ரவுடிகளிடம் மாட்டிக் கொண்ட எனது விநாயகர்


விநாகர்சதுர்த்தி வந்தாலே பயமும்,பதற்றமும் தொற்றிக்கொள்கிறது. இந்தாண்டு மதமோதல்கள் பிரச்சனை வருமா? என்ற கவலைகள், மக்களின் விருப்பத்திற்குரிய கடவுளின் பிறந்த தினம் கலவரநாளாக மாறிப்போனது எப்படி? விநாயகரை அரசியலுக்கு அழைத்து வந்தது யார்? விநாயகரின் தோற்றத்திலிருந்து, அவர் அரசியிலில் நுழைவு வரை சில தகவல்கள் .....


விநாயகரின் தோற்றக் கதைகள்...

சில கதைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும்... மேலும் சில புதிய கதைகள்...

  • சிவனின் மனைவியான பார்வதி ஒருநாள் தனது உடலில் உள்ள அழுக்கை திரட்டி விளையாடிக் கொண்டிருந்த போது அதற்கு விசித்திர உருவம் கொடுத்தாள், பின் அதனாள் கவரப்பட்டு அதற்கு உயிர் கொடுத்து அதனை தன் மகனென்று அழைத்தாள்.
  • பார்வதிக்கு பிறந்த ஆண் குழந்தையொன்று சனிபார்வை பட்டு தலையில்லாமல் பிறந்தது,அதனால் வருந்திய பார்வதியின் மீது இரக்கம் கொண்ட விஷ்ணு யானை தலையை கொண்டுவந்து முண்டத்தின் மீது ஒட்டினார்.
  • பிள்ளையார் கருவில் இருக்கும் போது சித்துரோன் என்ற அரக்கன் கருப்பையில் புகுந்து தலையை தின்றுவிட்டான், தலையில்லாமல் பிறந்த குழுந்தை கஜசூரன் என்ற அரக்கனின் தலையை கொய்து தன்னுடலில் பொருத்திக்கொண்டது.
  • இமயமலை அடிவாரத்தில் சிவனும்,பார்வதியும் யானையின் வடிவெடித்து புணர்ந்தார்கள் அதன் விளைவாக யானை தலையுடன் பிறந்த குழுந்தைதான் விநாயகர் என்று திருஞானசம்பந்தரின் தேவாரம் குறிப்பிடுகிறது.
  • மரகத முனிவருக்கும், விபதை என்ற அசுரகுழப்பெண்ணும் யானை வடிவெடுத்து பிறந்த குழந்தைதான் விநாயகர்.
  • சிவபெருமான் கைலாயத்தில் தியானத்தில்ஆழ்ந்துவிட்டார், தனிமையில் விடப்பட்ட பார்வதி தன்மீது அன்புசெலுத்தவும் தன்னை பாதுகாக்கவும் வேண்டி தன் உடல் அழுக்கை உருட்டி செய்யப்பட்ட குழந்தை தான் விநாயகர்.

கணபதி என்ற சொல்லுக்கு பொருள் என்ன?


விநாயகருக்கு கணபதி,பிள்ளையார்,கணேசர் எனற் பல பெயர்கள் உண்டு என்பது நாம் அறித்ததே. அதில் கணங்களின் கடவுள் என்பது தான் கணபதி . கணா + பதி என்ற சொல்லை பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்ளாம், கணபதியின் மற்றொரு பெயரான கணேசர் என்ற சொல்லை கணா+ஈசர் என்று கணங்களின் கடவுள் என்றும் பொருள் கொள்ளலாம். குப்தர்களின் காலத்திற்கு பிறகு கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் கணபதி என்ற கடவுள் உருவாக்கப்படுகிறார்.அதற்கு முன்  வேதங்கள்,புத்த,சமண நூல்களில் கணபதி என்ற கடவுள் இல்லை.

விநாயகருக்கு கீழ் எலி வந்தது எப்படி?

மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும், மாதங்கி என்பதே யானையை குறிப்பதாகும். தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கு சின்னம் வைத்து கொள்வதைப்போல பல நூற்றாண்டுகளுக்கு முன் பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்த மனிதர்கள் தங்களுக்கென குலகுறிகள் வைத்துக்கொண்டார்கள். தங்கள் யானையின் வம்சம்,யானையை போல பலம் பொருந்தியவர்கள் என்பதற்காக.

