சீதை - லட்சுமணன் கோட்டை தாண்டியது சரியா? தவறா?தந்தை தசரதனின் கட்டளையை தலைமேற்கொண்டு 14 ஆண்டுகள் வனவாசத்தை  கழிக்கும் பொருட்டு ராமன்,லட்சுமணன் மற்றும் சீதை  ஆகியோர் காட்டில் ஒரு குடில் அமைத்து தங்கியுள்ளனர்.
சூர்ப்பனகையால் தூண்டப்பட்ட ராவணன் சீதையை இலங்கைக்கு தூக்கிச்செல்ல மாரீசனுடன் காட்டுக்கு வருகிறான்.மாரீசன் அழகிய மான் வேடமிட்டு குடிலுக்கு முன் நிற்கிறான். மானை பிடித்துத் தருமாறு சீதை வேண்ட, லட்சுமணனை காவலுக்கு வைத்துவிட்டு மானைப் பின் தொடருகிறான் ராமன், அது ஒரு மாயமான் என தெரிந்து அதன் மீது அம்பு ஏய்கிறான் ராமன், இறக்கும் தருவாயில் ''ராமா காப்பாற்று'' எனக் குரல் கேட்ட சீதை லட்சுமணனை காட்டுக்குள் செல்ல வேண்டுகிறாள். முதலில் மறுத்த லட்சுமணன் பின்பு குடிலின் முன்பு ஒரு கோடு போட்டு,எந்த நிலையிலும் சீதை அதைத் தாண்டக்கூடாதெனச் சொல்லிவிட்டு ராமனை தேடிச்செல்கிறான் லட்சுமணன். இந்நேரத்தில் ராவணன் முனிவர் வேடத்தில் குடிலுக்குள் செல்ல எத்தனிக்கிறான். லட்சுமணன் போட்ட கோட்டை தாண்டிச் செல்ல அவனால் முடியவில்லை. தனது நயவஞ்சகப் பேச்சால் சீதையை லட்சுமணன் கோட்டைத் தாண்டச்செய்து அவளை இலங்கைக்குக் கொண்டு செல்கிறான். எனவே சீதை லட்சுமணன் கோட்டை தாண்டியதால் தான் துயரங்கள் ஏற்பட்டன என்பது ராமாயணக் கதையின் ஒரு பகுதி.
       ஒரு ஜனநாயகநாட்டில் சட்டமன்றம்,நீதிமன்றம் நிர்வாக மன்றம் என்ற மூன்று அமைப்புகள் உள்ளன. இவற்றின் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன,இந்த ஒவ்வொரு துறையும் தங்களுக்கு விதிகக்ப்பட்ட கோட்டைத்தாண்டி மற்ற துறைகளில் மூக்கை நுழைத்தால் ஜனநாயகம் சரிவர செயல்படமுடியாது என்பது நம்பிக்கை.
                         2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்து வருகிறது. ராசா,கனிமொழி,தயாநிதிமாறன்,அடுத்து சிதம்பரம் என தொடரும் இந்த பட்டியலில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கூட விசாரிக்கப்படலாம் என்ற நிலையில் வழக்கு செல்கிறது. இந்த வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிபதிகள் தங்கள் வரம்பாகிய லட்சுமணன் கோட்டைத் தாண்டி செல்லக்கூடாது என வாதாடினார்.

                  இதற்கு பதிலலித்து பேசிய நீதியரசர்,'' லட்சுமணன் போட்ட கோட்டை சீதை தாண்டி சென்றதால் தான் தேவர்களாலேயே அழிக்க முடியாத மிகிப்பெரும் தீய சக்தியாகிய ராவணன் அழிக்கப்பட்டான். மேலும் ராம அவதாரத்தின் நோக்கம் நிறேவேறியது. எனவே லட்சுமணன் கோடு தாண்டக்கூடாத அளவுக்கு புனிதமானதல்ல''.
     மேற்கண்ட பதில் நீதியரசரின் சமயோசித அறிவைக் காட்டுகிறது. இதன் மூலம் நிரந்தரமான புனிதம் ஒன்றுமில்லை, காலமாற்றத்திற்கு கேற்ப புனிதத்தன்மையும் மாறும் என்று மறைமுகமாக நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே சீதை லட்சுமணன் கோட்டை தாண்டியது தவறல்ல.
                                                                         து.அழகர்சாமி


விமர்சனம் எழுத 
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்