அம்மனமாக நிற்கும் அமெரிக்க சுதந்திரதேவி சிலை....


அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.தற்போது வேலையின்மை அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தீவிரப்படுத்தி யுள்ளது.

அமெரிக்காவில் நிலவும் வேலை யின்மை குறித்து அந்நாட்டின் தொழி லாளர் துறை அமைச்சகமும் உண்மை களை ஒப்புக்கொள்கிறது. ஏற்கெனவே நீண்ட காலமாக வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாமல் கொந்தளிக்கும் பட்டாளத்தோடு, கடந்த 6 மாத காலமாக எவ்வித வேலைவாய்ப்பும், சிறு வரு மானமும் கூட இன்றி 57 லட்சம் தொழி லாளர்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது, தொழிலாளர் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்திருக்கிறது.

இந்த அறிக்கையின்படி நவம்பர் மாத இறுதியில் வேலையில்லாதவர் களின் எண்ணிக்கை மொத்தம் 133 லட்சம் ஆகும். இவர்களில் பகுதி நேரம் மட்டுமே வேலை கிடைத்தவர்கள், 2 மணிநேரம் மட்டுமே வேலை கிடைத்த வர்கள், வாரத்தில் 1 நாள் அல்லது 2 நாள் மட்டுமே வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை அடங்காது. இவர்க ளையும் சேர்த்துக்கொண்டால், அமெ ரிக்காவில் இன்றைய நிலையில் முழு நேர வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களின் எண்ணிக்கை 244 லட்சம் ஆகும்.

இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த உழைப்புச்சக்தியில் 15.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுத்துறையில் பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு எதுவும் உருவாக்கப் படவில்லை. மாறாக, மாநகர சமூக சேவைத்திட்டங்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறை, நூலகங்கள், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளிலிருந்து கடந்த ஓராண்டில் 2,78,000 ஊழியர்கள் வேலை பறிக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை மீண்டும் எட்டுவதற்கு இன்னும் 20 ஆண்டுகாலம் அமெரிக்கா காத்திருக்க நேரிடும் என்றும், அது வரையில் அமெரிக்க மக்கள் மிகமிகக் கடு மையான நெருக்கடியை அனுபவிக்க நேரிடும். அமெரிக்காவில் கடந்த வாரம் வரையில் சுமார் 140 லட்சம் பேர் வேலைவாய்ப்பு ஏதும் இல்லாத வர்களாக இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 7 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.உலகத்தின் கனவு தேசமாக இருந்த அமெரிக்காவின் இந்நிலையை பார்க்கும் போது வானுயர்ந்து நின்ற சுதந்திரதேவி சிலை அம்மனமாக நிற்பதாக தோன்றுகிறது.

அ.தமிழ்ச்செல்வன்
மேலும் சில அரசியல் கட்டுரைகள்

வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அ.தி.மு.க.

திருப்பதி ஏழுமலையானுக்கு லஞ்சம் கொடுத்த அமைச்சர்

Comments