     இதேபோல் மூசிகர் என்ற எலியை குலக்குறியாக கொண்ட குழுக்கள் இருந்துள்ளன, தென்னிந்தியாவில்    முசிகர் என்ற குழு சேர்ந்த மனிதர்கள் கூட்டம் இருந்துள்ளதாக மகாபாரதம் குறப்பிடுகிறது. தமிழ்நாட்டில் கொங்கு வேளாளர்களிடம் குண்டெலிக் கூட்டம் என்ற பிரிவுள்ளது. வட இந்தியாவில் முசிகர் என்ற சொல் எலியை குறிப்பதாகும். ஒரு கட்டத்தில் யா¬னை குழுவுக்கும் ,எலி குழுவுக்கும் எற்பட்ட மோதலில் யானைக்கூட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ,எலி கூட்டம் அடிமையானதின் வெளிப்பாடுதான் விநாயகருக்கு கீழ் எலி வந்த ரகசியம்.

பிடிச்சா விநாயகர் -வலிச்சா சாணி 

வட இந்திய கடவுளான விநாயகர், தமிழகத்திற்கு வடஇந்திய வணிகர்கள் மூலமாக அறிமுகமானார்.தமிழ்நாட்டில் கிபி.6ம் நூற்றாண்டில் விநாயகர் வழிபாடு துவங்கியது. தமிழகத்தின் மிகப் பழமையான விநாயகர் கோயிலாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பட்டி விநாயகர்தான். அப்போதெல்லாம் விநாயகருக்கு இரண்டு கைகள் மட்டுமே, பூணூல்,நகைகள் இல்லாமல் இருப்பார். பிறகு தான் பூணூல்,நகைகள், கூடுதலாக கைகள் இணைக்கப்பட்டு, கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டது, படிபடியாக பொக்கரான் விநாயகர்,கார்கில் விநாயகர் வரை வந்து விட்டது. அமைதியான கடவுள ஆயுதபாணியா மாத்திட்டாங்க.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை  பெய்ய விட்டால் வெட்ட வெளியில் இருக் கும் விநாயகர் உருவத்தின் மீது மிளாகாய் வற்ற லை அரைத்து பூசுவிடுவது வழக் கம்.சில இடங்க ளில் சாணியை கரைத்து பூசுவர், அப்போது தான் விநாயகர் மழை வரவைப்பார் என்பது நம்பிக்கை. கொல்லிமலை ஆதிவாசிகள் குப்பையில் புதைத்து வைப்பர். சில கிராமங்களில் விநாயகரை கிணற்றுக்குள் போட்டுவிடுவதுமுண்டு, மழை வந்ததும் மீண்டும் அதனை எடுத்து உரிய இடத்தில் வைப்பர்.விநாயகர் கோயில் கருவரையை களிமண்ணால் அடைத்து வைப்பதும் உண்டு. இப்படி மக்களின் கடவுளாக இருந்த விநாயகர் எப்போது கலவரவிநாயகராக மாறினார்? விநாயகரை அரசியலுக்கு இழுத்து வந்தது யார்?

அரசியலுக்கு வந்த விநாயகர்....

1893ம் ஆண்டு மராட்டியமாநிலத்தின் தலைநகரான மும்பையில் விநாயகரின் அரசியல் நுழைவு தொடங்கியது. இந்திய தேசிய காங்கிரஸின் துவக்க கால தலைவர்களில் ஒருவரான திலகர் தான் விநாயகரின் அரசியல் நுழைவுக்கு காரணம்.விநாயகர் சதுர்த்தி எனப்படும் விநாயகரின் அவதாரநாள் மாராட்டிய மாநிலத்தில் அனைத்த்து மதத்தினரும் இணைத்து கொண்டாடப்பட்டதை மாற்றினார் திலகர். விநாயகர் ஊர்வல பஜனை பாடல்களில் இந்து ,முஸ்ஸிம் மக்களை  பிளவுபடுத்தும் வரிகள் இருந்தன. விநாயகர் ஊர்ரலத்தை அப்போது முன்னின்று நடத்தியவர்களே இந்துமகாசபை துவங்கினர், இந்து மகாசபையில் உறுப்பினராக இருந்தவர்தான் காந்தியை கொன்ற கோட்சே. தற்போது இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ்,விஸ்ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் என பல அரதாரம் எடுத்திருக்கிறது. தற்போது விநாயகர் சதுர்த்திக்கு சிலை செய்வதிலிருந்து ஊர்வலப்பாதையை முடிவு செய்வதுவரை இவர்கள்கையில் தான் இருக்கிறது.

தமிழக அரசியலில் விநாயகர்...

