ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது அது வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கமல் பேசும் போது ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்திருக்கிறார்கள். தமிழ், நாம் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க வந்திருக்கின்றனர். ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்த்த போது ஏற்பட்ட மலைப்பு கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும். இந்தப் படத்தின் தொடக்கத்தில் பொற்காலம் பற்றி என் குரலில் ஒரு வசனம் வரும். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்ட உணர்வு எனக்கு ஏற்படுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக பெருமிதம் கொள்ள வைக்கிறது.என்றார்.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதும் தொடர்ந்து நடைபெறுவதாக இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.இது குறித்து நடிகர் கமலிடம் கேட்கப்பட்டது.
இந்த செய்தியோடுதொடர்புடைய தகவல்கள்
இணைப்பை கிளிக்செய்து படிக்கவும்
2.பொன்னியின்செல்வன் படம் பார்க்கும் முன்
3.பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வால்நட்சத்திரத்தின்பெயர் என்ன
இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. வைணவம் என இருந்தது. சைவம் என இருந்தது. சமணம் எனஇருந்ததே தவிர அது வெள்ளைக்காரங்க நமக்கு வைத்த பெயர். நம்மை என்ன சொல்வது என தெரியாமல் அவர்கள் வைத்த பெயர்.. தூத்துக்குடியை டூட்டிகொரின் என சொன்ன மாதிரி. வெவ்வேறு மதங்கள் இருந்தன. கி.பி.8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மதம்னு ஸ்தாபிதம் பண்றார். இதெல்லாம் சரித்திரம். அந்த சரித்திரத்தைப் பற்றி இங்க சொல்லக் கூடாது. இந்த படம் சரித்திரப் புனைவுபற்றியது.. இங்கு சரித்திரத்தை திணிக்க வேண்டாம். மொழி பிரச்சனையை இங்க கொண்டுவரவும் வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Comments