திருப்பதி ஏழுமலையானுக்கு லஞ்சம் கொடுத்த அமைச்சர்


கடவுளிடம் நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக்கேட்கலாம், பரிகாரம் செய்யலாம்.நாம் செய்த பாவத்தையே பங்கு போட்டு கொடுக்கலாமா? அதையும் செய்திருக்கிறார் ஒரு அமைச்சர்.தான் ஊழல் செய்து சுருட்டிய பணத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு பங்கு கொடுத்திருக்கிறார்.

                இரண்டு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநில அமைச்சர் ஜனார்த்தன்ரெட்டி திருப்பதி கோவிலில் கடவுள் வெங்கடேஷ்வரருக்கு வைரக்கற்கள் பதித்த கிரீடம் ஒன்றை நன்கொடையாக அளித்தார். அதன் மதிப்பு 345 கோடி ரூபாய். தற்போது ஜனார்த்தன்ரெட்டி சுரங்க ஊழல் காரணமாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடவுளை கணக்குப் பண்ணி¢யது ஒர்க்அவுட் ஆகவில்லை போலும்.

 திருப்பித்தரமாட்டோம்

ஊழல் பணத்தில் வாங்கி கொடுக்கப்பட்ட அந்த கிரீடத்தை அவரிடமே திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும் என்ற கோரிக்கை பல விசுவாசமான பக்தர்களாலும், சில அரசியல் கட்சிகளாலும் விடுக்கப்பட்டது. அது சம்பந்தமாக திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி எஸ்.வி.சுப்ரமணியன் கூறியது என்ன தெரியுமா? ''பக்தர்களின் காணிக்கை எந்த சூழலிலும் திருப்பி கொடுக்கப்படமாட்டாது. வருமானவரித்துறை அதிகாரிகளோ,மற்ற அரசுத்துறை அதிகாரிகளோ வந்தால் அவற்றை பார்வையிட அனுமதிப்போம்.

 அடுக்கடுக்காய் எழும் கேள்விகள்..

345 கோடி மதிப்புள்ள தங்க கீரிடம் கொடுத்ததை இவ்வளவு நாள் வருமான வரித்துறை கண்டுகொள்ளாதது ஏன்?.
கருப்பு பணம் கைப்பற்றபட வேண்டாமா?, அரசுக்கு கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட வரிப்பணம் வசூலிக்கப்பட வேண்டாமா?, மக்கள் நலத்திட்டங்களுக்கு அவைப்பயன்படுத்த வேண்டாமா?,தடுக்கப்பட்ட வேண்டாமா?, பதில் சொல்ல வேண்டிய, நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசுகளே அவற்றிக்கு உடந்தையா?,ஜந்தாண்டுகளுக்கு குத்தகை என்பது போல் மக்களிடமிருந்து வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பின் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?, சட்டங்களை இயற்றி அவற்றை செயல்படுத்த வேண்டியவர்களே அவற்றை மீறி செயல்படுவது என்ன நியாயம்?, ஜனநாயகம் காக்கப்பட வேண்டாமா?, விடிவுதான் எப்போது?, தற்போது பதவியை இழந்து சிறையில் இருப்பதால் கடவுள் தண்டித்துவிட்டதாக திருப்தி அடையலாமா?,கொள்கை ரீதியான மாற்றங்கள் வரவேண்டாமா?,.........
மக்களே சிந்திக்கட்டும்
அ.சுந்தரம்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

மேலும் சில முக்கிய படைப்புகள்- படிக்க கிளிக் செய்யவும் 

திருப்பறங்குன்றம்- ஆன்மீகம் தாண்டிய புதிய அனுபவம்

ஆண்களின் பாலியல் குறைபாட்டுக்கு புதிய சிகிச்சை

கூடங்குளம் அனு(ணு)மதிப்போம்


Comments