இந்திய நாட்டில் கணிசமான மக் கள் தொகை கொண்டவர்களாக முஸ்லிம் கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகை யில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதம். பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம்களின் வாழ்நிலை மிகவும் பரி தாபத்துக்குரியதாகவே உள்ளது. இந் நிலையில் தான் பா.ஜ.க. போன்ற இந் துத்துவ வகுப்புவாத இயக்கங்கள், இந்தி யாவில் சிறுபான்மையினரான முஸ்லிம் களுக்கு தேர்தல் ஆதாயத்துக்காக சலு கைகளை அள்ளிக் கொடுப்பதாகவும், இதனால் பெரும்பான்மை மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதாகவும் உண் மைக்கு மாறான கோயபல்ஸ் பிரச்சாரத் தைத் தொடர்ந்து செய்துவந்துள்ளனர். எனவே முஸ்லிம்களின் உண்மையான வாழ்நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களது வாழ்நிலையில் முன்னேற் றத்தை ஏற்படுத்தவும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை கள் தொடர்ந்து வலுப்பட்டு வந்தன.
டாக்டர் கோபால் சிங் கமிஷன்
1983 ல் மத்திய காங்கிரஸ் அரசு டாக்டர் கோபால் சிங் தலைமையில் முஸ்லிம்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களது வாழ்நிலை யில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த பரிந்துரை செய்யவும் ஒரு கமி ஷனை அமைத்தது. அதில் 10 வல்லுநர் கள் உறுப்பினர்களாக இருந்தனர். அந்த குழு 14.6.1983 ல் ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. அரசு அதை வெளியிட முன்வரவே இல்லை. அதன் பரிந்துரைகள் என்ன வென்பதோ, அதில் கூறப்பட்டிருந்த விபரங்கள் என்னவென்பதோ அரசால் வெளிப்படுத்தப்படாத நிலையில், முஸ் லிம்களின் வாழ்நிலை குறித்து தொடர்ந்து தவறான தகவல்கள் அடிப்படையிலான பொய்ப் பிரச்சாரமே உலா வந்தது. 1998 முதல் பா.ஜ.க. தலைமையிலான வகுப்பு வாத அரசு மத்தியில் ஆட்சியில் அமர்ந்த சூழ்நிலையில், இத்தகைய பொய்ப் பிரச் சாரங்கள் வலுவாக நடந்தன. முஸ்லிம் களின் நிலையோ தொடர்ந்து பரிதாபகர மான நிலையிலேயே தொடர்ந்தது.
நீதிபதி சச்சார் கமிஷன்
2004 ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மக்களால் தூக்கி எறி யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கோ, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணிக்கோ தனிப் பெரும் பான்மை கிடைக்கவுமில்லை. இந்நிலை யில் தான் வெளியிலிருந்து இடதுசாரி களின் ஆதரவைப் பெற்று, மைனாரிட்டி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காங் கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஆதர வின்றி செயல்பட இயலாத நிலையில், இடது சாரி கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் பல நல்ல முன்முயற்சிகள் அந்த அரசால் துவக்கப்பட்டன. அதில் ஒன்று தான் நீதிபதி சச்சார் கமிஷன் அமைக்கப் பட்டதும் ஆகும்.
இந்திய நாட்டில் உள்ள சிறு பான்மை முஸ்லிம்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களது முன்னேற் றத்துக்கான பரிந்துரைகளை வழங்கவும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு வல்லுநர் குழு மத்திய அரசால் அமைக் கப்பட்டது. இந்திய நாடு முழுவதும் முஸ் லிம்களின் வாழ்நிலை குறித்து கருத்தறிந் தும், மத்திய-மாநில அரசுகளின் அதி காரப்பூர்வ தகவல்களை கேட்டுப் பெற்றும் ஒரு அறிக்கையைத் தயாரித்து, 17.11.2006 ல் மத்திய அரசிடம் சமர்ப்பித் தது. அந்த அறிக்கை வெளிவந்த போது நாடே அதிர்ச்சியுற்றது. இந்திய நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் எப்படி விளிம்பு நிலையில் உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் அந்த அறிக்கை வெளிச் சம் போட்டுக் காட்டியது.மேலும் முஸ்லிம் களின் முன்னேற்றத்துக்கான பல முக்கிய பரிந்துரைகளையும் அக்குழு அளித்தது.
சச்சார் குழு வெளிப்படுத்திய உண்மைகள்
இந்திய நாட்டின் மக்கள் தொகை யில் 13.4 சதவிகிதமாகவுள்ள முஸ்லிம்கள் கல் வியிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர் என்பதை ஆதாரபூர்வமாக அந்த அறிக் கைச் சுட்டிக்காட்டியது. மத்திய அரசுத் துறைகளில் முஸ்லிம்கள் வெறும் 4.9 சதவிகிதம் மட்டுமே உள்ளனர் . அரசின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே யில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 4.2 சதவிகிதம் மட்டுமே என்பதும், அவர்க ளிலும் 98.7 சதவிகிதம் முஸ்லிம்கள் கடைநிலை பணிகளிலேயே உள்ளனர் என்பதும் வெளிப்பட்டது. இந்திய குடி மைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் போன்ற உயர் பதவிகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 3.2 சதவிகிதம் மட்டுமே. நீதித்துறையில் கூட 7.8 சதவிகிதம் மட்டுமே முஸ்லிம்கள்.
காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு . ஒரு வகையில் கூறினால், பாதுகாப்பு துறை களில் முஸ்லிம்கள் நியமனம் செய்யப் படாமல் புறக்கணிக்கப்பட்டே வந்துள் ளனர் என்பதும் அந்த அறிக்கையில் வெளிப்பட்டது. குறிப்பாக கூறினால், தமிழகத்தில் காவல்துறையில் முஸ்லிம் களின் எண்ணிக்கை மிக, மிக சொற்பம். 5.5 சதவிகிதம் தமிழக மக்கள் தொகை யில் முஸ்லிம்கள் இருந்தும் காவல்துறை யில் அவர்களது எண்ணிக்கை துச்ச மான 0.11 சதவிகிதம் மட்டுமே ஆகும்.
தேசிய அளவில் கல்வியில் கூட முஸ் லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருந்தனர். பட்டப்படிப்பு முடித்தவர் 3.4 சதவிகிதம், முதுகலைப் பட்டம் பெற்றவர் 1.2 சதவிகிதம் மட்டுமே. முஸ்லிம் களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ் பவர்கள் மட்டும் 94.11 சதவிகிதம். நிலமற்ற முஸ்லிம்கள் 60.4 சதவிகிதம். இதுவே அவர்களது கல்வி நிலைக்கு பிரதான கார ணமாக அமைந்துள்ளது என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இத்தகைய உண்மைகளை வெளிக் கொணர்ந்த சச்சார்குழு சில முக்கிய பரிந்துரைகளையும் வழங்கியது. குறிப்பாக முஸ்லிம்களின் வாழ்க்கையில் குறிப் பிடத்தகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத் தும் வகையிலான அந்த பரிந்துரைகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி 2007 நவம் பரில் ஒரு சிறப்பு மாநாட்டை புது தில்லி யில் நடத்தியது. அதில் இந்திய நாடு முழு வதிலுமிருந்து வந்து பங்கேற்ற முஸ்லிம் சமுதாயப் பிரதிநிதிகள், சச்சார்குழு பரிந் துரை அடிப்படையிலான விவாதங்களை முன் வைத்தனர். அந்த மாநாடு சில முக் கிய கோரிக்கைகளை இறுதிப்படுத்தியது. முஸ்லிம்களின் வளர்ச்சிக்கான துணைத் திட்டத்தை உருவாக்க வேண்டும், முஸ் லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அதற் கான நிதி ஒதுக்கப்பட வேண்டும், மவு லானா ஆசாத் பவுன்டேஷன், தேசிய முஸ்லிம் சிறுபான்மை வளர்ச்சிக் கழகம், வக்பு கவுன்சில் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க வேண் டும், மத்திய-மாநில அரசு வேலை வாய்ப்பு களில் , குறிப்பாக பாதுகாப்பு படைகளில் முஸ்லிம்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும், உருது கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை அமலாக்க வேண்டும் என் பன போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் தலைமையிலான குழு பிரதமரை நேரில் சந்தித்து வழங் கியது.
தமிழக ஆய்வுகள் காட்டும் உண்மைகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு முடிவுப்படி தமிழகத்தின் சில மாவட்டங்களில் முஸ்லிம்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. திண்டுக்கல் பேகம்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் 200 குடும்பங்களில் 82 பேர் ஆரம்பக் கல்வி கூட பெறாதவர்கள் என் பதும், ஆரம்பக் கல்வி பெற்றவர்கள் 96 பேர் என்பதும், உயர்நிலை கல்வி பெற்றவர்கள் 16 பேர் என்பதும், பட்டதாரிகள் வெறும் 6 பேர் தான் என்பதும், 22 பேருக்கு மாத வருமானம் ரூ.1000 க்கும் குறைவாகவே உள்ளது என்பதும், மாத வருமானம் ரூ.5000க்கும் குறைவாக உள்ளவர்கள் 171 பேர் என்பதும், ரூ. 5000 மேல் வருமானம் உள்ளவர்கள் வெறும் 14 பேர்தான் என் பதும் தெரிய வந்தது. 200 குடும்பங்களில் வங்கிக் கடன் கிடைத்தவர்கள் 3 பேர் மட்டுமே.நிலம் உள்ளவர்கள் 2 பேர். சொந்த வீடு உள்ளவர்கள் 2 பேர் தான்.
