இந்தியர்களே பிச்சையெடுக்க தயாராகயிருங்கள்


2013 ஜனவரிக்கு பிறகு அதாவது வருகிற புத்தாண்டுக்கு பிறகு பொரும்பாலன இந்தியர்கள் பிச்சைகாரர்களாக மாறவேண்டியிருக்கும். இருக்கின்ற ஒரு மாத இடைவெளியில் பிச்சையெடுக்க பழகிக்கொள்வது நல்லது. பயமுறுத்தவில்லை நண்பர்களே உண்மைதான்.          இந்திய பிரதமர்  அமைச்சர்கள், அலுவலர்களுக்கு அதிரடியாக ஒரு உத்தரவு  பிறப்பித்துள்ளது. வருகிற 2013 ஜனவரி 1 முதல் ரேசன்கடைகளில் மானியத்துடன் கூடிய பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக மானியதொகையை நேரடியாக பணப்பட்டுவாடா என்ற முறையில் அளிப்பது என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
முதல் கட்டமாக இந்தியாவின் 51 மாவட்டங்களில் அமல்படுத்தபட உள்ளது.படிப்பதற்கு திட்டம் நல்லாதான இருக்கு பணத்தை நேரடியாக கொடுத்தா நல்லது தானே,மக்கள் வேண்டியதை வாங்கி கொள்ளலாமே என நினைக்க  தோன்றும். ஆனால் உண்மையில் என்ன நடக்கும் தெரியுமா?

காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நேரடி பணப்பட்டுவாடா  திட்டம் உண்மையில் ஏழைகள், மற்றும் நடுத்தரமக்களுக்கு எதிரானது. இத்திட்டம் ஏழைமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்தும் நோக்கம் கொண்டது. இத்திட்டம் நிலையாக அமலாக தொடங்கினால் உணவு, மண்ணெண்ணெய் மற்றும் உரங்களுக்கு விரிவாக்கப்படும் என்கிறார் சிதம்பரம். இதன் உண்மையான பொருள் என்னவென்றால் மேற்கண்ட பொருள்களுக்கு மானியம் ஒழிக்கப்படும் என்பதேயாகும். ஏற்கனவே விலைவாசி உயர்வு, பொட்ரோல்விலை உயர்வு, மின்வெட்டால் அவதிப்படும் மக்கள் இத்திட்டத்தால் மேலும் அவதிப்பட நேரிடும்.


              ரேசன் பொருட்களுக்கு பதிலாக பணப்பட்டுவாட செய்வது என்பது அரசு கொடுக்கின்ற பணத்தை கொண்டு பொருட்கள் வாக்க வேண்டும் அப்போது விலைவாசிகள் மேலும் உயரும், உணவு பொருட்கள் பதுக்கப்பட்டு செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கி பசி,பட்டினி அதிகரிக்கும் மேசமான நிலைமையை உருவாக்கும். ஏற்கனவே மழையின்மை காரணமாக பயிர்கள் வரண்டு போனதால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை (தற்போதைக்கு 2 பேர்) செய்து கொள்ள துவங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே 2000க்கு பிறகான  பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டும். மேலும் தற்போது ஒருநாளைக்கு ரூ32 மட்டுமே அன்றாட செலவுக்கு செய்து வாழ்ந்துவரும் எழைகள் அதிகரித்து வரும் நிலையில் பணபட்டுவாட திட்டம் இந்தியர்களை மேலும் பிச்சைகாரர்களாக மாற்றும்...

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

இப்பவே அப்படி தான் இருக்கு... இன்னுமா... சாமீ...