ஒரு தட்டு உணவின் விலை ரூ.7721 ?!!!!


டெல்லியில் உள்ள நமக்கு வேண்டிய நண்பரின் வீட்டு பின்புறத்தில் பணம் காய்க்கும் மரம் இருக்கிறது. தினமும் இரவு 12.00 மணியிலிருந்து 12.15 மணி வரை சரியாக 15 நிமிடம் பணம் பறித்துக் கொள்ளலாம். அதன் பிறகு பணம் மறைந்து போகும்.அவன் வீட்டு விருந்து சாப்பாட்டு விலைதான் ரூ.7721, அந்த நண்பர் வேறுயாருமல்ல பிரதமர் மன்மோகன்சிங்தான். சரிநண்பர்களே விஷயத்துக்கு வரேன்...

டீசல் விலை உயர்வு, எரிவாயு உருளை கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ஆகிய மக்கள் விரோத நடவடிக்கைகளை நியா யப்படுத்தி உரையாற்றிய பிரதமர் “பணம் மரத் தில் காய்ப்பதில்லை” என்று திருவாய் மலர்ந்தரு ளியுள்ளார். அவருக்கு மட்டும் பணம் மரத்தில் காய்க்கிறது போலும்.

அவர் தலைமையேற்றுள்ள அரசின் மூன்றா வது ஆண்டு நிறைவின் போது, கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், பிரமுகர்களுக்கும், நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும், இன்னும் பலருக் கும் ஒரு மகா விருந்து அளித்திருக்கிறார். அந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி 603 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட் டது. அதில் 375 பேர் தான் கலந்து கொண்ட னர். 603 பேருக்கு தயா ரிக்கப்பட்ட உணவில் பெரும் பகுதி வீணானது. இவர் தான் மக்களுக்கு சிக்கனத்தைப் பற்றி போதிக்கிறார். விருந்தில் படைக்கப் பட்ட உணவு வகைகளை “நம்ம மனுசங்க” (ஆம் ஆத்மி - யயஅ யயனஅi) கற்பனையில் மட்டுமே உண்டு மகிழ முடியும். இறால் கசுடி, மலபாரி மீன், செட்டிநாடு சிக்கன், கோஸ்ட் பர்ரா கபாப், டம் ஆலூ, அச்சாரி பைங் கன், பீஸ் மஜார் மட்டர், பிரியாணி, பேபி நான், மட்டர் பராத்தா, மிஸ்ஸி ரொட்டி, பழரசம், நெய் யில் வறுக்கப்பட்ட பாதாம்பருப்பு ஆகியவை விருந் தில் பரிமாறப்பட்ட சில பண்டங்கள் ஆகும். இவை அடங்கிய ஒரு தட்டு உணவின் விலை யைக் கேட்டால் நல்ல வசதி படைத்தவர்களுக்குக் கூட மயக்கம் வரக்கூடும். இவை அடங்கிய ஒரு தட்டு உணவின் விலை ரூ.7721 ஆகும்.

திட்டக்குழு உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரம் ஒன்றில் ஒரு கிராமப்புற ஆம் ஆத்மி ஒருவர் ரூ.26ஐக் கொண்டும், நகர்ப் புற ஆம் ஆத்மி ஒருவர் ரூ.32ஐக் கொண்டும் ஒரு நாள் பொழுதைக் கழிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. ஐ.மு.கூட்டணியின் இரண்டா வது அரசின் பிரதமர் அளித்த விருந்தில் ஒரு நபருக்கு அளிக்கப்பட்ட உணவின் விலையைக் கொண்டு, திட்டக்குழுவின் கணக்கின்படி 296 ஆம் ஆத்மிகளுக்கு ஒரு நாளைக்கு உணவு அளிக்க முடியும். இவர்களுக்கு பணம் எதில் காய்க்கிறது என்று ஆம் ஆத்மிகளுக்குப் புரியவில்லை.

தகவல் உரிமை ஆர்வலர் ரமேஷ் வர்மா தாக்கல் செய்த மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகவலின்படி, பிரதமர் அளித்த இரவு உணவிற்காகச் செலவழிக் கப்பட்ட மொத்த தொகை ரூ.11 லட்சத்து 34 ஆயிரத்து 296 ஆகும். உணவுக்கூடாரம் உள் ளிட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.14 லட்சத்து 42 ஆயிரத்து 678 செலவாகியுள்ளது . பூக்களுக் காக ரூ.26 ஆயிரத்து 444 செலவிடப்பட் டுள்ளது.ஆக மொத்தம் இந்த விருந்துக்காக அரசு கருகூலத்தில் இருந்து ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 503 வீணடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் மக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றனர்.

உங்களின் ஆடம்பர விருந்துக்குச் செலவிடப் பட்ட பணம் மரத்தில் காய்க்கவில்லை பிரதமர் அவர்களே! மாறாக, இந்த நாட்டு மக்களுக்கு மட்டும் உரித்தான அரசு நிதியில் இருந்து எடுக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- தாஸ்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

bandhu said…
என்ன அநியாயம்! இவர்களுக்கெல்லாம் மக்களை பற்றி பேசவே யோக்யதை இல்லை. இவர்களெல்லாம் நம்மை ஆள்வது நம் தலைவிதி தானே தவிர வேறென்ன?
இவர்களை இன்னமும் நாம் ஆட்சியில் வைத்து இருப்பது தான் நம் தவறு...மக்களே சிந்தியுங்கள்..இப்படி ஒரு ஆட்சி நமக்கெல்லாம் தேவைதானா...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Anonymous said…
This Anuvaaliya and Manmohan are the real stuppits in India
இது போல் இன்னும் நிறைய கொடுமைகள் உள்ளன நண்பரே...