பொன்னியின் செல்வனில் தோன்றும் வால்நட்சத்திரத்தின் பெயர் என்ன?


பொன்னியின் செல்வன் படத்தில் துவக்கத்திலிருந்தே ஒரு வால் நட்சத்திரம் தோன்றும். அப்படி தோன்றினால் அது அரசு குலத்திற்கு ஆகாது என்பது  நம்பிக்கை. அந்த நம்பிக்கை தற்போதும் உள்ளது தான். படம் முழுவதும் தோன்றும் அந்த வால் நட்சத்திரம் பகலிலும் தெரியும் அளவுக்கு பெரிதாக காட்டப்படும். பொன்னியின் செல்வனில் நிகழும் சோழர்களின் வரலாறு கிட்டதட்ட 1000 ஆண்டுகள் பழமையானது . அப்போது தோன்றிய வால்நட்சத்திரத்தை பற்றி பெயர் எதுமில்லை.வால்நட்சத்திரத்தை "தூமகேது" என நம் தமிழ் இலங்கியங்கள் அழைக்கின்றன.


 வால்நட்சத்திரங்கள் சூரியமண்டலத்தின்  உள்ள "ஊர்ட்மேகம்" என்ற பகுதியிலிருந்து  வருகிறது. அதாவது சூரியனை சுற்றுகிற தனது பாதையில் நம் பூமியை கடந்து செல்லும்போது நம்கண்களுக்கு தெரிகிறது. பல வால்நட்சத்திரங்கள் அவ்வப்போது  வந்து செல்வது வழக்கம் தான். ஆனால் சில பெரிய புகழ்பெற்ற வால்நட்சத்திரங்கள் உண்டு.அதில் ஹோலி வால்நட்சத்திரம் மிக முக்கியமானது.


=========


         படத்தில் வந்தியத்தேவனும் பூங்குழலியும் பேசிக்கொள்வது...

"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே! அதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று பூங்குழலி கேட்டாள்.

"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்!" என்றான் வந்தியத்தேவன்.   

"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும் என்று சொல்கிறார்களே!"    

"அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்."    

"நீ என்ன சொல்லுகிறாய்?"    

"நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்." சற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.

============



 மற்றொரு இடத்தில் வந்தியத்தேவனும் சோதிடரும் பேசிக்கொள்வது.


வந்தியத்தேவன்  , "சோதிடரே! வால் நட்சத்திரம் எப்படி இருக்கிறது?" என்று வினவினான். 

"மிகமிக நீளமாகப் பின்னிரவு நேரங்களில் தெரிகிறது. இனிமேல் நீளம் குறைய வேண்டியதுதான். தூமகேதுவினால் விபத்து ஏதேனும் ஏற்படுவதாயிருந்தால், அதிசீக்கிரத்தில் அது ஏற்பட்டாக வேண்டும். கடவுளே! இராஜகுலத்தில் யாருக்கு என்ன நேரிடுமோ என்னமோ!" என்றார் சோதிடர்.   

 வந்தியத்தேவனுடைய உள்ளம் அதிவேகமாக அங்குமிங்கும் பாய்ந்தது. தஞ்சையில் பாரிச வாயு பீடித்துப் படுத்த படுக்கையாயிருக்கும் சுந்தர சோழரும், நாகைப்பட்டினத்தில் நடுக்குசுரம் வந்து கிடக்கும் பொன்னியின் செல்வரும், கடம்பூர் மாளிகையில் நந்தினியைச் சந்திக்கப் போகும் ஆதித்த கரிகாலரும், இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டு மக்களின் கோபத்துக்குப் பாத்திரமாகியிருக்கும் மதுராந்தகரும், கையில் கொலை வாளை வைத்துக்கொண்டு கொஞ்சும் நந்தினியும் அவனுடைய உள்ளத்தில் வரிசையாகப் பவனி வந்தார்கள்.

இதுபோல பொன்னியின் செல்வன் நாவலிலுள்ள ஐந்து பாகத்திலும் வால் நட்சத்திரம் குறித்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.

  அமேசானில் வாங்க படத்தைகிளிக் செய்க

=========


ஹாலி வால் நட்சத்திரம்

ஹாலி வால் நட்சத்திரம் ஒவ்வொரு 75 அல்லது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பூமிக்கு அருகில் வந்துசெல்கிறது. பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்கக் கூடியனவற்றில் குறைந்த கால இடைவெளியில் பூமிக்கு அருகில் வந்துசெல்லும் ஒரே வால் நட்சத்திரம் ஹாலி வால் நட்சத்திரம்தான்.

வால் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள், கி.மு. காலத்திலிருந்தே கிடைக்கின்றன. சீனர்கள், பாபிலோனியர்கள் என்று பலரும் இதைப் பற்றி பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் எட்மண்ட் ஹாலி.


 அதனால்தான், அதன் பெயர், ‘ஹாலியின் வால் நட்சத்திரம்’!1910க்கு பிறகு 1986 பிப்ரவரி 9: வந்து சென்றது ஹாலி வால் நட்சத்திரம் பூமியில் தெரிந்தது.மீண்டும் 2061 ல் பார்க்கலாம்.

       இந்த ஹாலி வால் நட்சத்திரம் தான் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்தில் தோன்றியதாக இருக்கலாம்.

Comments