தேவர் குல பெருமக்களே திருந்தவே மாட்டீர்களா?

பசும்பொன் தேவரின் பெயரால், அவரது குருபூஜையன்று ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் வன்முறைக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. நேற்று (நவ.7) தேவர்குருபூஜையன்று ராமநாதபுரம் பகுதியில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மாவட்டங்களில் பந்த அறிவிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு,மின்வெட்டுக்கு கூட கிடைக்காத ஆதரவு இந்த பந்துக்கு கிடைத்தது. எல்லாம் பயம் காரணமாக கிடைத்த ஆதரவு. எனது ஊரான திரமங்கலத்தில் பந்த் மிகப்பெரிய வெற்றி???... ஒரு கடைகூட திறக்கப்படவில்லை. பஸ்கள் நிறுத்தப்பட்டது.
பந்துக்கு முதல்நாள் எங்கள் ஊரில் பஸ்களுக்கு கல்எறி, தீவைப்பு நடந்தது. எந்த பந்தாக இருந்தாலும் மாலை 4 மணிக்கு மேல் கொஞ்சம், கொஞ்சமாக சரியாக தொடங்கி கடைகள் திறக்கப்பட்டு, பேருந்துகள் இயங்கதுவங்கும். தவிர்க்க முடியாத அவசர வேலை காரணமாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்ல வேண்டியதிருந்தது. மாலை 4மணிக்கு புறப்பட்ட பேருந்தில் கிளம்பினேன் , மொத்தமே 3 பேர்தான் இருந்தோம்,போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குகிறது. (மதுரைக்கு தெற்காக கன்னியாகுமரி,தென்காசி செல்பவர்கள் யாராக இருந்தாலும் திருமங்கலம் இறங்காமல் செல்லமுடியாது, இரவு நேர பேருந்துகள் இயக்குமளவுக்கு பிஸியான பகுதி)மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு 4 கிலோமீட்டர் முன்பாகவே பஸ்கள் நிறுத்தப்பட்டன.இதுக்குமேல பஸ் போகாது, ஏறங்கிருங்க என்றார் நடத்துனர். காரணம் கேட்டபோது பெட்ரோல் குண்டு போட்டாங்க,பஸ் போகாது என்றார்.


          அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் குழந்தைகளுடன் தாய்மார்கள், நடக்க முடியாத பெரியவர்கள்,இளம் வயது பெண்கள் ,அடுத்த என்ன செய்வது என தெரியவில்லை திரும்ப ஊருக்கே போகலாமா எப்படி போவது என்ற படி நடக்க துவங்கினார்கள்.நான் மதுரையில் இருந்த நண்பரின் உதவியோடு என்வேலைகளை முடித்து இரவு 10மணிக்கு பெரியார் பேரூந்து நிலையம் வந்த போது மின்வெட்டில் பெரியார் பேருந்து நிலையம் இருண்டு கிடந்தது. வேலை முடிந்து செல்லும் இளம் பெண்கள், குழந்கைகளோடு நிற்கும் தாய்மார்கள், வயதானவர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து வரும் என்ற நம்பிக்கையில் காத்துகிடந்தார்கள்,
                 இதற்கிடையில் எனது ஊரிலிருந்து நண்பர் கைபேசியில்  பேசினார், அவரது மனைவியும் வயதுவந்த மகளும் பெரியார் பேருந்து நிலையத்தில் நிற்பதாகவும் அவர்களை எப்படியேனும் பாதுகாப்பாக அழைத்துவருமாரும் என்னிடம் டூவீலர் இல்லை என்றும் சொன்னார். மின்வெட்டு இருட்டில் அவர்களை ஒருமணி நேர தேடலுக்கு பிறகு கண்டுபிடித்து, சிலமணிநேர காத்திருப்புக்கு பின் வந்த பேரூந்தில் ஊர்வந்து சேர அதிகாலை 1 மணியாயிற்று இரவு உணவு சாப்பிட முடியாமல் பட்டினிதான் கிடந்தோம்.

