தேனி பகுதியே சேர்ந்தவர்கள் போராடுவார்கள் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.
          கூடங்குளம் பிரச்சனையா உதயகுமார் போராடுவார் மற்றவர்கள் வேடி.......
          முன்பெல்லாம் பஸ்கட்டம் 50 பைசா உயர்நதாலே மாணவர்கள் போராட்டம் ஒருவாரம் நடக்கும் இப்போது அவர்களும் டாலர் கனவுகளில் மிதக்கிறார்கள்
 அக மொத்தம் ஓட்டுக்கு... நோட்டுகளை வாங்கிக்கொண்டு மழுமட்டையாக... சொராணை கெட்டு போய் விட்டான் தமிழன் .
-செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்