அணு ஓர் பார்வை....
அணுவை குறிக்கும் "ஆட்டம்" என்ற ஆங்கிலச்சொல் பிரிக்கமுடியாது என்ற கிரேக்க மொழி சொல்லிலிருந்து வந்தது.முதலில் அணுகொள்கை வெளியிட்ட டால்டன் அணுவை பிரிக்க முடியாது என கூறினார். ஆனால் 19ம் நூற்றாண்டின் இறுதியில் உப அணுதுகள்களான எலக்ட்ரான்,புரோட்டான் மற்றும் நீயூட்ரான் ஆகியவற்றைஅறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தனர்.1905 ல் ஐன்ஸ்டின் தனது சமன்பாட்டு தத்துவம் முலம் அணுசக்தி ரகசியத்தை கூறினார்.ஆனால் அப்பொழுது அது உணரப்படவில்லை.1930க்கு பிறகு லிசே மெய்ட்னர் என்ற பெண் இயற்பியலாளர் யுரேனியத்தின் அணுமையம் பிளவுபட்டு போரியம்,கிரிப்டான் அணுக்களாக மாறுவதையும் உதிரி நீயூட்ரான் வெளிபடுவதையும் இவற்றோடு மிக பெரிய சக்தி வெளியாவதையும் கண்டுபிடித்தார்.
முதன்முதலில் அணுவெடிப்பு என்ற மிகப்பெரியஅறிவியல் கண்டுபிடிப்பை கண்டறிந்த லிசே அடுத்த கட்ட அணு திட்டங்களுக்கு தன்னை ஒத்துழைக்காமல் தவிர்த்தார்.ஆனால் என்ரிக்கோ பெர்மி என்ற இத்தாலிய நோபல் விஞ்ஞானி முதல் அணுசக்தி நிலையத்தை அமைத்தார்.இவரும் இவரது உதவியாளர்கள் இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
அணு பிளவின் வளர்ச்சியால் அணுகுண்டு செய்யப்பட்டு அதன் சோதனைகளை பல நாடுகள் செய்தன.இதுவரை 2000 அணுகுண்டு சோதனைகள் உலகளவில் நடைப்பெற்று உள்ளன.
முதல்சோதனையைஅமொ¢க்கா 1945ல் மெக்ஸிகோ பாலைவனத்தில் மேற்கொண்டது.பின்பு இரண்டாம் உலகபோரில் ஜப்பானிய நகரங்களின் மீது அணுகுண்டை வீசி அதன் தாக்கத்தை
உலகிற்கு உணர்த்தியது,இதில் இறந்தவர்கள் 2லட்சம் பேர். இதன் பின் உலக நாடுகள் அணு ஆயுதங்களுக்கு எதிராக பலகெடுபிடிகளை உருவாக்கினர்.உடன் இந்தியா உட்பட்ட அணு ஆயுத நாடுகள் ஆக்க பணிக்கு அணுவை பயன்படுத்துவதாக கூறிஅணு மின்நிலையங்களை நிறுவுவதாக நடித்து இன்றும் அணுகுண்டுகளுக்கே வித்திட்டுவருக்கின்றனர்.அணுமின்நிலையங்களின் முலம் கிடைக்கும் புளுட்டோனியம் அணுகுண்டு வெடி பொருளாகபயன்படுக்கின்றது.இருந்தபோதும் பிரான்ஸ்,பெல்ஜியம்,உக்ரைன் போன்ற நாடுகள் தங்களதுமின்சார தேவையை அணு மின்சாரம் கொண்டே பெருமளவு நிவர்த்தி செய்கின்றனர்.
இந்தியாவில் அணு வளர்ச்சி....
