இந்திய துணைக்கண்டத்தில் கிழக்கு பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றி மியான்மார் என்ற பர்மா.சிங்கப்பூர்,இலங்கை,மலேசியாவை பேலவே இங்கும் 10 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். குறிப்பாக, யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு , தமிழர் திருநாளான தை திருநாளில் அங்கு ஜல்லிகட்டு நடைபெறுகிறது
தற்போது நிகழ்ந்திருக்கும் திடீர் ராணுவ ஆட்சியில் அங்குள்ள மற்ற சமூத்தினரை போலவே தமிழர்களும் பரிதவித்து போயிருக்கிறார்கள்.
Comments