                ஆட்சியில்
இருப்பவர்கள் தங்களின் ஓட்டுவங்கிகாக சாதிய அரசியலை வளர்க்கிறார்கள். மின்வெட்டைதான் சரிசெய்யமுடியவில்லை சட்டம் ஓழுங்கு பிரச்சனையையுமா?
   பசும்பொன்தேவர் தலித்துகளை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய பிரவேசம் செய்த நல்ல மனிதர், அவரின் சிறுவயது வளர்ச்சியில் முஸ்லிம் மற்றும் தலித் பெண்களின் பங்களிப்பு குறித்து அவரே பேசியிருக்கிறார்.சாதியின் பெயரால்  அவரின் வாரிகள் என சொல்லிக்கொள்ளும் தேவர்குல மக்கள் திருந்தவே மாட்டார்கள் போலிக்கிறது.ஒவ்வொரு வருடமும் இமானுவேல்சேகரன் நினைவுதினம்,தேவர் குருபூஜையன்று தென்மாவட்ட மக்கள் படும் கொடுமைக்கு தீர்வேயில்லையா?
- -செல்வன்.

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

இங்கே யாரும் தாழ்ந்தவர்களும் இல்லை! யாரும் உயர்ந்தவர்களும் இல்லை! மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள் உண்மையை அப்படியே சொன்னதுக்கு நன்றி
Vijay Periasamy said…
பந்த் என்ற பெயரால் மக்களை கஷ்டப்படுத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாதது .
நல்ல பதிவு !
Ilanchezhiyan said…
Arasuthan itharku pathil solla vendum...
Seeni said…
unmai sonthame....
Anonymous said…
Well said...This needs to get stopped..
நான்கூட பசும்பொன் முத்துராமலிங்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறேன்.
அந்த நல்ல மனிதர் இப்போது உயிரோடு இருந்திருந்தால், இப்போது நடைபெறும் சம்பவங்களைப் பார்த்து மனவேதனைப் பட்டிருப்பார்.
Senthil Kumaran said…
அதெல்லாம் ஒரு பய வர மாட்டான். பாப்பானுக்கு எதிரான பதிவுன்னா நூறு பேர் வருவானுங்க. தேவன எதுத்தா கொட்ட நசுங்கி போய்டும்ல............
தேவர் குல பெருமக்களே திருந்தவே மாட்டீர்களா?//அய்யா மக்கள் எப்போது தவறு செய்தார்கள் திருந்துவதற்கு ......தேவர் இறந்து சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகே தேவர்ஜெயந்தி கொண்டாட்டம் ஆளும் அரசுகளால் மக்கள் மத்தியில் திநிக்கபடது .............ஏன் என்றால் ஆளும் அரசுக்குதங்கள் சுரண்டலை(மணல்கொள்ளை ,granite ) செய்திட ஒரு அடியாள் கூட்டம் தேவை பட்டது தேவர் சாதி ஒருபோர் சாதி ஆகவும் பெரும்பன்மை சாதி ஆகவும்இருந்ததால் அதை கையில்எடுத்து கொண்டது இதில் அம்மாவுக்கும் அழகிரிக்கும் பெரிய வேற்றுமை இல்லை மேலும் தென் மாவட்டங்களில் விவசாயம் செத்து கொண்டு இருக்கிறது இங்கு விவசாயி களாய் இருப்பவர்கள்தேவர்களும் தாழ்த்தப்பட்டமக்களும் தான் இவர்களுக்கு இடையில் ஏற்கனவே சாதியஆதிக்க பிரச்னை இருக்கிறது இதனை மேலும் ஆளும் அரசுகள் தூண்டி விட்டு எரியும் வீட்டில் பிடுங்கிய கதை ஆக தன கொள்ளையை தொடர்கிறது
ஆகவேதங்கள் ஆதிகத்துகாய் ஆளும் அரசுகளின் கைகூலிகளாய் இருந்து கொண்டு
அம்மக்களை பலி கடாவாக்கும் தேவர்ஆதிக்க சக்திகளை அம்பலபடுதுவோம் ! தனிமைபடுதுவோம் !
சூடான பகுதிக்குப் போயும் கூட ஒரு பின்னூட்டம் கூட இல்லையா!
ஆத்மா said…
அரசியல் பிழைப்பு நடத்துபவர்களின் கண்களுக்கு இதெல்லாம் தென்படாமல் போகிறது என்று சொல்ல முடியாது....
தூண்டுவதும் அவர்களாகத்தான் இருப்பார்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்