இந்தியாவில் முதல் அணுகரு ஆற்றல் திட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் ஹோமிபாபா ஆவார்.உலகளவில் ஐ.நா அங்கீகாரித்த 193 நாடுகளில் இந்தியா பல துறைகளில் உதாரணமாக விசாயம்,விளையாட்டு,தொழில் வளர்ச்சி ஆகியவைகளில் பின் தங்கியிருந்தாலும் மக்கள்தொகை,எய்ட்ஸ்,அணுவளர்ச்சி ஆகிய துறைகளில் முதல் 10இடங்களை பெற்று உலக நாடுகளை வியக்க வைக்கிறது.1974 ல் இந்திய முதல் அணுகுண்டு சோதனை மேற்கொண்டபொழுது உலக அளவில்அமொரிக்கா,ரஷ்யா,பிரிட்டன்,சீனா,பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே அணுகுண்டு சோதனையை செய்திருந்தன.1998 ல் இந்தியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை செய்தது.உடன் பாகிஸ்தானும்அணுகுண்டு சோதனையை செய்தது.பின் தற்போது,வடகொரியா 2006ல்அணுகுண்டு சோதனையை செய்தது.ஆக அணுகுண்டு சோதனையை செய்த நாடுகளின் எண்ணிக்கை எட்டாக உள்ளது.உலகளவில் அணுகுண்டு சோதனையில் 6வதுஇடத்தை பெற்ற இந்தியா அணு உலை 20யை பெற்று 9வ்து இடத்தில் உள்ளது.மற்றும் உலகளவில் அணுமின்சார உற்பத்தியில் இந்தியா 4800மெகாவாட் தயாரித்து 15வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் மொத்த மின்சார தேவையில் 2.8 சதவிகிதமே அணுமின்சாரம் முலம் கிடைக்கபெறுகிறது.
கூடங்குளம் அணுமின்நிலையம்.
2001 ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிற்கிடையே போடப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் துவங்கி செயல்பட்டு வருகிறது.மேலும் கடந்த 2009ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிற்கிடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தப்படி மேலும் நான்கு புதிய அணு உலைகள் கூடங்குளத்திலும், மேற்குவங்கத்தில் ஒரு அணு உலையும் ரஷ்யா அமைத்து கொடுக்கும்.ஆனால் மே.வங்கத்தில் அமைக்க இருந்த அணுமின் நிலைய திட்டத்தை தற்போதைய மே.வங்க அரசு ஏற்க மறுத்துவிட்டது.ஆனால் நமது கூடங்குளம் அணுமின்நிலையம் ரூபாய் 16 ஆயிரம் கோடி செலவு செய்து செயல்பட தயார்நிலையில் அமைந்து உள்ளது. இந்நிலையில் இதற்கு பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பும் சிலரின் ஆதரவும் உள்ளது.
ஆதரிப்போர் கருத்து.
கூடங்குளத்தின் அணு உலையானது 9மீட்டர் உயரத்தில் உள்ளது.அதாவது திடீர் சுனாமி மற்றும் கடல் கொந்தளிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது.அதாவது திருவள்ளூவர் கூறியபடி
உயர்வுஅகலம் திண்மை அருமை இந் நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்.
விளக்கம்: உயரம்,அகலம்,உறுதி,பகைவரால் அழிக்க முடியாத தன்மை ஆகிய நான்கும் பொருந்தி இருப்பதே சிறந்த அரண் ஆகும்.
இவ்வாறு சிறப்பாக அமைந்து உள்ளதாக கூறுகின்றனர்.
அணு மின் நிலையங்கள் மற்ற மின் தயாரிப்புகளை விட பாதுகாப்பு எனவும் மற்ற மின்நிலையைங்களில் தான் அதிக பாதிப்பு என ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறுகின்றனர்.இந்தியாவில் இதுவரை அணு மின் நிலைய விபத்துகளால் உயிர்சேதமோ, கதிர்விச்சு பிரச்சனைகளோ ஏற்படவில்லை என்கின்றனர். தற்பொழுது அணுஉலைகளில் முன்பே நிரப்பப்பட்டுள்ள யுரேனியத்தை பயன்படுத்தியே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனவும்,அதை வெளியே எடுத்து ரஷ்யாவிற்கோ,அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது என்கின்றனர்.உற்பத்தி பணிகள் துவங்கும் நிலையில் தொழில் நுட்ப ரிதியாக அதை நிறுத்தமுடியாது, .மேலும் தற்போதைய,எதிர்கால மின்சாரத்தேவை அதிகரித்து வருகிறது. மின்சாரம் தேவையை பூர்த்தி செய்ய வேறு வழி கிடைக்கும் வரை அணுமின்சாரத்தை விட்டால் வேறு வழியில்லை எனக்கூறுகின்றனர்
எதிர்போர் கருத்து.