பெரியகோயில்,தெருமுனை,இண்டுஇடுக்கு,திருட்டு பிள்ளையாராக மக்களோடு நெருக்கமாக இருந்த விநாயகர் கலவரப்பிள்ளையாராக தமிழத்தில் 1981ல் மாறிப்போனார். இந்து மதத்தில் தீண்டாமை கொடுமைகளை பொருக்காமல் திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுத்தில் 180 தேவேந்திரகுல வேளாளர்குடும்பங்கள் முஸ்ஸிம் மதத்திற்குமாறினார்கள் . இந்த மதமாற்றத்தை தடுக்கிறோம் என்ற பெயரில் இந்துமுன்னணி உருவாக்கப்பட்டது. இவர்கள் விநாயகர்சதுர்த்தி நாட்களில் முஸ்ஸிம்களை தாக்குகிறோம் என்ற பெயரில் மதக்கலவரத்தை உருவாக்கினார்கள்.
                         விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பாதையை நீங்கள் கவனித்தால் அவை இந்து கோயில்கள்,இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் செல்லாது. முஸ்ஸிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதியிலேயே இருக்கும். உதாரணமாக சென்னை திருவல்லிகேணிப் பகுதி, இராமநாதபுரத்தில் இந்துக்களின் புனிததலமான ராமேஷ்வரத்திற்கு செல்லாமல் முஸ்ஸிம்கள் அதிகமாக வாழம் கீழக்கரைக் செல்லுவதும் கலவர  நோக்கம் கொண்டது.

       நாலும் நாலும் எட்டு 
      துலுக்கனக் கண்டால் வெட்டு
      
      ஹம் ஹைம் ஔலாத் ஸ்ரீராம்கீ
      இஸ்லாமி ஹை ஔலாத் ஹராம்கீ

( நாம் ராமனின் பிள்ளைகள் முஸ்ஸிம்கள் விபச்சாரியின் பிள்ளைகள்)
1994 ல் சென்னை விநாயகர் ஊர்வலத்தில் பாடப்பட்ட பாடல்.

விநாயகரா இப்படி செய்ய சொன்னார்....

கண்மாய்கரையோரம்,ஆலமரம்,அரசமரங்களில் அமர்ந்து தனது அம்மாவைபோல மனைவிக்காக காத்திருப்பதாகவும்,திருமணமாக பெண்களுக்கு மங்கலபாக்கியம், குடும்ப பிரச்சனைகளை தீர்க்க என அருல்பாலித்த விநாயகரா இப்படி செய்ய சொன்னார். இல்லையே? மனிதர்களின மதவெறி விநாயகரையும் கலவர விநாயகரா மாற்றி விட்டது.
          சிறுவயதில் காலை உணவு விநாயகர் கோயிலுக்கு போகமல் சாப்பிடுவதில்லை, ஆனால் தற்போது கலவரவிநாயகராக மாறிய விநாயகர் கோயிலை கடக்கும் செல்லும் போது கூட கன்னத்தில் போட்டு கொள்ள மனம் வரவில்லை. விநாயகா ரவுடிகளின் கைகளில் இருந்து மீண்டு எப்பதோ மக்கள் விநாயகராக மாறுவாய்.-

-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

arumaiyana unmai pagirvukku nanri
mubarak kuwait said…
நல்ல பதிவு, நேர்மையாக எழுதி இருக்கிறீர்கள், சம்பந்த பட்டவர்களுக்கு புரிந்தால் சரி
உண்மை தான்... மாற வேண்டும்...
ஆத்மா said…
நல்லதொரு பகிர்வு... + பதிவு...
இளஞ்செழியன் said…
சமூகத்திலிருந்து மதச்சாயம் நீங்க வேண்டும்... அது என்றுமே போலியானது...கவர்ச்சியானது.... ஆபத்தானது.

உண்மையை வெளிக்காட்டுதல் நல்லது. உண்மை எது வென்று தெரியாதவர்களுக்கு இது மாதிரியான கட்டுரைகள் உதவும்.
நேர்மையான அலசல். இந்து அமைப்புகளை தவிர மற்ற அனைத்து இந்துக்களும் இதைத்தான் நினைப்பார்கள் என நம்புகிறேன். விநாயகர் ஊர்வலத்தை ஏன் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாக காவலர்கள் அனுமதிக்கிறார்கள் என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் அது திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது என்பது தங்கள் பதிவை படித்தவுடன் தோன்றுகிறது. உலகிலேயே, அவரவருக்கு பிடித்தமான உருவத்தில் செதுக்கப்பட்ட கடவுள் விநாயகர் மட்டுமே. அரசியல்வாதிகள் அவர்கள் நலன்களுக்காக கலவரக்கடவுளாக உருவம் செதுக்கியிருக்கிறார்கள்.
மழை said…
நாகையிலும் வருடா வருடம் இதே பிரச்சினைதான். நாகூர் முஸ்லீம்களின் அக்கப்போர் தாங்காது.
Mansurali said…
UNMAI PATHIVIRKU INTHA SAGOTHARANIN NATRIGAL