நம்மால நம்வே முடியாத ஆச்சர்யம் உங்க சுமார்டபோனை கையில எடுக்கமலேயே வீடியோ எடுக்கலாம்,போட்டோ எடுக்கலாம் பாட்டுக்கேட்கலாம்அவ்வளவு ஏன்  போனை கையில எடுக்கமலேயே  உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லாம்.

              அது எப்படி சாத்தியம்  கண்களுக்கு போடும் கூலிங்கிளாஸ் கண்ணாடியிலேயே எல்லாம் வந்துவிட்டது. கூலிங் கிளாஸ் கண்ணாடிகளுக்கு  உலக புகழ்பெற்ற ரேபான் நிறுவனமும் ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள‘ரே-பான் ஸ்டோரீஸ்’ என்கிற ஸ்மார்ட் கண்ணாடி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

 ஃபேஸ்புக்கின் இந்த ஸ்மார்ட் கண்ணாடிக்கு நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பு இருந்தது. இந்தக் கண்ணாடி அறிமுகமாகிவிட்ட நிலையில், அதன் சிறப்புகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க வைக்கின்றன. இந்த ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்திருப்பவர், அடிக்கடி ஸ்மார்ட் போனைக் கையில் எடுக்க வேண்டிய வேலையே இருக்காது. இந்தக் கண்ணாடியைக் கொண்டு ஒளிப்படங்களை எடுக்கலாம், வீடியோக்களைப் பதிவுசெய்யலாம். இசையைக் கேட்டு மகிழலாம். இவ்வளவு ஏன், வரும் அழைப்புகளுக்குப் பதில்கூடச் சொல்லலாம்.  பாட்டுக்கேட்கலாம்...ஒரு ஸ்மார்ட் போன் செய்யும் எல்லா வேலைகளையும் இந்தக் கண்ணாடியும் செய்கிறது.


                                     இந்த கண்ணாடி குறித்து முழுமையான தகவல் தெரிந்து கொள்ள இந்த காணொலியை பாருங்கள்



             கண்ணாடியின் ஃபிரேமில் இரண்டு விதமான ஒருங்கிணைந்த 5 எம்.பி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை ஒளிப்படங்கள், வீடியோக்களை எடுக்க உதவுகின்றன. கேமராவை இயக்க, கண்ணாடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும்.  கேமரா இயங்கத் தொடங்கிவிடும்.

             இன்னொரு அச்சர்யம் உங்கள் குரலில்‘ஹே ஃபேஸ்புக்’ என்று  என்று சொன்னாலே போதும் ஒளிப்படங்களையும் வீடியோக்களையும் தானாகக் கண்ணாடி சுட்டுத் தள்ளிவிடும்.  எடுத்த படம் வீடியோக்களை ஃபேஸ்புகில் எடிட்பண்ணி  பகிலாம்,போனில் சேமிக்கலாம்

          ஸ்மார்ட் கண்ணாடியின் விலை எவ்வளவு? 299 டாலர்கள். நம்மூர் மதிப்பில் சுமார் ரூ. 22 ஆயிரம். கண்ணாடி பல வண்ணங்கள், மாடல்களில் வருவதால் விலையில் ஏற்ற இறக்கமும் உண்டு. தற்போது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. விரைவில் இந்தியாவிலும் கிடைக்குமாம் கொஞ்சம் காத்திருப்போம்




Comments