அணு உலை என்பதே உலகிற்கு தேவையற்றது.இதன் முலம் நம்மை நாமே அழித்து கொள்கின்றோம். உலகளவில் பல அணு விபத்துக்கள் நடைப் பெற்றுள்ளன.உதாரணமாக ரஷ்யாவில்
செர்நோபில் அணுகதிர் வீச்சினால் பலர் பலியானார்கள்.பலர் கேன்சரால் பாதிக்கப்பட்டனர்.அணுகதிர் பாதிப்பினால் உயிர் செல்களின் மூலக்கூறுகளின் அமைப்பிலும்,செயல்பாட்டிலும்
ஒரு மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் நோயை உருவாக்குகின்றது.கடந்த மார்ச் 11ம்தேதி ஜப்பானில் உள்ள புகுசிமாவில்
( புகுசிமா என்றால் ஜப்பானிய மொழியில் அதிசிய தீவு என அர்த்தமாம்)ஏற்பட்ட சுனாமியால் அணுஉலை கொதிகலன் வெடித்து சிலர் பலியானதோடு அப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டனர்.ஜப்பானிய அரசாலேயே இன்னும் அங்கு கதிர்வீச்சின் தன்மையை குறைக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே திருவள்ளூவர் கூறியபடி
வருமுன்னர் காவா தான் வாழ்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
விளக்கம்:துன்பம் வருவதற்கு முன்னால் காத்துக்கொள்ளாதவன் வாழ்கை,தீயின் முன் வைக்கப்பட்ட துரும்பு போல் அழிந்துபோகும்.
எனக்கூறி பலத்த எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
பிரதமர் உறுதி...
கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கு எந்தவித பணிகளும் அங்கு நடைபெறாது என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
மாறாக அணு உலையை மூடினால் மின் பற்றாக்குறை ஏற்படும். இவ்விவகாரத்தில் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களை தவிர அரசும் மக்களும் ஒரே பக்கத்தில் உள்ளனர். இந்தியாவில் தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இது மென்மேலும் வளர்ச்சி பாதையில் செல்வதற்கு அதிக மின்சக்தி தேவை. தற்போது கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 925 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மின் நிலைய செயற்பாடுகளை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். மாறாக இது தடைப்படுமானால், தமிழ்நாடு மாநிலத்தின் வளர்ச்சி பணிகளும், தொழில்துறை திட்டங்களும் பாதிக்கப்படும் அபாயம் தொன்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன.....
எனவே ரூபாய் 16 ஆயிரம் கோடி செலவு செய்து செயல்பட தயார்நிலையில் உள்ள கூடங்குளத்தின் அணுஉலையை மட்டும் செயல்படசெய்து இனி துவங்க உள்ள திட்டங்களை உடன் நிறுத்தி அப்பகுதி கிராம மக்களுக்கு ஏற்படக்கூடிய தொழில் பாதிப்புகளுக்கு இழப்பிடு வழங்கியும், கிராம மக்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தும்,பகுதி மக்களின் நம்பிக்கை பெற்று செயல்படுவது தான் அரசின் தலையாய கடமை.திருவள்ளூவர் கூறியபடி
தன்உயிர் நீப்பினும் செய்யற்க,தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை.
விளக்கம்: தன்னுடைய உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தாலும் அதைத் தடுப்பதற்காகப் பிற உயிர்களைக் கொல்லும் கொடிய செயலைச் செய்யக் கூடாது.
இதற்கு பின்னும் அணுஉலையின் முலம் புளுட்டோனியம் தயார் செய்து அணுகுண்டு தயார் செய்ய நினைப்பது அரசு தீவிரவாத தன்மையில் இறங்குவதாகவே அர்த்தம்.காந்தி பிறந்த மண்ணிற்கு இது அழகல்ல.
வ.ஷாஜஹான்,திருமங்கலம்
விமர்சனம் எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments
இவ்வளவு விரிவாக, தகவல்கள் திரட்டி, அதுவும் சொல்ல வரும் கருத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு இடத்திலும் பிரமாதமான ஒரு திருக்குறளையும் பயன்படுத்தி... அடடா!
கூடங்குளம் பிரச்னையில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் கூட, உங்கள் கட்டுரையின் மிக நெடிய உழைப்பிற்காகவாவது, அதை ‘அணு’மதிக்கலாமோ என எண்ண வைத்து விடுகிறீர்கள். ரீல் அல்ல... ரியல்.
எழுத்து என்பது வரம். அது நிறையவே உங்களுக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. வீணாக்கிய காலத்துக்கும் சேர்த்து விளையாடுங்கள். களம் மிகவும் பரந்திருக்கிறது.
வாழ்த்துக்களுடன்...
திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்.
From the introduction to end.
Views of PM, People and you is appreciable... Keep it up..
...Post Many more article about social view. ..
Regards
Manickaraj
Thirumangalam.
அணு உலை உயிருக்கு உலை தான்!