டாஸ்மாக் பார்ல கடைதிறக்க சரக்கு வாங்குற முதல்குடிமகன்,இரவு 10 மணிக்கு பார் அடைக்கும் போது கடைசியா சரக்கு வாங்குற கடைசி குடிமகனை பற்றிய பதிவு அல்ல...
இந்தியாவின் முதல்குடிமகன் அதாங்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, அன்றாடங்காட்சியா இருக்கிற ஏழை குடிமகனை பற்றிய பதிவு.
முதல்குடிமகனான ஜனாதிபதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட மாளிகை, எத்தனை மணிநேரமும் பேசிக்கொள்ளும் வசதியுடன் தொலைபேசி, மாதத்திற்கு நூறு கேஸ்சிலிண்டர்கள்,எந்த நேரத்திலும் தனது குடும்பம், சொந்தபந்தங்களை அழைத்துச்செல்ல இலவச விமான டிக்கெட்.... (முன்னால் ஜனாதிபதி பிரதிபா பாட¢டேல் தான் இதுவரை இருந்த ஜனாதிபதிகளிலேயே அதிகமாக வெள்நாட்டு சுற்றுபயணம் மேற்கொண்டவர் ) என இன்னும் பல இலவச வசதிகள் உண்டு.
இதுவரை இருந்த ஜனாதிபதிகள் குண்டு துளைக்காத வெள்ளை நிற அம்பாசிடர் காரில் தான் பயணித்தார்கள்.தற்போது அமெரிக்க அதிபருக்கு இணையாக இந்திய ஜனாதிபதிக்கும் கார் ரெடி, இந்த காரின் ஸ்பெஷல் விஷயங்கள் ...
- மெர்சிட்ஸ்பென்ஸ் எஸ்.600 ரகத்தை சேர்ந்த இந¢த கருப்பு காரின் விலை ரூ.6 கோடி, இதை கார் என்பதை விட நகரும் ஆபீஸ் எனலாம்.
- ஆறுபேர் இதில் அமரலாம், டிரைவரும் அவர் பக்கத்தில் ஜனதிபதியின் உதவியாளரும் அமரும் முன்புறம்,சவுண்ட்புரூப் கண்ணாடித்தடுப்பால் பிரிக்கப்பட்டிருக்கும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் பேசுவது எதுவும் இவர்களுக்கு கேட்காது.
- பின்புற இருக்கைகளில் வழக்கமான காரைப்போல முதுகைப்பார்த்துக் கொண்டு அமரவேண்டியதில்லை. நான்குபேர் எதிரேதிரே பார்த்தபடி அமரலாம். உயர்ரக மரத்தாலும் ஒரிஜினல் லெதராலும் வடிவமைக்கப்பட்ட உட்புறம்.
- அதிநவீன ஃபிரிட்ஜ் உள்ளே உண்டு.ஜில்லென்று தண்ணியடிக்கலாம்.
- எவ்வளவு வெயில் அடித்தாலும் உள்ளே ஏ.சி போதுமான அளவு இருக்கும். ஏ.சி. இயந்திரத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் தானாகவே வெளிகாற்று உள்ளே வந்துவிடும். உள்ளே தீப்பிடித்தால் தீயணைப்புக்கருவி தானகவே இயங்கி தீயை அணைத்துவிடும்.
- பின்புறம் வரும் வாகனங்களை கண்காணிக்க கேமரா இருக்கிறது.துப்பாக்கி புல்லட் , கையேறி குண்டுகள் எதுவும் காரைத்துளைக்காது.காரின் டயர் கூட புல்லட்புரூப், ஒருவேளை ஏதாவது விபரீதம் நிகழ்ந்து பங்ச்சர் ஆனால் அந்த நிலையிலும் மணிக்கு 30 கிமீ வேகத்தில் காரை ஓட்டலாம்
- செயற்கைக்கோள் தொடர்பு, இன்டர்நெட்தொடர்பு,ஜி.பி.எஸ் தொடர்பு எல்லாம் கிடைக்கும்.
- எதாவது விபத்தில் சிக்க நேர்ந்தால் உள்ளே இருக்கும் போன் தானாகவே இயங்கி எமர்ஜென்சி உதவியை அழைக்கும்.
கோடிகோடியாய் குவிக்கும் இந்தியர்கள்.. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜின்டால் நிறுவனத்தின் தலை வருமான நவீன் ஜின்டாலின் ஆண்டு வருமானம் ரூ.69.76 கோடி. அதாவது நாளொன் றுக்கு ரூ.18 லட்சத்து 90 ஆயிரம். சன் தொலைக்காட்சி குழும நிறுவனர் கலாநிதிமாறனின் ஆண்டு வருமானம் 37.08 கோடி. அதாவது நாளொன் றுக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம். அவரது மனைவி காவேரி மாறனின் ஆண்டு வருமானம் ரூ.37.08கோடி. நாளொன்றுக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம். |
- செல்வன்
Comments
ஒரு சின்ன செய்தி... கடைசி குடிமகனாவது மிக சுலபம் அதில் என்றுமே போட்டியில்லை. யார்வேண்டுமானாலும் ஆகிவிடலாம் கடைசி குடிமகனாக...