உங்கள் குடும்பத்திற்கு ஒரு நாள் வாழ்க்கைச் செலவுக்கு ரூ.25 போதுமா?


வறுமைக்கோட்டை தீர் மானிப்பதற்கான உங்கள் வரை யறை என்ன? அதாவது, மாத வருமானம் எவ்வளவு வரை உள்ளவர்களை மானிய விலை யில் உணவு தானியங்களைப் பெறும் தகுதி படைத்தவர் களாக நீங்கள் கருதுகிறீர்கள் என்ற கேள்வியை மத்திய திட்டக் குழுவிடம் உச்சநீதி மன்றம் எழுப்பியது. இதற்கு நேரடியாக பதிலளிக்காத திட் டக்குழுவின் மேதாவிகள், கிரா மத்தில் வாழ்பவராக இருந்தால் நபர் அடிப்படையில் மாத வரு மானம் ரூ.781-ம், நகரத்தில் வசிப்பவராக இருந்தால் ரூ. 965ம் பெறுபவராக இருந்தால் போதுமானது என்று கூறியுள் ளனர். இதை வைத்துக் கொண்டு உணவு, கல்வி, மருத்துவச் செலவு ஆகியவற்றை சமா ளித்துவிடலாம் என்று அவர் கள் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.


இதன்பொருள் யாதெனில், நபர் அடிப்படையில் ரூ.25 தின வருமானம் பெறும் கிராமவாசிக் கும், ரூ.32 தின வருமானம் பெறும் நகர வாசிக்கும் ரேசன் கடையில் மலிவு விலையில் அரிசி, கோதுமை போன்ற வற்றை வழங்க வேண்டிய தில்லை. அவர்கள் தங்களின் வருவாயைக் கொண்டே மூன்று வேளை உணவு உண்டு, உடல் நலத்துடன் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகளையும் பள்ளிக்கும் அனுப்புவார்கள் என்பதாகும். நால்வர் அடங்கிய ஒரு குடும் பம் கிராமத்தில் வசித்து வந்து, ரூ.3,024ம், நகரத்தில் இருந்து கொண்டு ரூ.3,860 செலவு செய்யும் நிலையிலிருந்தால் அவர்கள் வறுமைக்கோட் டுக்கு மேலே இருக்கிறார்கள் என்பது பொருள். இந்த மேதா விகள் பைகளை எடுத்துக் கொண்டு அரிசி, பருப்பு, எண் ணெய், காய்கறி போன்றவற்றை வாங்குவதற்கு கடைவீதிக்கு ஒரு நாளாவது சென்றிருந் தால், இப்படிப்பட்ட ஒரு கேலிக் கூத்தான வாக்குமூலத்தை அளிப்பதற்கு துணிந்திருப்பார் களா என்பதே எழுகின்ற கேள்வி? பிரான்ஸ் நாட்டின் அரசி ஒருவ ரிடம் மக்கள் ரொட்டி கிடைக் காமல் திண்டாடுகிறார்கள் என்று கூறப்பட்ட போது, ரொட்டி கிடைக்கவில்லை என்றால் கேக் சாப்பிடலாமே என்று கூறியது நினைவுக்கு வரு கிறது. ஒரு சிறுநகரத்திலுள்ள ஒரு சாதாரண சிற்றுண்டி விடுதிக்குச் சென்று 2 இட்லி, ஒரு தோசை, காபி சாப்பிட் டாலே ரூ.40க்கு மேல் பில் வருகிறது. ஒரு குடும்பத் தலை வன், அவனது மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகி யோரின் உணவு, உடைகளுக் கான செலவு, படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு போன்றவற்றைக்கணக்கிட் டால் மாத செலவு நிச்சயமாக அரசின் வரம்பைவிட இரண்டு மடங்காவது கூடுதலாக இருக் கும். தில்லி நகருக்காக சட்டப் படி நிர்ணயம் செய்யப்பட் டுள்ள குறைந்தபட்சக்கூலி ரூ.240. அதாவது, மாதத்திற்கு ரூ.7,200. இதிலிருந்தே அரசு வறுமைக்கோட்டுக்கான வரம்பாக நிர்ணயித்துள்ள தொகை எவ்வளவு குறைவா னது என்பதை புரிந்து கொள் ளலாம்.
ஏழை மக்களை கவ னத்தில் கொண்டே நாங்கள் கொள்கைகளை வகுக்கிறோம் என்று கூறி வரும் மத்திய அரசு, ஏழைகளின்பால் காட் டும் அக்கறையின் லட்சணம் இதுதான். மானிய விலையில் உணவு தானியங்களை பெறும் தகுதி படைத்தோரின் எண் ணிக்கையை செயற்கையான முறையில் குறைப்பதற்கான முயற்சியே இது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்த வருமான நிலைகளு டன் தொழில் நிறுவனத் தலைவர்கள் சிலரது ஆண்டு வரு மானத்தையும் ஒப்பிட்டுப் பார்த் தால், வசதி படைத்தோருக்கும், வறுமைப்பட்டோருக்கும் இடையே உள்ள மலைக்கும், மடுவுக்குமிடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜின்டால் நிறுவனத்தின் தலை வருமான நவீன் ஜின்டாலின் ஆண்டு வருமானம் ரூ.69.76 கோடி. அதாவது நாளொன் றுக்கு ரூ.18 லட்சத்து 90 ஆயிரம்.

சன் தொலைக்காட்சி குழும நிறுவனர் கலாநிதிமாறனின் ஆண்டு வருமானம் 37.08 கோடி. அதாவது நாளொன் றுக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம்.

அவரது மனைவி காவேரி மாறனின் ஆண்டு வருமானம் ரூ.37.08கோடி. நாளொன்றுக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம்.

ஒளிர்கின்ற இந்தியாவின் குடிமக்களுக்கு பல லட்சம் கோடி என்ற அளவுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கும் ஆட்சியாளர்கள், வறுமை இருளில் இருப்போருக்கான உணவுப் பாதுகாப்புச் செலவை சில ஆயிரம் கோடிகளாக சுருக்குவதற்காக எவ்வளவு ஈனத்தனமான முறையில் செயல்படுகிறார்கள் பார்த்தீர்களா?

-கி.இலக்குவன்
நன்றி- தீக்கதிர்

விமர்சனம் எழுத 
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்