பாலியல் கொடூரத்தில் தலைநகரமும்- தமிழ்நாடும்


இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்க பெண்கள் தனியாக செல்லவேண்டாம் என உலக நாடுகள் எச்சரிக்கும் அளவுக்கு தலைநகர் டில்லி அவமானப்பட்டுபோயுள்ளது.இந்திய தலைநகர் டெல்லியில் பாலியல் கொடூரம் நிகழ்ந்த அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் 7ம்வகுப்பு மாணவி கற்பழித்தி கொலைசெய்யப்பட்டார். இந்தவிசயத்தில் தலைநகருக்கும், தமிழகத்துக்கும் போட்டி போலிருக்கிறது. இந்திய தலைநகரம்  மாணவர்களின் போராட்டத்தால் கொந்தளிந்து கொண்டிருக்கிறது.ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் அகியவை முற்றுகையிடப்பட்டு தொடர்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மன்மோகன் வழக்கம் போல் வருத்தமளிக்கிறது என்ற ஒற்றை வார்த்தையில் தனது வேலையை முடித்துக்கொண்டார்.அதிகமான முறை பெண் முதல்வராக தேர்தெடுக்கபட்டவர் என்ற பெருமைபெற்ற டில்லி முதல்வர் ஷீலாதீட்சித் தொலைக்காட்சிகளுக்கு மாறிமாறி உப்புசப்பில்லத பேட்டியளிக்கிறார்....

இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. எனக்கும் மகளும், மருமகளும் உள் ளனர். நகரத்தில் உள்ள அனைத்து பெண்கள் பற்றித்தான் கவலைப்படு கிறேன்.இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, இந்த ஆண்டில் மட்டும் 600 பாலி யல் பலாத்கார குற்றங்கள் போலீ சாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.தில்லி, பாலியல் கொடூர நகரம் என்று கூறப்படுவதை நான் விரும்ப வில்லை. ஆனால் உண்மையில் பாலி யல் கொடூரத் தலைநகரமாகத்தான் மாறி வருகிறது.இந்த விசயத்தில் நான் பொய் யான வாக்குறுதிகள் எதையும் அளிக்க விரும்பவில்லை. என் கை கள் கட்டப்பட்டுள்ளன ,.மேலும் பெண்கள் தனியாக இந் தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் இணை யதளத்தில் அறிவுறுத்தி உள்ளது சரி யானதுதான் ..
இந்திய தலைநகரம் சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டுக்குள் வரவில்லை என்றால் மற்ற இந்திய நகரங்களைப் பற்றி சொல்ல வேண்டியதி¢ல்லை. எப்படியிருக்குது பாருங்கு நாடு?....

குழந்தை பலாத்காரம்

முதல்வர் ஷீலா தீட்சித்தின் பேட்டி வெளியான நேரத்தில், தில்லி, சாகர்புர் பகுதியில் இயங்கி வந்த மழலையர் பள்ளியில் 3 வயது குழந்தை, பள்ளி உரிமையாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவமும், மேலும் ஒரு பெண்ணை மூன்று பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள் ளாக்கப்பட்ட சம்பவமும் வெளி யாகின.கடந்த திங்களன்று 3 வயதே ஆன பள்ளிக் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடுத்து, பள்ளி உரிமையாளர் பிரமோத் மாலிக் புதன்கிழமை கைது செய்யப்பட் டார். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் நடத்திய போராட் டத்தைத் தொடர்ந்து, பள்ளியின் மேலாளரும், உரிமையாளர் மாலிக் கின் மனைவியுமான பூனம் வெள் ளியன்று கைது செய்யப்பட்டு, பள் ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

விதவைப்பெண்பாலியல் பலாத்காரம்

 மம்தாவின் ஆட்சி யில் . மேற்குவங்க மாநி லத்தில் விதவைப் பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தோடு, மம்தா அரசின் மீதான விமர்சனத்தை நிரூபித்தது.அம்மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள சாத்மோனி கிராமத்தில் வசிந்து வந்த 35 வயது விதவைப் பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் வெள்ளி இரவு பாலியல் பலாத்காரம் செய்தது. அதோடு மட்டுமல்லாது, அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியது. இதில் படுகாய மடைந்த அந்த பெண்மணி, மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக சாத்மோனி கிராம அஞ்சல் அலு வலகத்தில் பணியாற்றும் அபு பக்கர் என்பவர் உட்பட 4 பேர் மீது வழக் குப் பதிவு செய்துள்ள காவல்துறை யினர், குற்றவாளிகளைத் தேடி வரு கின்றனர்.



தமிழகத்தின் அதிர்ச்சி தரும் விபரம்

தில்லியில் மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன் கொடுமை அதிர்ச்சி அலைகளை ஏற் படுத்தியுள்ள நிலையில், தூத் துக்குடி அருகே பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.இந்த அதிர்வலைகள் ஓய்வதற் குள் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே வீட்டில் தனியாக இருந்த 4-ம் வகுப்பு படிக் கும் சிறுமியை பலாத்காரம் செய் யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.தலைஞாயிறு பகுதியை சேர்ந்த விவசாயியின் மகளான திருநாகேஸ் வரி, அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளியன்று வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சிறுமியை மனுநீதி கண்டன் என்ற கிரா மத்தைச் சேர்ந்த கார்த்தி மற்று சிவ னேசன் ஆகிய இருவர் பாலியல் பலாத் காரம் செய்திருக்கின்றனர்.இந்த சம்பவம் தெரியவந்ததைத் தொடர்ந்து அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இந்த சம்பவங்கள் மட்டு மல்ல,தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண் டுகளில் பதிவான பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் பற்றிய புள்ளி விவரமும் அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற் கொண்டது. அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி யுள்ளது.பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற் கொண்ட ஆய்வில் 53சதவீத குழந் தைகள் ஏதோ ஒரு பாலியல் வன் முறைக்கு ஆளானதாகவும், 21.9சத வீத குழந்தைகள் மோசமான பாலி யல் வன்கொடுமைக்கு ஆளானதாக வும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 லட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வர்களில் 15சதவீதம் பேர் பதி னைந்து வயதுக்குட்பட்டவராவர்.2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42சதவீதம் பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளா னதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தில்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந் தைகளில் 63சதவீதம் பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன் முறைக்குப் பலியானது தெரிய வந்தது.தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு குறை வில்லை. பெண்களுக்கு எதிராக கடந்த 2008ம் ஆண்டு 573 பாலியல் குற்றங்களும், 1160 கடத்தலும், 1548 குடும்ப வன்முறையும் பதிவாகியுள் ளன.2009ம் ஆண்டு 596 பாலியல் குற்றங்களும், 2010ம் ஆண்டு 686 பாலியல் வன்கொடுமை குற்றங் களும் பதிவாகியுள்ளன. 2011ம் ஆண்டு 677 பாலியல் வன்கொடுமை குற்றங்களும், 2012ம் ஆண்டு 528 குற் றங்களும் பதிவாகியுள்ளதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது.தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள் ளதாக தேசிய குற்றப்பிரிவு புல னாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஆத்மா said…
கொடுமையான தகவல்கள்...
எல்லோரும் கட்டாயம் தண்டிக்கப் பட வேண்டும் அது பகிரங்க தண்டனையாக இருக்க வேண்டும்
Thalapolvaruma said…
தூக்குதண்டனை தரனும்
Unknown said…
மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி