குடிகார நண்பர்களுக்கு ஓரு வேண்டுகோள்.தினமும் ஓரு full சாப்பிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு உதவுங்கள். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் வளர்ச்சியில்லை என கவலைபடுகிறது ..தமிழ்நாடு முழுவதும் மதுபானங்களை விற்கும் மொத்த உரிமம் பெற்ற ஒரே நிறுவனம் தமிழ்நாடு அர சுக்கு சொந்தமான தமிழ் நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) ஆகும். இது மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இந்த கடைகளில் மது விற்பனை ஒரே மாதிரியாக இருப்ப தில்லை. இருப்பதற்கான வாய்ப்புமில்லை.இந்நிலையில் தமிழ கத்தில் மதுபான விற் பனையில் “வளர்ச்சி” இல்லை என்று டாஸ்மாக் அதிகாரிகளும்,
அரசும் கவ லைப்பட தொடங்கியுள் ளனர். மதுபானங்களின் விற் பனை குறைகிறது என்பது யாவரும் வரவேற்கக்கூடிய தாக இருக்கும். ஆனால் அரசு விற்பனையை அதி கரிக்க, கடந்த சில தினங் களாக டாஸ்மாக் கடை களுக்கு விற்பனை இலக்கு நிர்ணயித்து விற்க ஊழி யர்களை நிர்ப்பந்தம் செய்து வருகிறது. .தமிழகத்தில் மது விற் பனை குறைவிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த காரணங்கள் :- டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடை களில் அதிகளவில் விற் பனையாகும் மதுவகை களை தேவைப்பட்டியல் மூலம் கோருகின்றனர். ஆனால் டாஸ்மாக் குடோன்களி லிருந்து அப்படிப்பட்ட மதுவகைகளை கடை களுக்கு அனுப்புவது இல்லை. மாறாக அதிகாரிகளின் தேவைகளை “பூர்த்தி” செய்கிற மதுபான நிறு வனங்களின் மதுவகைகள் கடைகளில் பெருமளவில் திணிக்கப்படுகிறது. மேலும் கடையின் சராசரி விற் பனையை கணக்கிட்டு ஒரு கடையில் 4 நாட்களுக் கான சரக்குகள் வைத்துக் கொள் ளும் நடைமுறை தற்போது மாற்றப்பட்டு, 10 நாட்களுக்கான சரக்குகள் அனுப்பப்படுகிறது. இத னால் கடையில் இட நெருக் கடியும், விற்பனையாகாமல் தேக்கமடையும் நிலையும், அரசுக்கு நிதி இழப்பும் ஏற் படுகிறது.மேலும் பல மாவட்டங் களில் கள்ளச்சாராயமும், வெளிமாநில மதுபானங் களும் புழக்கத்தில் இருப்ப தாலும், அவைகளின் விலை மிகவும் குறைவாக இருப் பதால் வாடிக்கையாளர் களில் ஒரு பகுதியினர் அதை நாடிச் செல்வதாலும் விற் பனையில் சரிவு ஏற்படு கிறது.
இவைகளுக்கு மேலாக புதிய ஆட்சிப் பொறுப் பேற்று 15 மாதங்களில் 3 முறை மதுபானங்களின் விலைகள் ஏற்றப்பட்டதும் விற்பனை குறைவிற்கு கார ணமாக அமைந்துள்ளது.டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிவு ஏற்பட்டுள் ளதற்குரிய காரணங்களை ஆராயாமல் விற்பனை இலக்கு வைத்து ஊழியர் கள் மீது நிர்ப்பந்தம் செய் வதும், கடைகளில் விற்கா விட்டாலும் போலியான விற்பனை உயர்வை ஏற் படுத்தி, ஊழியர்கள் தங் களது சொந்த பணத்தை நிர் வாகத்திற்கு செலுத்த வேண் டும், அப்படியில்லை என் றால் பணியிலிருந்து நீக்கி விடுவோம் என்று டாஸ் மாக் அதிகாரிகள் ஊழியர் களை மிரட்டும் போக்கும் டாஸ்மாக் நிறுவனம் உண் மையிலேயே அரசு நிறு வனம் தானா? என்ற சந் தேகத்தை .மதுபானங்களுக்கு விற் பனை இலக்கு வைத்து வர்த் தகம் செய்யும் ஒரே அரசு இந்தியாவில் தமிழக அர சாங்கமாகத்தான் இருக்க முடியும். தமிழக மக்களின் உடல் நலன் குறித்த இந்த விஷயம் தமிழக முதல்வரின் கவனத்தோடுதான் செய் யப்பட்டுள்ளதா என்பதை முதல்வர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்
- செல்வன்
Comments
மக்கள குட்டிச்சுவராக்கிட்டுத்தான் விடுவாங்க போல