தமிழகத்திலேயே அதிக கல்வி அறிவு படைத்தவர்கள் உள்ள குமரி மாவட் டத்தில் 599 குடும்பங்களில் எடுக்கப் பட்ட ஆய்வில், ஆரம்பக் கல்வி பெறாத வர்கள் 56 பேர். ஆரம்ப கல்வி மட்டும் பெற் றவர்கள் 184 பேர், உயர்நிலை கல்வி பெற்றோர் 226 பேர், மேல் நிலை கல்வி பெற்றோர் 66 பேர், பட்டதாரிகள் 45 பேர், முதுகலை பட்டம் பெற்றோர் 22 பேர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடத் தப்பட்ட 1700 குடும்பங்கள் குறித்த ஆய் வில், கூலி வேலை செய்பவர்கள் 366 பேர், சுயவேலை 74 பேர், வியாபாரிகள் 62 பேர், ரூ.1000க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் 91 பேர், ரூ.5000 வரை வரு மானம் உள்ளவர்கள் 514 பேர், ரூ.5000 க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 21 பேர் மட்டுமே என்று கண்டறியப்பட்டது. அங்கு ஆரம்ப கல்வி இல்லாதோர் 60, ஆரம்ப கல்வி மட்டும் பெற்றோர் 231, உயர்நிலை கல்வி 185, மேல்நிலை கல்வி 38, பட்டதாரி 10 பேர், முதுகலை பட்டதாரி ஒருவர் மட்டுமே. இந்த விபரங்கள் ஆண், பெண் வேறுபாடின்றி பொதுவாக உள்ளது என்றாலும், இதில் பெண்கள் நிலை மிகவும் கவலைக்குரியது ஆகும்.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை
இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழு அமைத்து, சிறு பான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்ய பணித் தது. அந்த குழு 2007 மே 10ல் தனது பரிந் துரையை மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால் மத்திய காங்கிரஸ் தலைமையி லான அரசு அந்த அறிக்கையை வெளியே காட்டாமல் இருட்டடிப்பு செய்தது. நாடாளுமன்றத்தில் கூட வைக்க வில்லை. கோபால்சிங் கமிஷன் அறிக் கையின் கதி தான் இதற்கும் ஏற்படுமோ என்றிருந்த நிலையில், 2009 ல் இடது சாரிகட்சிகள் நாடாளுமன்றத்தையே நடத்தவிடாமல் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டுமென நிர்ப்பந்தம் கொடுத்த பின்னர் தான் நாடாளுமன்றத் தில் இந்த அறிக்கை வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் சிறுபான்மை மக்க ளுக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றும், முஸ்லிம்க ளுக்கு மட்டும் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றும் பரிந்துரைத் தது. ஆனால் இந்த பரிந்துரை குறித்து மத் திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் இம்ரான் கித்வாய், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை அரசியல் சட் டப்படி சாத்தியமற்றது என்று வெளியிட்ட அறிக்கை 12.2.2010 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசோ முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை சட்டபடியாக அறிவித்து அமலாக்கியது என்பது குறிப் பிடத்தக்கது.
இந்நிலையில் தான் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அங்குள்ள கணிசமான முஸ்லிம்களின் வாக்கு களைப் பெற வேண்டுமென்ற நோக்கில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவீத இட ஒதுக் கீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த குள்ளநரித் தந்திரம் அங்குள்ள மக்களிடம் பலிக்க வில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தின. உரிய சட்ட பாதுகாப் பின்றி அவசர கோலத்தில் காங்கிரஸ் அர சால் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பும் ஆந்திர உயர்நீதிமன்றத்தால் தடை செய் யப்பட்டுள்ளது.
- எஸ்.நூர்முகம்மது, cpm
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments
கண்ணீரில் முஸ்லீம் சமூகம்: “விடியுமா? தெரியல வேதனை தீரல”
இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக ஏங்கி காத்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.
நாட்டிற்காக சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற இந்திய முஸ்லீம் சமுதாயம்
உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்
இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்
2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை இந்திய முஸ்லீம் சமுதாயம் .
நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டில் 20 சதவிகிதத்திற்கு மேலாக முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் நிலையில் அரசின் புள்ளி விபரங்களோ 13 சதவிகிதத்தினரே இருப்பதாக கூறுப்படும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இந்த தொகை இருந்திராத
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில் இந்திய முஸ்லீம் சமுதாயம்.
CLICK மேலும் படிக்க HERE
கல்வி நிலையில் பல முஸ்லிம் குடும்பங்கள் பின் தங்கியே உள்ளன .. உண்மையை சொல்லப் போனால் சாதிய / பொருளாதார பிளவு இச்சமூகத்திலும் இருப்பதை நன்கு அவதானிக்க முடிகின்றது .... !!!
ஒரு சில பின்னணிக் கொண்ட முஸ்லிம் குடும்பங்கள் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் பல சாதிய தாழ்நிலையில் இருக்கும் முஸ்லிம்களும், அடக்கப்பட்ட சாதிகளில் இருந்து மதம் மாறியவர்களும் பள்ளிக் கல்வியைக் கூட பெறாத நிலையை நானும் கண்டுள்ளேன் !!! முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடும், உள் ஒதுக்கீடும் அவசியமான ஒன்றாகும் !!!
ஆதார புள்ளி விபரங்களுடன்
எளிய தமிழில்
அழகிய பதிவு