மதுரையில் சுத்தி பார்க்க என்ன இருக்கு...?

 


 மதுரையின் ஒவ்வொரு தெருவும் வரலாற்று முக்கியதுவம் கொண்டது.மதுரையின் வரலாற்றை பல எழுத்தாளர்கள் எழுதி குவித்தாலும் தீர்ந்து போகத வரலாறு கொண்ட நகரம். இந்த நூல் மதுரையின் வரலாற்றை அல்ல மதுரையை முழுமையாக அறிந்து கொள்ள உதவும் சுற்றுலா வழிகாட்டி.மதுரை காரர்களுக்கே தெரியாத பல புதிய இடங்களை இந்த நூல் அறிமுகம் செய்கிறது.பொதுவாக வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு மீனாட்சி அம்மன் கோயில்,திருமலை நாயக்கர் மகால்,காந்தி  அருங்காட்சியகம், திருப்பரங்குன்றம் முருகன்கோயில், இப்போது கூடுதலாக கீழடி செல்கிறார்கள். ஆனால் மதுரை  வரலாறு நிறைந்த நகரம்  அந்த வரலாற்றை வெளிபடுத்துகிற பல தொல்லியல் இடங்கள் பலரும் அறியாதது.. அவற்றை பார்க்க இந்த நூல் உதவியாக இருக்கும்.                                     மேற்கண்ட நூலை அமேசானில் வாங்க கீழே உள்ள                                                           இணைப்பை கிளிக் செய்க

                                     மதுரையில் சுத்திபார்க்க...


இந்நூலில் வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்பிடங்கள், .கோவில்களும் பழமையான கட்டிடங்களும் .கோவில்காடுகள் ,சமணர்கள் வாழ்ந்த இடங்கள்,பறவை காணுதலுக்கான இடங்கள் உள்ளிட்ட 12 பிரதான தலைப்புகளின் கீழ் பல தலைப்புகளில் அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதே போல வெளியூர்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக  பார்க்கவேண்டிய " 12 சிறந்த மதுரை சுற்றுலா இடங்கள்"பட்டியலும் அவற்றிக்கான பயணத்திட்டமும் கொடுக்கப்ட்டுள்ளன. அதேபோல மதுரை வருவதற்கான போக்குவரத்துக்கான வழிகாட்டுதலும் உள்ளன.

                      இறுதியாக மதுரை பற்றியும் மதுரை மக்களை பற்றியும் திருச்சிக்காரரின் பதிவு  வெளியிடப்பட்டுள்ளது.

                      இந்நூலில் உள்ள பெரும்பாலன இடங்களுக்கு சென்றுள்ளேன். அந்த நேரடி அனுபத்தை கொடுத்த மதுரை பசுமை நடைகுழுவினருக்கு இந்த நூலின் மூலமாக நன்றி தெரிவித்துகொள்ளவிரும்புகிறேன். இத்தொகுப்பில் பறவைகாணுதலுக்கான இடங்கள் கொடுக்கபட்டிருந்தாலும் சிவரகோட்டை, அரிட்டபட்டி தவிர மற்ற இடங்கள் நகரவிரிவாக்கம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருப்பது தான் வேதனை யான தகவல்..


Comments